சென்னை: தமிழ்நாட்டில் உள்ள 90 நீர் தேக்கங்களில் 11 அணைகள் நிரம்பியுள்ளன. மற்ற அணைகளும் வரப் போகும் நாட்களில் பெருமழையைப் பெற்றால் நிரம்பும் என்ற நம்பிக்கையில் தமிழ்நாடு அரசும், நீர்வளத்துறையும் உள்ளன.
தமிழ்நாட்டில் உள்ள அணைகளின் மொத்த கொள்ளளவு 2,24,297 மில்லியன் கன அடி ஆகும். இதை டிஎம்சி கணக்கில் சொன்னால், 224.297 டிம்சி ஆகும். தற்போது அணைகளில் 1,66,128.50 மில்லியன் கன அடி நீர் இருப்பு உள்ளது. 90 அணைகளில் 11 அணைகள் 100% நிரம்பி விட்டன. பல அணைகளில் 90 சதவீதத்திற்கும் அதிகம் நீர் இருப்பு உள்ளது. பருவ மழை தீவிரத்தால் 90 சதவீதத்திற்கும் அதிகமாக உள்ள அணைகள் விரைவில் நிரம்பும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போது பருவ மழை தீவிரமடைந்து வருவதால் தமிழ்நாடு முழுவதும் பரவலாக நல்ல மழை பெய்து வருகிறது. குறிப்பாக நீர் பிடிப்பு பகுதிகள் மற்றும் நீர் தேக்கப் பகுதிகளில் நல்ல மழை பெய்து வருவதால் அணைகளின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது.
தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கிய சில நாட்களிலேயே பெருமழை பெய்ததால், இந்த ட்ரெய்லருக்கே 11 அணைகள் 100% நிரம்பி உள்ளன. இன்னும் வடகிழக்கு பருவமழையின் மெயின் பிக்சர் படிப்படியாக வரும்போது, மேலும் பல அணைகள் நிரம்பும் என எதிர்பார்க்கப்படுகிறது.
100 சதவீதம் நிரம்பியுள்ள அணைகள் விவரம்:
தர்மபுரி வறட்டாறு அணை (மொத்தக் கொள்ளளவு 34.45 அடி, 110.33 மில்லியன் கன அடி)
தென்காசி, குண்டாறு அணை (மொத்தக் கொள்ளளவு 36.10 அடி, 18.43 மில்லியன் கன அடி)
கன்னியாகுமரி மாம்பழத்துறையாறு அணை (மொத்த கொள்ளளவு- 54.12அடி, 44.54 மில்லியன் கன அடி)
திண்டுக்கல் மாவட்டம் சிறுமலையாறு ஓடை (மொத்த கொள்ளளவு- 27. 50 அடி, 15.50 மில்லியன் கன அடி)
மதுரை மாவட்டம் சாத்தையாறு அணை (மொத்த கொள்ளளவு- 29 அடி, 56 மில்லியன் கன அடி)
தேனி மாவட்டம் சண்முகா நதி அணை (மொத்த கொள்ளளவு- 52.50 அடி, 79.57 மில்லியன் கன அடி)
சோத்துப்பாறை அணை (மொத்த கொள்ளளவு- 126 அடி, 100 மில்லியன் கன அடி)
விருதுநகர், சாஸ்தா கோவில் அணை (மொத்த கொள்ளளவு- 32.81 அடி, 36.47 மில்லியன் கன அடி)
திண்டுக்கல் மாவட்டம், வரதுமாநதி அணை (மொத்த கொள்ளளவு- 66.47 அடி, 110.90 மில்லியன் கன அடி)
ஈரோடு மாவட்டம் :குண்டரிபள்ளம் அணை (மொத்த கொள்ளளவு- 41.75 அடி, 108.26 மில்லியன் கன அடி )
வரட்டுப்பள்ளம் அணை (மொத்த கொள்ளளவு- 33.46 அடி, 139.60 மில்லியன் கன அடி)
90 சதவீதத்திற்கும் அதிகமான நீர் இருப்பு உள்ள அணைகளின் விவரம்:
தர்மபுரி மாவட்டம் வாணியாறு அணை -மொத்த கொள்ளளவு- 65.27 அடி (418 மில்லியன் கன அடி)
நீர் இருப்பு- 63.80 அடி (401.41 மில்லியன் கன அடி).
