வக்பு வாரிய சட்டத் திருத்த மசோதா.. இன்று தாக்கலாகிறது.. 8 மணி நேர விவாதம்.. கட்சிகளின் பலம் என்ன?

Apr 02, 2025,10:34 AM IST

டெல்லி: வக்பு வாரிய சட்டத் திருத்த மசோதா இன்று லோக்சபாவில் தாக்கல் செய்யப்படவுள்ளது. தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு பெரும்பான்மை பலம் உள்ளதால் மசோதா நிறைவேறும் வாய்ப்புகளே அதிகம். அதேசமயம், எதிர்க்கட்சிகள் தரப்பில் அனல் பறக்கும் விவாதம் இடம் பெறும் என்பதால் அது எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.


தற்போது உள்ள வக்பு சட்டமானது 1995ம் ஆண்டு கொண்டு வரப்பட்டது. அந்த சட்டத்தில்தான் தற்போது திருத்தம் செய்யப்பட்டு புதிய மசோதா கொண்டு வரப்பட்டுள்ளது. ஆனால் இதில் தற்போது செய்யப்பட்டுள்ள திருத்தங்களை எதிர்க்கட்சிகள் கடுமையாக எதிர்க்கின்றன. அதேபோல முஸ்லீம் அமைப்புகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.


இந்த நிலையில்தான் கூட்டு நாடாளுமன்றக் கமிட்டிக்கு சட்ட மசோதா அனுப்பி வைக்கப்பட்டது. அதில் சில திருத்தங்கள் பரிந்துரைக்கப்பட்டன. ஆனால் அந்தக் கூட்டத்தில் கலந்து கொண்ட எதிர்க்கட்சி எம்.பிக்கள் பலரும் கூட்டத்திலிருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டதால் அதுவும் சலசலப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் கூட்டு நாடாளுமன்றக் குழுவின் பரிந்துரைகளுக்கு ஏற்ப மசோதாவில் திருத்தம் செய்யப்பட்டு அது இன்று லோக்சபாவில் தாக்கல் செய்யப்படுகிறது. விவாதத்திற்குப் பின்னர் இது வாக்கெடுப்புக்கு விடப்படும்.




இன்றைய கூட்டத்தில் கலந்து கொள்ள வேண்டும் என்று பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்துக் கட்சிகளும் தங்களது எம்.பிக்களுக்கு கொறடா உத்தரவு பிறப்பித்துள்ளன. இந்தியா கூட்டணி எதிர்த்து வாக்களிக்க முடிவு செய்துள்ளது. மசாதா தாக்கல் செய்யப்பட்ட பின்னர் கிட்டத்தட்ட 8 மணி நேரத்திற்கு விவாதம் நடைபெறவுள்ளது. தேவைப்பட்டால் கால அவகாசம் கூட்டப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இங்கு சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டால் அடுத்து ராஜ்யசபாவில் கொண்டு வரப்படும். அங்கு நிறைவேற்றப்பட்டால் மசோதா, குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைக்கப்படும். அவரது ஒப்புதலுக்குப் பின்னர் இது சட்டமாகும்.


கட்சிகளின் பலம் என்ன?


லோக்சபாவில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு ஆதரவு அதிகம் உள்ளது. பாஜகவிடம் மட்டும் 240 எம்.பிக்கள் உள்ளனர். கூட்டணிக் கட்சிகளின் எம்.பிக்களைச் சேர்த்தால் 295 வாக்குகள் உள்ளன.  காங்கிரஸ் உள்ளிட்ட இந்தியா கூட்டணி எம்.பிக்களிடம் 234 வாக்குகள் உள்ளன.  எனவே வாக்கெடுப்பில் மசோதா வெற்றி பெறவே  வாய்ப்புள்ளது. அதேசமயம், தெலுங்கு தேசம், ஐக்கிய ஜனதாதளம் ஆகிய கட்சிகளுக்கு சிறுபான்மையினர் மத்தியிலும் நல்ல ஆதரவு உண்டு. எனவே அவர்கள் என்ன செய்யப் போகிறார்கள் என்ற கேள்வி எழுந்துள்ளது. வாக்கெடுப்பில் கலந்து கொள்ளாமல் நடுநிலை வகிப்பார்களா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.


இருப்பினும் மசோதாவை ஆதரிப்பதாக ஏற்கனவே சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார். மறுபக்கம் சட்டத்தைக் கொண்டு வந்தாலும் அதை அமல்படுத்த வேண்டாம் என்று ஐக்கிய ஜனதாதளம் கோரிக்கை விடுத்துள்ளது.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

கார்ல் மார்க்ஸ் திருவுருவச் சிலை அமைக்கும் அரசின் முடிவு வரவேற்கத்தக்கது: டாக்டர் ராமதாஸ் வரவேற்பு!

news

வளர்பிறை சஷ்டி விரதம்... வியாழக்கிழமை வந்திருப்பது மிக மிக விசேஷமானது!

news

சட்ட மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து.. கருப்பு பட்டை அணிந்து சட்டசபைக்கு வந்த.. எம்எல்ஏக்கள்..!

news

Today gold rate:புதிய உச்சத்தில் தங்கம் விலை... சவரனுக்கு எவ்வளவு உயர்வு தெரியுமா?

news

எதிர்க்கட்சிகளின் எதிர்ப்புக்கு மத்தியில்..மக்களவையில் நிறைவேறியது.. வக்பு வாரிய சட்ட திருத்த மசோதா

news

தமிழ்நாடு மின்சார வாரியம் சார்பாக.. ஏப்ரல் 5ல் மின் நுகர்வோருக்கான.. சிறப்பு முகாம் ஏற்பாடு..!

news

மேகம் கருக்குது மழை வர பாக்குது.. தமிழ்நாட்டில் இன்று முதல் 5 வரை கனமழைக்கு வாய்ப்பு..!

news

12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் ஏப்ரல் 03, 2025...யாருக்கு என்ன பலன் காத்திருக்கு?

news

கச்சத்தீவை மீட்க வேண்டும்.. முதல்வர். மு.க.ஸ்டாலின் தனி தீர்மானம்.. ஒரு மனதாக நிறைவேற்றம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்