வயநாட்டில் மீண்டும் கனமழை.. ராணுவம் அமைத்த பாலம் சேதம்.. தரைப்பாலமும் அடித்துச் செல்லப்பட்டது!

Aug 14, 2024,03:53 PM IST

திருவனந்தபுரம்: வயநாட்டின் சூரல்மலை, முண்டக்கை பகுதியில் மீண்டும் கனமழை பெய்து வருகிறது.  ஏற்கனவே மீட்பு பணிகளுக்காக போடப்பட்ட தரைப்பாலம் வெள்ளத்தில் மீண்டும் அடித்துச் செல்லப்பட்டது. பாலத்தை சரி செய்யும் பணி தற்போது நடந்து வருகிறது. அதேபோல ராணுவம் அமைத்த இரும்புப் பாலமும் சேதமடைந்துள்ளது.


வயநாட்டில் கடந்த ஜூலை மாத 29ம் தேதி  நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த நிலச்சரிவில் முண்டக்கை, சூரல்மலை, மேப்பாடி ஆகிய கிராமங்கள் கடுமையாக பதிக்கப்பட்டன. இந்த 3 கிராமங்களும் மண்ணுக்குள் புதைந்தன. நிலச்சரிவில் இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 420யை கடந்துள்ளது.  273 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். 138 பேரை காணவில்லை. அவர்களை தேடும் பணியும் தொடர்ந்து நடந்து வருகிறது. இந்த நிலச்சரிவு பலரது வாழ்க்கையினையும் கேள்விக்குறியாக்கி சென்றுள்ளது.




இந்த நிலையில் வயநாடு நிலச்சரிவில் இதுவரை காணாமல் போனவர்களை தேடும் பணியும் தொடர்ந்து நடந்து வருகிறது. பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆறு மண்டலங்களாக பிரிக்கப்பட்டு தேடுதல் பணியில் மோப்ப நாய்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. இயற்கையின் கோர பசிக்கு பலரும்  இரையாகியுள்ளனர்.  இந்நிலையில், இன்னும் இயற்கையின் கோரப்பசி தீரவில்லை போலும். ஏற்கனவே வந்த நிலச்சரிவில் இருந்து பலரும் மீளாத நிலையில், தற்பொழுது கேரளாவில் வயநாடு முண்டக்கை மற்றும் சூரல்மலை பகுதியில் கனமழை நேற்றில் இருந்து பெய்து வருகிறது. 


இதனால் தற்போது மீட்பு பணிகளிலும் தொய்வு ஏற்பட்டுள்ளது.  அந்த பகுதி முழுவதும் காட்டாற்று வெள்ளம் கரை புரண்டு ஓடுகிறது. இந்த காட்டாற்று வெள்ளத்தால் ஏற்கனவே அடித்து செல்லப்பட்ட பாலம், தற்காலிகமாக அமைக்கப்பட்டு மீட்பு குழுவினர் மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வந்தனர். அதேபோல ராணுவம் அமைத்த  பெய்லி  தரைப்பாலம் மீண்டும் வெள்ளத்தால் சேதமடைந்து விட்டது. அந்த பாலத்தை சரி செய்யும் பணியில் தீயணைப்பு துறையினர் தற்பொழுது ஈடுபட்டுள்ளனர்.


செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்


சமீபத்திய செய்திகள்

news

அதிமுகவின் பிரம்மாஸ்திரம் இரட்டை இலை.. தெளிவான முடிவெடுத்த தலைவர் ஜானகி அம்மாள்.. ரஜினிகாந்த்

news

இந்தியாவில் எப்படி ஓட்டுக்களை எண்ணுறாங்க பாருங்க.. அமெரிக்க மானத்தை.. முடிச்சு விட்ட எலான் மஸ்க்!

news

இலவச வாக்குறுதிகள்.. மகாராஷ்டிராவை பாஜக வெல்ல முக்கியக் காரணம்.. இன்னொன்று.. பலவீனமான காங். கூட்டணி!

news

பொங்கல் நாளன்று தேர்வு.. தமிழ்ப் பண்பாட்டை அவமதிக்கிறீர்களா.. மத்திய அரசுக்கு சு. வெங்கடேசன் கேள்வி

news

12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் - நவம்பர் 24, 2024.. யாருக்கு என்ன பலன் காத்திருக்கு?

news

மகாராஷ்டிராவில் மீண்டும் பாஜக கூட்டணி ஆட்சி.. ஜார்க்கண்ட் ஆட்சியை தக்க வைத்தது ஜேஎம்எம் காங் கூட்டணி

news

வங்ககடலில் உருவானது.. புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி.. தமிழ்நாட்டில் மிக கன மழைக்கு வாய்ப்பிருக்கா?

news

வளர்ச்சிக்கும், நல்லாட்சிக்கும் கிடைத்த பெரும் வெற்றி .. மகாராஷ்டிரா மக்களுக்கு பிரதமர் மோடி நன்றி

news

Priyanka Gandhi.. வயநாடு இடைத் தேர்தலில் பிரியங்கா காந்தி அதிரடி.. அண்ணன் சாதனையை முறியடித்த தங்கை!

அதிகம் பார்க்கும் செய்திகள்