திருவண்ணாமலை மாவட்டம் சாத்தனூர் அணை - மொத்த கொள்ளளவு- 119. 00 (7321 மில்லியன் கன அடி)
நீர் இருப்பு- 117.05 அடி (6,888 மில்லியன் கன அடி)
திண்டுக்கல், மருதாநதி அணை - முழு கொள்ளளவு 74.00 (188.50 மில்லியன் கன அடி)
91.25% நீர் இருப்பு உள்ளது.
குதிரையாறு அணை - மொத்த கொள்ளளவு- 80 அடி (253 மில்லியன் கன அடி)
நீர் இருப்பு- 77.44 அடி (237.27 மில்லியன் கன அடி) ஆகும்.
கோவை மாவட்டம்
சோலையாறு அணை - மொத்த கொள்ளளவு- 160 அடி (5,406 மில்லியன் கன அடி)
நீர் இருப்பு- 159.08 அடி (4,994 மில்லியன் கன அடி)
திருப்பூர் மாவட்டம், அமராவதி அணை - மொத்த கொள்ளளவு- 90 அடி(4,047 மில்லியன் கன அடி)
நீர் இருப்பு- 87.21 அடி (3,796 மில்லியன் கன அடி)
பரப்பிக்குளம் அணை - முழு கொள்ளளவு- 72 அடி (13,408 மில்லியன் கன அடி )
நீர் இருப்பு- 21.49 அடி (13,291) மில்லியன் கன அடி ஆகும்.
கிணத்துக்கடவு மற்றும் பெருவாரிபள்ளம் அணை - முழு கொள்ளளவு- 22 அடி (1,177 மில்லியன் கன அடி )
நீர் இருப்பு- 21. 53 அடி (1056.24 மில்லியன் கன அடி)
75 சதவீதத்திற்கும் அதிகமாக உள்ள அணைகளின் நீர் இருப்பு விவரம்:
திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம் ஏரியின் மொத்த கொள்ளளவு- 21.20 அடி( 300 மில்லியன் கன அடி)
நீர் இருப்பு- 17.02 அடி 2411 மில்லியன் கன அடி
கள்ளக்குறிச்சி கோமுகி அணையின் மொத்த கொள்ளளவு- 46 அடி (660.96 மில்லியன் கன அடி)
நீர் இருப்பு- 43 அடி (453 மில்லியன் கன அடி)
கிருஷ்ணகிரி
கிருஷ்ணகிரி அணையின் முழு கொள்ளளவு -52.00 அடி (166.30 மில்லியன் கன அடி)
நீர் இருப்பு -50.45 அடி (1490 மில்லியன் கன அடி )
பாம்பாறு அணையின் முழு கொள்ளளவு- 19.60 அடி (280 மில்லியன் கன அடி)
நீர் இருப்பு- 17.78 அடி (234. 90 மில்லியன் கன அடி )
திருவண்ணாமலை
குப்பநத்தம் அணையின் முழு கொள்ளளவு- 59.04 அடி (700 மில்லியன் கன அடி)
நீர் இருப்பு- 54.45 அடி (584 மில்லியன் கன அடி)
செண்பகத் தோப்பு அணையின் மொத்த கொள்ளளவு- 62.32 அடி (287.20 மில்லியன் கன அடி)
நீர் இருப்பு- 56.45 அடி (227.91 மில்லியன் கன அடி)
திருப்பத்தூர் ஆண்டியப்பனூர் ஓடையின் முழு கொள்ளளவு -26.24 அடி (112.20 மில்லியன் கன அடி)
நீர் இருப்பு- 24.21 அடி (97.04 மில்லியன் கன அடி )
கன்னியாகுமரி மாவட்டம்
பேச்சிப்பாறை அணையின் முழு கொள்ளளவு-48 அடி (4350 மில்லியன் கன அடி)
நீர் இருப்பு- 42.43 அடி (3537 மில்லியன் கன அடி)
சித்தாறு-1 அணையின் முழு கொள்ளளவு- 18 அடி (393 மில்லியன் கன அடி)
