ஈரோடு கிழக்கு.. படு விறுவிறுப்பாக நடைபெறும் இடைத் தேர்தல் வாக்குப் பதிவு.. மக்களிடையே ஆர்வம்

Feb 05, 2025,10:29 AM IST

ஈரோடு: ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தல் இன்று காலை 7 மணிக்கு தொடங்கி விறுவிறுப்பாக வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. காலை 9:00 மணி நிலவரப்படி 10.85 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளன.


ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏவான ஈவிகேஎஸ் இளங்கோவன் உடல் நலக்குறைவால் உயிரிழந்ததை தொடர்ந்து அத்தொகுதி காலியானது. இதனை அடுத்து அத்தொகுதியில் பிப்ரவரி 5ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. இதில் திமுக வேட்பாளர் சந்திரகுமார், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சீதாலட்சுமி, 44 சுயேச்சை வேட்பாளர்கள் என மொத்தம் 46 பேர் களம் காண்கின்றனர். அதிமுக,பாஜக, தேமுதிக, தவெக உள்ளிட்ட முக்கிய கட்சிகள் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலை புறக்கணித்துள்ளது.


இந்த தேர்தலில் ஒரு லட்சத்து 10 ஆயிரத்து 128 ஆண் வாக்காளர்களும், ஒரு லட்சத்து 17 ஆயிரத்து 381 பெண் வாக்காளர்களும், 37 மூன்றாம் பாலினத்தவர்களும் என மொத்தம்  2, 27,237பேர் வாக்களிப்பதற்காக 237 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு தேர்தல் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. பாதுகாப்பு ஏற்பாடுகளும் பலப்படுத்தப்பட்டது.  இந்த இடைத்தேர்தலை முன்னிட்டு ஈரோடு மாவட்டத்திற்கு இன்று விடுமுறையும் அறிவிக்கப்பட்டு இருந்தது.




இந்த நிலையில் அறிவித்தபடியே ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு இன்று  தொடங்கியது. காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு  மாலை 6 மணியுடன் நிறைவடைகிறது. மக்கள் தங்களின் ஜனநாயக கடமையை ஆற்ற நீண்ட வரிசையில் காத்திருந்து தங்கள் வாக்குகளை செலுத்தி வருகின்றனர். 


மக்களோடு மக்களாக வரிசையில் நின்று அம்மாவட்ட கலெக்டர் ராஜகோபாலன் வாக்களித்தார்.  சூரம்பட்டி வாக்குச்சாவடியில் திமுக வேட்பாளர் சந்திரகுமார் வாக்களித்தார்.


காலை 9:00 மணி நிலவரப்படி தற்போது 10.85 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளன. 


இதனைத் தொடர்ந்து இடைத்தேர்தலில் பதிவாகும் வாக்குகள் பிப்ரவரி 8 ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.


டெல்லியிலும் விறுவிறு வாக்குப் பதிவு


டெல்லி சட்டசபைக்கும் இன்று பொதுத் தேர்தல் நடைபெறுகிறது. அங்கும் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் காலை முதல் வாக்குப் பதிவு நடைபெற்று வருகிறது. குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு தேர்தலில் பங்கேற்று தனது ஜனநாயகக் கடமையை ஆற்றினார்.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

அஜீத் ரசிகர்களே ரெடியா.. விடாமுயற்சி நாளை ரிலீஸ்.. சிறப்புக் காட்சிக்கு அரசு அனுமதி

news

144 தடை உத்தரவு வாபஸ்.. திருப்பரங்குன்றம் மலை கோவில், தர்காவுக்குச் செல்ல போலீஸ் அனுமதி!

news

தொடர் உச்சத்தில் தங்கம் விலை... சவரன் 63,000த்தை கடந்து புதிய உச்சம்!

news

சாம்சங் நிறுவனத்தில் மீண்டும் சர்ச்சை,3 தொழிலாளர்கள் சஸ்பெண்ட்..தொழிலாளர்கள் உள்ளிருப்புப் போராட்டம்

news

ஈரோடு கிழக்கு.. படு விறுவிறுப்பாக நடைபெறும் இடைத் தேர்தல் வாக்குப் பதிவு.. மக்களிடையே ஆர்வம்

news

ட்ரெய்லர் மட்டுமே பார்த்துவிட்டு.. இதுதான் என யூகிக்க வேண்டாம்.. விடாமுயற்சி நடிகை.. ஓபன் டாக்..!

news

ஓம் சரவணபவ.. வாழ்வில் வளம் பெற தை கிருத்திகை விரதம்.. பிப்ரவரி 6.. மறவாதீர்கள்!

news

12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் பிப்ரவரி 05, 2025...யாருக்கு என்ன பலன் காத்திருக்கு?

news

ஈரோடு கிழக்கு இடைத் தேர்தல்.. எல்லோருக்கும் லீவு .. மறக்காம ஓட்டுப் போடுங்க.. கலெக்டர் அழைப்பு!

அதிகம் பார்க்கும் செய்திகள்