ஆப்பிள் கேள்விப்பட்டிருக்கோம்.. அது என்ன வாட்டர் ஆப்பிள்.. இது செம மேட்டர்.. வாங்க பார்க்கலாம்!

May 11, 2024,05:09 PM IST

- சந்தனகுமாரி


ஆப்பிள் கேள்விப்பட்டிருக்கோம் .அது என்ன வாட்டர் ஆப்பிள்.. அப்படின்னு நீங்க கேட்கலாம்.. பார்ப்பதற்கு வித்தியாசமாக இருக்கும். அது மட்டும் இல்ல கவர்ச்சியான சிவப்பு பழமாகவும் இருக்கிறது. இந்த வித்தியாசமான வாட்டர் ஆப்பிள் பற்றி பார்ப்போம்.


நாகர்கோயில்ல இந்த பழத்துக்கு பேரு சேம்பங்காய். வாட்டர் ஆப்பிள் கோடையில் சாப்பிட ஏற்ற ஒரு பழமாக  இருக்கிறது.  இந்த பழம் பார்ப்பதற்கு பளபளப்பாகவும், மணியைப் போலவும் இருக்கும். அதனால இத பெல் பழம் என்றும் சொல்லுவாங்க.  கேரளா, ஆந்திரா மாநிலங்களில் அதிகம் கிடைக்கும். இந்த தண்ணீர் ஆப்பிள் இளஞ்சிவப்பு, வெள்ளை மற்றும் சிவப்பு நிறத்தில் இருக்கும். இந்த நீர் ஆப்பிள் ஒரு கிளையில் ஒரு பழம் அப்படின்னு இல்லாம, கொத்து கொத்தாக காய்த்து குலுங்கும். இந்த பழ மரத்தின் வளர்ச்சி ஒரு ஆளின் உயரத்திற்கு தான் இருக்கும். 




தண்ணீர் ஆப்பிள்கள் 90 சதவீதம் நீரால் நிரம்பியுள்ளது. அதிக வெப்பமான சமயங்களில் சாப்பிடுவதற்கு நமக்கு இதமாகவும், நல்ல குளிர்ச்சி ஊட்டுவதாகவும் இருக்கிறது. அதனால்தான் இதற்கு வாட்டர் ஆப்பிள்னே பெயர் வந்ததாம். நம்முடைய தாகத்தை தணிப்பதற்கு ஏற்ற பழமாகவும் உள்ளது. இதனுடைய ருசி ஆப்பிள் மற்றும் கொய்யா இரண்டையும் இணைந்து சாப்பிடுவதன் ருசி போன்று இருக்கும். இந்த பழத்தின் சதை வெள்ளை நிறத்தில்  ரோஜா பூவின் நறுமணத்துடன் இருக்கும். இந்தப் பழத்தில் அதிக அளவுகள் ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. ஆப்பிளில் கலோரிகள் மதிப்பு மிகக் குறைவு. எனவே உடம்புக்கு ரொம்பவே நல்லது.


நீர் ஆப்பிள்கள் மலச்சிக்கல் பிரச்சனையில்  இருந்து நம்மை விடுபட பெரிதளவில் உதவுகிறது.  இதில் உள்ள நார்ச்சத்துக்கள் செரிமானத்திற்கு பெரிதளவில் உதவுகிறது. மேலும் இதயத்தின் சீரான செயலாக்கத்திற்கும் உதவுகிறது. உடலில் வீக்கம், பக்கவாதம் ஏற்படாமல் தடுக்கிறது. மேலும் நீர் ஆப்பிளில் ரத்தத்தின் சர்க்கரை அளவை குறைக்கக்கூடிய தன்மை அதிகம் உள்ளது. நீரழிவு நோயாளிகளுக்கு ரத்த சர்க்கரை அளவை குறைக்கிறது. மேலும் உடலில் உள்ள நச்சுக்களை நீக்கி கல்லீரல் சம்பந்தப்பட்ட நோய்களை சரி செய்கிறது.  இந்த ஆப்பிள் சாப்பிடுவதன் மூலம் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது.


