வயநாடு: வயநாடு பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவால் பள்ளி குழந்தைகள் 27 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகி உள்ள நிலையில், மீட்புப் பணியில் இராணுவத்துடன் இஸ்ரோவும் கைகோர்த்துள்ளது. தெர்மல் ஸ்கேனர் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி தேடும் பணி தீவிர படுத்தப்பட்டுள்ளது.
வயநாடு மாவட்டம் முண்டகை சூரல் மலைப்பகுதியில் கடந்த 30ஆம் தேதி பயங்கரமான நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் அப்பகுதியில் வசித்து வந்த 400 குடும்பங்கள் மண்ணில் புதைந்தது. இந்த நிலச்சரிவில் 250க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாக கூறப்பட்டது. இதனை தொடர்ந்து பலரின் நிலைமை கவலைக்கிடமாக இருந்து வந்தது. இருப்பினும் மீட்பு படையினர் மீட்பு பணியினை துரிதப்படுத்தி தீவிரமாக செயல்படுத்தி வந்தனர். இதுவரை 3,500 பேர் மீட்கப்பட்டு நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
வயநாடு நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை தற்போது 316-ஆக உயர்ந்துள்ளது. இதனால் முண்டக்கை சூரல் மலை, மேப்பாடி ஆகிய இடங்களில் மீட்ப பணிகள் தீவிர படுத்தப்பட்டுள்ளன. அதேசமயம் இந்த நிலச்சரிவில் 27 பள்ளி குழந்தைகள் உயிரிழந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் இப்பகுதிகளில் நிலச்சரிவில் சிக்கி காணாமல் போன 23 மாணவர்களை தேடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் வயநாடு பகுதியில் மீட்பு பணியில் ஈடுபட்டு வரும் ராணுவத்துடன் இஸ்ரோவும் கைகோர்த்துள்ளது. அதிநவீன தெர்மல் ஸ்கேனர் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி இஸ்ரோ மீட்பு ராணுவத்துடன் இணைந்து மீட்புப் பணிகளை மேற்கொண்டு வருகிறது.
இதுதவிர மண்சரிவு ஏற்பட்ட அப்பகுதிகளை RISAT SAT தொழில்நுட்பத்தை பயன்படுத்தி புகைப்படம் எடுத்து இஸ்ரோ முழு தகவல்களையும் வழங்கி உள்ளது. அதன்படி கடந்த முறை ஏற்பட்ட மண் சரிவை விட இது பன்மடங்கு பெரியதான மண் சரிவு என்று தெரிய வந்துள்ளது. மண்சரிவு ஆரம்பப் புள்ளியிலிருந்து 8 கிமீ பயணித்து முடிந்திருக்கிறது என தகவல் தெரிவித்துள்ளது.
தெர்மல் ஸ்கேனர் தொழில்நுட்பம்:
நிலச்சரிவில் சிக்கியவர்களை மீட்க ஏற்கனவே மோப்ப நாய்கள் பயன்படுத்தப்பட்டு வரும் நிலையில் மண் சரிவில் சிக்கியவர்களை மீட்க தெர்மல் ஸ்கேனர் பயன்படுத்தி தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த கருவி மூலம் மூன்று கிலோமீட்டர் ஆழம் வரை மண்ணில் புதைந்திருக்கும் உடல்களை கண்டறிய முடியும். மேலும் சேறு சகதியில் சிக்கி இருக்கும் உடல்களையும் இந்த தெர்மல் ஸ்கேனர் கண்டறிய உதவும் எனவும் இஸ்ரோ தெரிவித்துள்ளது.
ஏ கிளாஸ் ஸ்கேனர்:
இதனைத் தொடர்ந்து நாளை முதல் ஏ கிளாஸ் தொழில்நுட்பக் கருவி பயன்படுத்தப்பட உள்ளது. இந்த ஏ கிளாஸ் ஸ்கேனர் மூலம் 12 கிலோமீட்டர் தூரம் அடியில் இருக்கும் உடல்களையும் கண்டறிய முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Orange alert: தமிழ்நாட்டில் ஒரிரு இடங்களில் 26 மற்றும் 27 தேதிகளில் மிக கன மழை எச்சரிக்கை!
ஜாமின் கிடைத்ததைத் தொடர்ந்து.. புழல் சிறையிலிருந்து வெளியே வந்தார் நடிகை கஸ்தூரி
அமெரிக்கா கோர்ட் பிடிவாரண்ட்.. அதானியை உடனடியாக கைது செய்ய வேண்டும்.. ராகுல்காந்தி ஆவேசம்
விஜய் பங்கேற்கும்.. அம்பேத்கர் புத்தக வெளியீட்டு விழாவில் கலந்து கொள்ள மாட்டார் திருமாவளவன்!
தனுஷ் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் விவாகரத்து வழக்கில் இறுதிக் கட்டம்.. 27ம் தேதி தீர்ப்பு வழங்கப்படுகிறது!
கடுப்பா இருக்கா பாஸ்.. வாங்க கடிக்கிறோம்.. கலகலன்னு சிரிங்க.. மைன்ட் free ஆகி.. face பிரெஷ்ஷாய்ரும்!
ஆசிரியை ரமணியின் குடும்பத்திற்கு ரூ. 5 லட்சம் உதவி.. தாயாரிடம் வழங்கினார் அமைச்சர் கோவி.செழியன்
Chennai Lakes.. நீர் இருப்பில் மாற்றம் இல்லை.. புதிய காற்றழுத்தத் தாழ்வுக்காக ஏரிகள் வெயிட்டிங்!
Rain forecast: 5 மாவட்டங்களில் இன்று மிக கன மழைக்கு வாய்ப்பு.. 7 மாவட்டங்களில் கன மழை!
{{comments.comment}}