நீர் இருப்பு- 14.53 அடி (301.82 மில்லியன் கன அடி)
சித்தாறு-2 அணையின் முழு கொள்ளளவு- 18 அடி (600 மில்லியன் கன அடி)
நீர் இருப்பு- 14.63 அடி (469.48 மில்லியன் கன அடி )
தேனி, மஞ்சளாறு அணையின் முழு கொள்ளளவு- 57 அடி( 487 மில்லியன் கன அடி)
நீர் இருப்பு- 55 அடி( 435.32 மில்லியன் கன அடி)
திண்டுக்கல்
பாலாறு- பெருந்தலாறு அணையின் முழு கொள்ளளவு- 65 அடி (1524 மில்லியன் கன அடி)
நீர் இருப்பு- 61.35 அடி (1325.72 மில்லியன் கன அடி)
கொடகனாறு அணையின் முழு கொள்ளளவு- 27 அடி (434 மில்லியன் கன அடி)
நீர் இருப்பு- 24.48 அடி (335.38 மில்லியன் கன அடி )
ஈரோடு பவானி டேம் மொத்த கொள்ளளவு- 105 அடி( 32,800 மில்லியன் கன அடி)
நீர் இருப்பு- 94.49 அடி (24,631 மில்லியன் கன அடி)
கரூர், நொய்யல் ஆத்துப்பாளையம் அணையின் முழு கொள்ளளவு- 26.90 அடி (735.32 மில்லியன் கன அடி)
நீர் இருப்பு- 24.70 அடி (198.79 மில்லியன் கன அடி)
திருப்பூர், திருமூர்த்தி அணையின் முழு கொள்ளளவு- 60 அடி (1,744 மில்லியன் கன அடி)
நீர் இருப்பு- 52.59 அடி (1428 மில்லியன் கன அடி)
சேலம் மேட்டூர் அணையின் முழு கொள்ளளவு- 120 அடி (93,470 மில்லியன் கன அடி)
நீர் இருப்பு- 107.10 அடி (74,349 மில்லியன் கன அடி)
இதுதவிர மொத்தம் 21 அணைகளில் 20 சதவிகிதத்திற்கும் குறைவான நீர் இருப்பு உள்ளது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
Orange alert: தமிழ்நாட்டில் ஒரிரு இடங்களில் 26 மற்றும் 27 தேதிகளில் மிக கன மழை எச்சரிக்கை!
ஜாமின் கிடைத்ததைத் தொடர்ந்து.. புழல் சிறையிலிருந்து வெளியே வந்தார் நடிகை கஸ்தூரி
அமெரிக்கா கோர்ட் பிடிவாரண்ட்.. அதானியை உடனடியாக கைது செய்ய வேண்டும்.. ராகுல்காந்தி ஆவேசம்
விஜய் பங்கேற்கும்.. அம்பேத்கர் புத்தக வெளியீட்டு விழாவில் கலந்து கொள்ள மாட்டார் திருமாவளவன்!
தனுஷ் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் விவாகரத்து வழக்கில் இறுதிக் கட்டம்.. 27ம் தேதி தீர்ப்பு வழங்கப்படுகிறது!
கடுப்பா இருக்கா பாஸ்.. வாங்க கடிக்கிறோம்.. கலகலன்னு சிரிங்க.. மைன்ட் free ஆகி.. face பிரெஷ்ஷாய்ரும்!
ஆசிரியை ரமணியின் குடும்பத்திற்கு ரூ. 5 லட்சம் உதவி.. தாயாரிடம் வழங்கினார் அமைச்சர் கோவி.செழியன்
Chennai Lakes.. நீர் இருப்பில் மாற்றம் இல்லை.. புதிய காற்றழுத்தத் தாழ்வுக்காக ஏரிகள் வெயிட்டிங்!
Rain forecast: 5 மாவட்டங்களில் இன்று மிக கன மழைக்கு வாய்ப்பு.. 7 மாவட்டங்களில் கன மழை!
{{comments.comment}}