Sasikala Tamil Nadu Tour: தென்காசியிலிருந்து புதிய பயணத்தைத் தொடங்கும் சசிகலா!

Jul 17, 2024,12:51 PM IST

சென்னை:   தென்காசியில் இன்று முதல் நான்கு நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டு "அம்மா வழியில் மக்கள் பயணம்" என்ற அரசியல் பயணத்தை வி.கே. சசிகலா தொடங்குகிறார். அதிமுக நிர்வாகிகளை சந்திக்க இருக்கிறார்.


முதல்வர் ஜெயலலிதா மறைந்த பின்  முதல்வர் பதவியில் அமர சசிகலா திட்டமிட்டார். ஆனால் சொத்துக் குவிப்பு வழக்கில் அவர் சிறை செல்ல நேரிட்டதால், எடப்பாடி பழனிச்சாமியை முதல்வர்  பதவியில் அமர்த்து விட்டு சிறைக்குப் போனார். இதன் பின்னர் படிப்படியாக கட்சி எடப்பாடி பழனிச்சாமி பக்கம் போய் விட்டது. ஓபிஎஸ், சசிகலா, டிடிவி தினகரன் ஆகியோரை அடுத்தடுத்து நீக்கிய எடப்பாடி பழனிச்சாமி தற்போது அதிமுகவின் பொதுச் செயலாளராக வலம் வருகிறார். 




எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் அதிமுக சந்தித்த அனைத்துத் தேர்தல்களிலும் தோல்வியைத் தழுவியுள்ளது. சமீபத்தில் நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில் எடப்பாடி பழனிச்சாமியும், ஓபிஎஸ்சும் இரு வேறு அணிகளாக போட்டியிட்டு கடும் தோல்வியை சந்தித்தனர். குறிப்பாக 40 இடங்களில் அதிமுக ஒரு இடங்களில் கூட வெற்றி பெறவில்லை. 7 தொகுதிகளில் டெபாசிட்டையும் பறிகொடுத்தது. தொடர் தோல்வியால் அதிமுக மீண்டும் ஒன்றுபட வேண்டும். நீக்கப்பட்ட தலைவர்களை மீண்டும் சேர்க்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது.  


குறிப்பாக சசிகலாவும், ஓ.பி.எஸ்ஸும் இந்தக் கோரிக்கையை தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். இருப்பினும் எடப்பாடி பழனிச்சாமி இதனைப் பொருட்படுத்தவில்லை. நிராகரித்து விட்டார். அதேசமயம், சென்னையில் நடந்து வரும் அதிமுக ஆலோசனைக் கூட்டத்தின்போது முக்குலத்தோர் வாக்குகளை அதிமுக பெற வேண்டுமானால் சசிகலாவை கட்சியில் சேர்த்தாக வேண்டும். இல்லாவிட்டால் முக்குலத்தோர் வாக்குகளை முற்றிலும் இழக்க நேரிடும் என்று மூத்த தலைவர்கள் பலர் வலியுறுத்தியதாக கூறப்படுகிறது. ஆனால் சசிகலாவை கட்சியில் சேர்ப்பதற்கு எடப்பாடி பழனிச்சாமி தயக்கம் காட்டுவதாக தெரிகிறது.


இதற்கிடையே செத்து குவிப்பு வழக்கில்  கைது செய்யப்பட்ட சசிகலா கடந்த 2021 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் சிறையிலிருந்து வெளியே வந்தார். அப்போது அதிமுக இடையே உட்கட்சிப் பூசல் நிலவி கட்சி இரண்டு அணிகளாகப் பிரிந்தது. இதனால் கட்சியிலிருந்து  ஒதுங்கி இருந்தார் ஜெயலலிதா தோழி சசிகலா. ஆனால் தற்போது நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக ஒரு இடம் கூட வெற்றி பெறாமல் கடும் தோல்வியை சந்தித்த நிலையில் மீண்டும் கட்சியை ஒன்றிணைக்க வேண்டும் என தொடர்ந்து பேசி வருகிறார். 


இந்த நிலையில் இன்று அம்மா வழியில் மக்கள் பயணம் என்ற புதிய அரசியல் பயணத்தை மேற்கொள்ள இருக்கிறார் சசிகலா. இதன்படி தென்காசியில் இன்று முதல் நான்கு நாட்களுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு அதிமுக நிர்வாகிகளை சந்தித்து பேச இருக்கிறார். தொடர்ந்து ஒவ்வொரு ஊராக அவர் செல்லவிருக்கிறார். இந்தப் பயணம் எந்த அளவுக்கு சசிகலாவுக்கும், அவரது நோக்கத்திற்கும் பயன் தரும் என்பது போகப் போகத் தெரியும்.

சமீபத்திய செய்திகள்

news

தோனி அதிரடி.. கடைசி நேர போராட்டம் வீண்.. மீண்டும் ஒரு தோல்வி.. ஏமாற்றத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ்

news

தமிழக அரசு நிறைவேற்றிய மசோதாக்களை ஜனாதிபதிக்கு அனுப்பியது சட்டவிரோதம்.. உச்சநீதிமன்றம்

news

உச்சநீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில்.. இனி முதல்வர் ஸ்டாலினே பல்கலைக்கழக வேந்தர்.. பி.வில்சன்

news

உச்சநீதிமன்றத் தீர்ப்பு வரவேற்கத்தக்கது .. துணைவேந்தர்களை உடனே நியமிக்க வேண்டும்.. டாக்டர் ராமதாஸ்

news

Tamil Nadu leads.. பேரறிவாளவன் வழக்குக்குப் பின்.. சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்திய உச்சநீதிமன்றம்!

news

ஆளுநருக்கு எதிரான.. உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வரலாற்று சிறப்புமிக்கது‌.. முதல்வர் ஸ்டாலின் மகிழ்ச்சி!

news

Summer Food tips.. அடிக்கும் அதிரடி வெயிலுக்கு.. கருப்பு கவுனி அரிசி மோர் கூழ் சூப்பரப்பு!

news

ஏப்ரல் 10.. சம்பவம் காத்திருக்கு.. குட் பேட் அக்லி படத்திற்கு.. யுஏ சான்றிதழ்.. ரசிகர்கள் வெயிட்டிங்

news

ஆளுநர் ஆர்.என். ரவியை உடனடியாகப் பதவி நீக்கம் செய்ய வேண்டும்: திருமாவமவன்!

அதிகம் பார்க்கும் செய்திகள்