அரை இறுதியில் இந்தியா.. அந்தோ பரிதாபம் இலங்கை.. 302 ரன்கள் வித்தியாசத்தில் படு தோல்வி

Nov 02, 2023,07:21 PM IST

மும்பை:  மும்பையில் இன்று நடந்த அதிரடியான ஆட்டத்தில், இந்தியாவின் அபாரமான பந்து வீச்சால் 19.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 55 ரன்கள் மட்டுமே எடுத்து, 302 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கை படு தோல்வியைச் சந்தித்தது. இந்தியா பிரமாண்ட வெற்றியை ஈட்டியது.


இந்த பிரமாண்ட வெற்றியின் மூலம் இந்தியா நடப்பு உலகக் கோப்பைத் தொடரின் அரை இறுதிப் போட்டிக்கு கம்பீரமாக தகுதி பெற்றது. இன்றைய போட்டியில், பேட்ஸ்மேன்கள் ஒருபக்கம் அடித்து நொறுக்க, பந்து வீச்சாளர்கள் இலங்கையின் சேசிங்கை முறித்துப் போட்டி நிலை  குலைய வைத்து விட்டனர்.


நடப்பு உலகக் கோப்பைக் கிரிக்கெட் தொடரில் ஒரு போட்டியில் கூட தோற்காமல் அட்டகாசமாக ஆடி வருகிறது இந்தியா. இந்த நிலையில் இன்று இலங்கை அணியை அது சந்தித்தது. டாஸ் வென்ற இலங்கை கேப்டன் குஷால் மென்டிஸ் முதலில் பந்து வீச்சைத் தேர்ந்தெடுத்தார். ஆனால், ஏன்டா பந்து வீச்சைத் தேர்வு செய்தோமோ என்று அவரை நோக வைத்து விட்டனர் இந்திய பேட்டர்கள்.




இந்தியாவின் பேட்டிங் அதகளத்தைப் பார்த்து இலங்கை அணி மட்டுமல்ல, மும்பை ரசிகர்களும் கூட மிரண்டு போய் விட்டனர். முதல் பந்திலிருந்து வெளுக்கத் தொடங்கிய இந்தியா, கடைசி வரை விடாமல் விரட்டியடித்து ரன்களைக் குவித்து இலங்கை அணியை ஸ்தம்பிக்கச் செய்து விட்டனர்.


50 ஓவர்கள் முழுமையாக ஆடிய இந்தியா 8 விக்கெட்களை மட்டுமே இழந்து 357 ரன்களைக் குவித்தது.  கேப்டன் ரோஹித் சர்மா மட்டும்தான் சொதப்பினார். 2 பந்துகளைச் சந்தித்த அவர் 4 ரன்களில் அவுட்டானார். ஆனால் சுப்மன் கில்லும், விராட் கோலியும் இணைந்து இலங்கையைப் பொளந்து விட்டனர். 


சுப்மன் கில்லும், விராட் கோலியும் இணைந்து வெளு வெளு என்று வெளுக்க இலங்கை பந்து வீச்சாளர்கள் இவர்களைப் பிரிக்க முடியாமல் திணறிப் போய் விட்டனர். கில் 92 பந்துகளில் 92 ரன்களைக் குவித்தார். விராட் கோலி 94 பந்துகளில் 88 ரன்களைக் குவித்தார்.  அடுத்து வந்த கே.எல்.ராகுல் 19 பந்துகளில் 21, சூர்ய குமார் யாதவ் 9 பந்துகளில் 12 ரன்கள், ரவீந்திர ஜடேஜா வான வேடிக்கை காட்டி 24 பநதுகளில் 35 ரன்களைக் குவித்தனர்.


இலங்கை பந்து வீச்சாளர்களைப் பொறுத்தவரை அந்த அணியின் நம்பிக்கை நட்சத்திரமான தில்ஷன் மதுஷங்கா மட்டுமே சிறப்பாக பந்து வீசினார். 5 விக்கெட்களை அவர் சாய்த்தார். ஆனால் 80 ரன்களை விட்டுக் கொடுத்தார்.




இதையடுத்து 358 என்ற இமாலய இலக்கை சேஸ் செய்யத் தொடங்கிய இலங்கை அணி எடுத்த எடுப்பிலேயே அடுத்தடுத்து விக்கெட்களைப் பறி கொடுத்து கலங்கிப் போய் விட்டது. ஜஸ்ப்ரீத் பும்ரா தனது முதல் ஓவரின் முதல் பந்திலேயே பதும் நிசங்காவை டக் அவுட் செய்தார். அவர் வீசிய ஒவ்வொரு பந்துமே விக்கெட்டைக் குறி வைத்துப் பாய்ந்து வந்ததால் இலங்கை பேட்ஸ்மேன்களால் ரன்னே எடுக்க முடியவில்லை.


மறுபக்கம் முகம்மது சிராஜும் வெறியாட்டம் போட்டு விட்டார். அடுத்தடுத்து 3 விக்கெட்களைக் காலி செய்து  இலங்கை பேட்டர்களை நிலைகுலைய வைத்து விட்டார் சிராஜ்.  அதன் பின்னர் வந்தார் முகம்மது ஷமி.  புயல் போல வந்த அவர் அடுத்தடுத்து விக்கெட்களைச் சாய்க்க இலங்கை முற்றிலும் முறிந்து போனது. 19.1 ஓவர்களில் 55 ரன்களை மட்டுமே எடுத்து சுருண்டு போனது இலங்கை. முகம்மது ஷமி சிறப்பாக பந்து வீசி 5 விக்கெட்களையும், முகம்மது சிராஜ் 3 விக்கெட்களையும் வீழ்த்தியது. ஜஸ்ப்ரீத் பும்ராவுக்கு ஒரு விக்கெட் கிடைத்தது.

சமீபத்திய செய்திகள்

news

Kooran movie.. நாம எத்தனை வழக்கு போடறோம்.. ஒரு நாய் நம்ம மேல கேஸ் போட்டா எப்படி இருக்கும்!

news

வங்கக் கடல் காற்று சுழற்சி.. தமிழ்நாடு, இலங்கையை நோக்கி நகரக் கூடும்.. வானிலை மையம்

news

ஏக்கம் (ஒரு பக்க சிறுகதை)

news

நிக்கோபார் தீவு அருகே.. காற்றழுத்தத் தாழ்வு உருவாக ஆரம்பித்து விட்டது.. தமிழ்நாடு வெதர்மேன்

news

நவம்பர் 22 - இன்றைய நல்ல நேரம், செய்ய வேண்டிய வழிபாடு

news

மங்களகரமான வெள்ளிக்கிழமையில் பண மழையில் நனையப் போகும் 2 ராசிக்காரர்கள்

news

Orange alert: தமிழ்நாட்டில் ஒரிரு இடங்களில் 26 மற்றும் 27 தேதிகளில் மிக கன மழை எச்சரிக்கை!

news

ஜாமின் கிடைத்ததைத் தொடர்ந்து.. புழல் சிறையிலிருந்து வெளியே வந்தார் நடிகை கஸ்தூரி

news

அமெரிக்கா கோர்ட் பிடிவாரண்ட்.. அதானியை உடனடியாக கைது செய்ய வேண்டும்.. ராகுல்காந்தி ஆவேசம்

அதிகம் பார்க்கும் செய்திகள்