பக்தர்களின் கவனத்துக்கு.. சதுரகிரி கோவிலுக்கு செல்ல இன்று முதல் 4 நாட்களுக்கு அனுமதி!

Jan 23, 2024,10:54 AM IST

விருதுநகர்: சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவிலில் இன்று முதல் 4 நாட்களுக்கு பக்தர்கள் அனுமதிக்கப்பட உள்ளதாக வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.


சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவில் விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு பகுதியில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ளது. இங்கு வரும் பக்தர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்படுவது வழக்கம். காரணம் இது வனப் பகுதியில் இருப்பதால். தினமும் இங்கு சாமி தரிசனம் செய்ய முடியாது மாதத்திற்கு அமாவாசை, பவுர்ணமி, பிரதோஷம் என 8 நாட்களுக்கு மட்டுமே மக்கள் அனுமதிக்கப்படுகின்றனர். அதுவும் காலை 6 மணி முதல் 12 மணி வரை மட்டுமே மலையேற அனுமதி அளித்துள்ளது வனத்துறை.


கடந்த 2 மாதங்களாக   கன மழை காரணமாக  மக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டிருந்தது. தற்போது மழையின் தாக்கம் குறைந்ததால் பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் மார்கழி 1ம் தேதி மட்டும் நீதிமன்ற உத்தரவின்படி அனுமதி அளிக்கப்பட்டிருந்து. அப்பொழுதும் பக்தர்களின் கூட்டம் குறைவாகவே இருந்தது குறிப்பிடத்தக்கது.




இந்நிலையில் இன்று பிரதோஷம் என்பதாலும், அடுத்து பவுர்ணமி வர உள்ளதாலும் இன்று முதல் 4 நாட்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. தை மாத பிரதோஷம் என்பதால் 21 வகையான அபிஷேகங்கள் நடைபெற உள்ளன. அபிஷேகத்திற்கு பின்னர்  சிறப்பு பூஜை நடைபெற உள்ளது. வருகின்ற 26ம் தேதியுடன் 4 நாட்களுக்கான அனுமதி முடிவடைகிறது.


சதுரகிரி மலைக்கு வரும் பக்தர்கள், எளிதில் தீப்பற்றக் கூடிய பொருட்களை கொண்டு செல்ல அனுமதி இல்லை. அதே போல 10 வயதுக்குட்பட்ட குழந்தைகள் மற்றும் 60 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு அனுமதி கிடையாது. இங்கு இரவில் தங்கக்கூடாது. அருகில் உள்ள ஓடைகளிலும் குளிக்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. மழை பெய்தால் அனுமதி மறுக்கப்படும் எனவும் வனத்துறை சார்பில் கூறப்பட்டுள்ளது.


மக்களின் பாதுகாப்பிற்காகவே பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இந்த 4 நாட்களும் பக்தர்களின் கூட்டம் அதிகமாக இருக்கும் என்று வனத்துறையினர் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதற்கான முன்னேற்பாட்டு பணிகளில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.

சமீபத்திய செய்திகள்

news

ஏழு கொண்டலவாடா.. திருப்பதி லட்டு பிரசாதத்தில் கலப்படம்.. தடுக்க பவன் கல்யாண் தரும் ஐடியா!

news

வந்தாச்சு அறிவிப்பு.. விக்கிரவாண்டியில் அக். 27ல் முதல் மாநில மாநாடு.. புதிய பாதை அமைப்போம்.. விஜய்

news

செப்டம்பர் 20 - இன்றைய நல்ல நேரம், செய்ய வேண்டிய வழிபாடு

news

மீன ராசிக்காரர்களே.. வேகத்தை குறைத்து விவேகமாக செயல்பட வேண்டிய காலம்

news

ஒரே நாடு ஒரே தேர்தல் சாத்தியமற்றது.. கூட்டாட்சி தத்துவத்தை சிதைக்கும்.. முதல்வர் மு.க.ஸ்டாலின்

news

மகாத்மா காந்தி பிறந்த மாதத்தில்.. புதிய மதுபானக் கொள்கையை அறிமுகப்படுத்தும் ஆந்திர அரசு!

news

ஐபிஎல் 2025 வருது வருது.. நவம்பரில் வீரர்கள் ஏலம்.. துபாயா, தோஹாவா இல்லாட்டி அபுதாபியா?

news

பெண் உதவியாளரை நாசப்படுத்தியதாக.. அரபி குத்து, காவாலா பாடல் புகழ் ஜானி மாஸ்டர் கைது!

news

சபாஷ் பாஸ்கர்.. மாற்றுத் திறனாளி பயணியிடம் காட்டிய கனிவு.. வேற லெவல் மாற்றத்தில் சென்னை எம்டிசி!

அதிகம் பார்க்கும் செய்திகள்