திருவனந்தபுரம்: வயநாடு நிலச்சரிவில் சிக்கி காளிதாஸ், கல்யாணகுமார், ஷிஹாப் ஆகிய 3 பேர் உயிரிழந்த நிலையில், மேலும் 6 பேர் இறந்துள்ளனர். இவர்கள் அனைவரும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள்.
கேரள மாநிலம்முண்டக்கை என்ற இடத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி இதுவரை 168 பலியாகியுள்ளனர். மேலும் இந்த நிலச்சரிவில் சிக்கிய 216 பேரை காணவில்லை என கேரள அரசு தெரிவித்துள்ளது. 2வது நாளாக மீட்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. பலி எண்ணிக்கை கூடும் என அஞ்சப்படுகிறது.
இந்நிலையில், இந்த சம்பவத்தில் தமிழகத்தை சேர்ந்த 9 பேர் இதுவரை உயிரற்ற நிலையில் மீட்கப்பட்டுள்ளனர். நீலகிரி மாவட்டம், கூடலூரைச் சேர்ந்த 34 வயதான காளிதாஸ், கட்டுமான பணிக்காக கேரள மாநிலம் சென்றிருந்த காளிதாஸ் இந்த நிலச்சரிவில் சிக்கி உயிர் இழந்துள்ளார். இதேபோல நிலச்சரிவில் சிக்கி நீலகிரி மாவட்டம் பந்தலூர் சேரங்கோடு பகுதியைச் சேர்ந்த கல்யாண் குமார், ஷிஹாப் ஆகியோரும் இறந்துள்ளனர்.
அதேபோல முண்டக்கை மேப்பாடி பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி ஒரே குடும்பத்தை தமிழகத்தைச் சேர்ந்த 6 பேர் உயிரிழந்துள்ளனர். கல்யாணகுமார் என்பவரின் குடும்பத்தில் 6 பேர் பலியானதற்கு தமிழக முதல்வர் முக ஸ்டாலின் ஆறுதல் தெரிவித்து நிதியுதவி அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட இரங்கல் செய்தியில், " கேரள மாநிலம் வயநாடு மாவட்டம் சூரல்மலையில் பணியாற்றி வந்த நீலகிரி மாவட்டம் பந்தலூர் வட்டம் சேரங்கோடு ஒரு கிராமம் கொல்லிஅட்டி, அம்பேத்கர் நகரைச் சேர்ந்த முருகையா என்பவரது மகன் கல்யாணகுமார் வயது 52.
அதிகாலை ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தார் என்ற துயரமான செய்தியை கேட்டு மிகுந்த வருத்தமும் வேதனையும் அடைந்தேன். இச்சம்பவத்தில் உயிர் இழந்த கல்யாண குமாரின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதல்களை தெரிவித்துக் கொள்கிறேன். மேலும் காலம் சென்ற கல்யாணகுமாரின் குடும்பத்தினருக்கு மூன்று லட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன்" என்று தெரிவித்துள்ளார்.
Orange alert: தமிழ்நாட்டில் ஒரிரு இடங்களில் 26 மற்றும் 27 தேதிகளில் மிக கன மழை எச்சரிக்கை!
ஜாமின் கிடைத்ததைத் தொடர்ந்து.. புழல் சிறையிலிருந்து வெளியே வந்தார் நடிகை கஸ்தூரி
அமெரிக்கா கோர்ட் பிடிவாரண்ட்.. அதானியை உடனடியாக கைது செய்ய வேண்டும்.. ராகுல்காந்தி ஆவேசம்
விஜய் பங்கேற்கும்.. அம்பேத்கர் புத்தக வெளியீட்டு விழாவில் கலந்து கொள்ள மாட்டார் திருமாவளவன்!
தனுஷ் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் விவாகரத்து வழக்கில் இறுதிக் கட்டம்.. 27ம் தேதி தீர்ப்பு வழங்கப்படுகிறது!
கடுப்பா இருக்கா பாஸ்.. வாங்க கடிக்கிறோம்.. கலகலன்னு சிரிங்க.. மைன்ட் free ஆகி.. face பிரெஷ்ஷாய்ரும்!
ஆசிரியை ரமணியின் குடும்பத்திற்கு ரூ. 5 லட்சம் உதவி.. தாயாரிடம் வழங்கினார் அமைச்சர் கோவி.செழியன்
Chennai Lakes.. நீர் இருப்பில் மாற்றம் இல்லை.. புதிய காற்றழுத்தத் தாழ்வுக்காக ஏரிகள் வெயிட்டிங்!
Rain forecast: 5 மாவட்டங்களில் இன்று மிக கன மழைக்கு வாய்ப்பு.. 7 மாவட்டங்களில் கன மழை!
{{comments.comment}}