"விஜயகாந்த் தங்கமான மனுஷன்.. Miss you Sir".. நெகிழ்ந்து கலங்கிய விருத்தாச்சலம் பெண்!

Dec 29, 2023,07:40 PM IST

சென்னை : மறைந்த தேமுதிக தலைவரும், நடிகருமான விஜயகாந்த்தின் இறப்பிற்கு பிறகு பலரும் அவருடனான அனுபவங்களை பகிர்ந்து வருகிறார். அந்த வகையில் ஒரு பெண்ணின் பதிவு அனைவரையும் கலங்க வைத்துள்ளது.


சாமானிய மக்களின்  மனதில் எந்த அளவுக்கு ஆழமாக வாழ்ந்து வருகிறார் விஜயகாந்த் என்பதற்கு இது ஒரு துளி உதாரணம். 


நடிகராக இருந்து, அரசியல் தலைவராக உயர்ந்தவர் விஜயகாந்த். சினிமாவிலும் தமிழக அரசியலிலும் முக்கிய இடம் பிடித்த விஜயகாந்த், தனது 71வது வயதில் உடல்நலக்குறைவு காரணமாக டிசம்பர் 28ம் தேதி காலை உயிரிழந்தார். அவரது உடலுக்கு சினிமா பிரமுகர்கள், அரசியல் தலைவர்கள், பொது மக்கள், ரசிகர்கள், தொண்டர்கள் என லட்சக்கணக்கானோர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். 




பிரபலங்கள் பலர் விஜயகாந்த் உடனான தங்களின் வாழ்க்கை அனுபவங்களை போட்டோக்கள், வீடியோக்கள் மற்றும் எழுத்துக்களாக சோஷியல் மீடியாவில் பதிவிட்டு வருகின்றனர்.  விஜயகாந்த் உடன் பழகிய சினிமா மற்றும் அரசியல் பிரமுகர்கள் அவரை பற்றிய நினைவுகளை வேதனையுடன் பகிர்வதில் ஒன்றும் ஆச்சரியம் இல்லை. ஆனால் சாமானிய மக்கள் பலரும் விஜயகாந்த் உடனான தங்களின் அனுபவங்களை சோஷியல் மீடியாவில் பகிர்ந்து வருவது பலரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது. 


சோஷியல் மீடியாக்களில் காவலர் ஒருவர் விஜயகாந்த்தின் உடலை பார்த்து கண்ணீர் விட்டு கதறி அழும் வீடியோ ஒன்று அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. அதே போல் விஜயகாந்த் முதன் முதலில் போட்டியிட்ட விருத்தாச்சலம் தொகுதியில் இருந்து ஜெயமணி ஜெயா என்கிற பெண் தனது அனுபவத்தை பகிர்ந்துள்ளது பலரையும் கவர்ந்துள்ளது.


தனது பதிவில் அந்த பெண், "எங்க ஊர் விருத்தாசலத்தில் தான் முதன் முறையாக எம்எல்ஏ ஆனார். அப்போ கம்ப்யூட்டர் கிளாஸ் பத்தி எல்லாம் யோசிச்சுக்கூட பார்க்க முடியாத எங்கள போல எத்தனையோ மிடில் கிளாஸ் பெண்களுக்கு இது எவ்வளவு பெரிய வாய்ப்பு... இது மட்டும் இல்லாம இலவச தையல் பயிற்சி வகுப்பும் இருந்துச்சு. சினிமால கேப்டன் ஆக அவர ரொம்ப பிடிச்சாலும் எங்க ஊர் எம்எல்ஏ வா அவர பாத்து பேசினது இன்னும் அவர் மேல் பாசமும் பிரமிப்பும் அதிகமாச்சு. தங்கமான மனுஷன்" என குறிப்பிட்டுள்ளார். 




விஜயகாந்த்தால் ஏற்படுத்தப்பட்ட கம்ப்யூட்டர் கிளாசில் சேர்ந்து படித்து பெற்ற சான்றிதழின் புகைப்படத்தை சோஷியல் மீடியாவில் பகிர்ந்துள்ள அந்த பெண், விஜயகாந்த் எளிய மனிதர்களுடனும் எவ்வளவு அன்பாக சாதாரணமாக பழகக் கூடியவர் என்பதையும், பலருக்கும் எட்டா கனியாக இருந்த விஷயங்களைக் கூடிய சாத்தியப்பட வைத்த தலைவர் என்பதையும் எடுத்துக்காட்டி உள்ளது.

சமீபத்திய செய்திகள்

news

ஒரே நாடு ஒரே தேர்தல் சாத்தியமற்றது.. கூட்டாட்சி தத்துவத்தை சிதைக்கும்.. முதல்வர் மு.க.ஸ்டாலின்

news

மகாத்மா காந்தி பிறந்த மாதத்தில்.. புதிய மதுபானக் கொள்கையை அறிமுகப்படுத்தும் ஆந்திர அரசு!

news

ஐபிஎல் 2025 வருது வருது.. நவம்பரில் வீரர்கள் ஏலம்.. துபாயா, தோஹாவா இல்லாட்டி அபுதாபியா?

news

பெண் உதவியாளரை நாசப்படுத்தியதாக.. அரபி குத்து, காவாலா பாடல் புகழ் ஜானி மாஸ்டர் கைது!

news

சபாஷ் பாஸ்கர்.. மாற்றுத் திறனாளி பயணியிடம் காட்டிய கனிவு.. வேற லெவல் மாற்றத்தில் சென்னை எம்டிசி!

news

வங்கதேசத்துடன் கிரிக்கெட் போட்டி கூடாது.. சென்னையில் போராட்டத்தில் குதித்த இந்து மக்கள் கட்சி

news

என்ன தலைவா.. கடைசியில நீயும் அரசியல்வாதி ஆகிட்டியே?.. விஜய் போட்ட டிவீட்.. கதறும் கட்சிகள்!

news

அதீத பணிச்சுமை.. வீடு திரும்பிய இளம் பெண்.. படுக்கையில் சரிந்து பரிதாப மரணம்!

news

நவராத்திரி விற்பனை கண்காட்சி.. சென்னையில்.. செப்டம்பர் 21 முதல் கோலாகல தொடக்கம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்