இந்த சேம்பங்காய் பத்தி ஒரு குட்டிக் கதையை உங்களுக்கு சொல்றேன் கேளுங்க.. நாகர்கோவில் செல்லும் போது அந்த ஊர் மார்க்கெட் ஒன்றில் அதிக அளவில் இதைக் குவித்து வைத்திருந்தார்கள். பார்ப்பதற்கு வித்தியாசமாக இருந்தது. ஏன்னா எங்க ஊர்ல இந்த பழம் பார்த்தது கிடையாது. பிரெண்ட்ஸ் கிட்ட சொல்லி இந்த பழம் சாப்பிட ஆசையா இருக்குது சாப்பிடலாமா அப்படின்னு கேட்டப்போ.. அவங்க ஓகே சொல்ல.. நிறைய வாங்கிக் கொண்டாந்தாங்க. தொட்டு பாக்கவே அவ்ளோ சாஃப்ட்டா இருந்து. பலூன்ல தண்ணி அடைச்சி தொங்க விட்டா எந்த மாதிரி இருக்குமோ அதே போல குட்டி உருவத்தில் இருந்துச்சு. உடனேஎல்லாரும் அதை நல்லா கழுவி  அதுல வத்தல் பொடி உப்பு சேர்த்து மிக்ஸ் பண்ணி சாப்பிட்டோம். அந்த டேஸ்ட் சொல்லவே முடியல. அந்த அளவுக்கு ஒரு பயங்கர டேஸ்ட் அது. வீட்டுக்கும் வாங்கிட்டுப் போய் அவங்களும் சாப்பிட்டு, பிறகு அதில் மீதமிருந்த சேம்பங்காயை எடுத்து அம்மா ஊறுகாய் போட்டு தந்தார்கள். அதுல இருந்து இப்ப வரை நாகர்கோவில் போனா சேம்பங்காய் சாப்பிட வேண்டும் என்று ஆசை வந்துடும்.




இப்ப எல்லாம் இந்த வாட்டர் ஆப்பிள் வைத்து நிறைய வெரைட்டி ரெசிபி செய்ய ஆரம்பிச்சிட்டாங்க.  வாட்டர் ஆப்பிள் ஜூஸ், ரோஸ் ஆப்பிள் வைத்து wine செய்றாங்க. பொரியல் செய்றாங்க. ஊறுகாய் செய்யலாம். வெளியில எங்கேயாவது அவுட்டிங் போல போயாச்சுன்னா  துண்டு துண்டா வெட்டி வத்தல் பொடி , உப்பு வச்சு சாப்பிடலாம். வாட்டர் ஆப்பிள் வைத்து அல்வா கூட செய்றாங்க. ரொம்ப ரொம்ப டேஸ்டியான ஜாமும் பண்றாங்க. நம்ம டிஃபரண்டா சாப்பிட்டது போலவும் ஆச்சு, உடலுக்கு நல்ல ஹெல்த் கிடைச்சது போலவும் ஆச்சு.


இனி வாட்டர் ஆப்பிள் சீசன் வந்தா மிஸ் பண்ணிடாதீங்க. ஒரு டைம் ட்ரை பண்ணி பாருங்க. இந்த சம்மருக்கு ரொம்ப யூஸ்ஃபுல்லான ப்ரூட்ஸ்னு கூட சொல்லலாம்.

சமீபத்திய செய்திகள்

news

ஒரே நாடு ஒரே தேர்தல் சாத்தியமற்றது.. கூட்டாட்சி தத்துவத்தை சிதைக்கும்.. முதல்வர் மு.க.ஸ்டாலின்

news

மகாத்மா காந்தி பிறந்த மாதத்தில்.. புதிய மதுபானக் கொள்கையை அறிமுகப்படுத்தும் ஆந்திர அரசு!

news

ஐபிஎல் 2025 வருது வருது.. நவம்பரில் வீரர்கள் ஏலம்.. துபாயா, தோஹாவா இல்லாட்டி அபுதாபியா?

news

பெண் உதவியாளரை நாசப்படுத்தியதாக.. அரபி குத்து, காவாலா பாடல் புகழ் ஜானி மாஸ்டர் கைது!

news

சபாஷ் பாஸ்கர்.. மாற்றுத் திறனாளி பயணியிடம் காட்டிய கனிவு.. வேற லெவல் மாற்றத்தில் சென்னை எம்டிசி!

news

வங்கதேசத்துடன் கிரிக்கெட் போட்டி கூடாது.. சென்னையில் போராட்டத்தில் குதித்த இந்து மக்கள் கட்சி

news

என்ன தலைவா.. கடைசியில நீயும் அரசியல்வாதி ஆகிட்டியே?.. விஜய் போட்ட டிவீட்.. கதறும் கட்சிகள்!

news

அதீத பணிச்சுமை.. வீடு திரும்பிய இளம் பெண்.. படுக்கையில் சரிந்து பரிதாப மரணம்!

news

நவராத்திரி விற்பனை கண்காட்சி.. சென்னையில்.. செப்டம்பர் 21 முதல் கோலாகல தொடக்கம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்