விறுவிறு வயநாடு வாக்குப்பதிவு.. மக்கள் ஆர்வம்.. வாக்குச் சாவடிகளில் பிரியங்கா காந்தி ஆய்வு!

Nov 13, 2024,11:41 AM IST

வயநாடு: கேரள மாநிலம் வயநாடு தொகுதிக்கான மக்களவை இடைத்தேர்தல் இன்று காலை 7 மணிக்கு தொடங்கி தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.  வாக்குச்சாவடிகளை பார்வையிட்டு கண்காணித்து வருகிறார் காங்கிரஸ் வேட்பாளர் பிரியங்கா காந்தி.


நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில் காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்தி ரேபரேலி மற்றும் வயநாடு ஆகிய இரு தொகுதிகளில் போட்டியிட்டு  பெரும்பான்மை வாக்கு  வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். ராகுல் காந்தி இரு தொகுதிகளிலும் வெற்றி பெற்றாலும் கூட தேர்தல் விதிமுறைகளின் படி ஒரு நபர் ஒரு தொகுதியில் தான் பதவி வகிக்க முடியும் என்ற அடிப்படையில் வயநாடு தொகுதியை ராஜினாமா செய்தார். இதனைத் தொடர்ந்து வயநாடு தொகுதிக்கு இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது. 


காங்கிரஸ் கட்சி சார்பில் வயநாடு தொகுதியில் பிரியங்கா காந்தி போட்டியிடுவதாக அறிவித்தனர். அதேபோல் பாஜக சார்பில் நவ்யா ஹரிதாஸ் மற்றும் கம்யூனிஸ்ட் சார்பில் சத்யன் மெகோரியும் களம் காண்கின்றனர்.  அங்கு மும்முனைப் போட்டி நிலவி வருவதால் பிரச்சார பணிகளும் விறுவிறுப்பாக நடந்து முடிந்தது. முக்கிய மூன்று  கட்சி வேட்பாளர்கள் என மொத்தம் 17 வேட்பாளர்கள் இந்த இடைத்தேர்தலில் போட்டியிடுகின்றனர். இந்த தொகுதியில் மொத்தம் 14,71,732 வேட்பாளர்கள் உள்ளனர்.





வயநாடு மக்களவைத் தொகுதி இடைத் தேர்தலுக்கான  வாக்குப்பதிவு இன்று விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 6:00 மணி வரை நடைபெறுகிறது. மக்கள் ஆர்வத்துடன் வரிசையில் காத்திருந்து அமைதியான முறையில் தங்களின் வாக்குகளை செலுத்தி வருகின்றனர்.


பிரியங்கா காந்தி, கல்பட்டா நகரத்தில் உள்ள ஜென் ஜோசப்  பள்ளி வாக்குச்சாவடியில் திடீரென என்ட்ரி கொடுத்து  பார்வையிட்டார். ஏராளமான மக்கள் பிரியங்கா காந்தியை உற்சாகமுடன் வரவேற்றனர். நவம்பர் 23ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு இத்தொகுதி வெற்றி வேட்பாளர் யார் என்பது அறிவிக்கப்பட உள்ளது.


செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

சீனாவுக்குப் போகும்.. தமிழர்களின் மனம் கவர்ந்த மகாராஜா.. விஜய் சேதுபதிக்கு ஹேப்பி அண்ணாச்சி!

news

Orange alert: தமிழ்நாட்டில் ஒரிரு இடங்களில் 26 மற்றும் 27 தேதிகளில் மிக கன மழை எச்சரிக்கை!

news

Ramanathapuram Rains: ராமநாதபுரத்தை வச்சு செய்த மேக வெடிப்பு.. மழை தொடருமாம் மக்களே!

news

நவம்பர் 21 - இன்றைய நல்ல நேரம், செய்ய வேண்டிய வழிபாடு

news

இன்று இந்த 4 ராசிக்காரர்கள் கவனமா இருக்கணும்

news

தஞ்சாவூர் ஆசிரியை ரமணி குடும்பத்துக்கு ரூ. 5 லட்சம் நிவாரணம்.. பள்ளிக்கு ஒரு வாரம் விடுமுறை

news

சினிமாவில் தொடரும் விவாகரத்துகள்.. சாமானியர்களை விட சகிப்புத் தன்மை குறைந்தவர்களாகி விட்டார்களா?

news

தென் மாவட்டங்கள், டெல்டாவைப் புரட்டி எடுக்கும் கன மழை.. 25,26ம் தேதிகளில் மஞ்சள் எச்சரிக்கை!

news

Kasthuri: நடிகை கஸ்தூரிக்கு நிபந்தனை ஜாமின்.. மனிதாபிமான கண்ணோட்டத்துடன் போலீஸ் ஆட்சேபிக்கவில்லை!

அதிகம் பார்க்கும் செய்திகள்