சென்னை: இது மகனுக்குத் தனயன் எழுப்பிய மண்டபமல்ல தலைவனுக்குத் தொண்டன் கட்டிய தாஜ்மஹால் என புதுப்பிக்கப்பட்ட கலைஞர் கருணாநிதி நினைவிடத்தை பார்த்து கவிஞர் வைரமுத்து புகழாரம் சூட்டியுள்ளார்.
தமிழக முன்னாள் முதல்வர் கலைஞர் கடந்த 2018 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 7ஆம் தேதி உடல் நலம் பாதிக்கப்பட்டு காலமானார். நீதிமன்ற உத்தரவின்படி அவருக்கு சென்னை மெரினா கடற்கரையில் இடம் ஒதுக்கப்பட்டு அங்கு அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டது. இதை அடுத்து 2021 ஆம் ஆண்டு தமிழக அரசு சார்பில் நினைவிடம் அமைக்க நிதி ஓதுக்கப்பட்டது. அதன்படி தமிழக அரசு சார்பில் 2.21 ஏக்கர் பரப்பளவில் 39 கோடியில் இந்த நினைவிடம் அமைக்கப்பட்டது. ஏற்கனவே இருந்த நினைவிடம் புனரமைக்கப்பட்டு இன்று மாலை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார்.
முன்னதாக இதுகுறித்து சட்டசபையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசும்போது, நின்ற தொகுதிகளில் எல்லாம் வென்ற தலைவர். நவீன தமிழ்நாட்டை உருவாக்கிய தலைவர். கலைஞர் நினைவிடம் முழுமை அடைந்திருக்கிறது. அது மட்டுமல்ல கலைஞரை உருவாக்கிய நமது தமிழ்நாட்டிற்கு தமிழ்நாடு என்று பெயர் சூட்டிய பேரறிஞர் அண்ணாவின் நினைவிடமும் புதுப்பிக்கப்பட்டுள்ளது. புதுப்பிக்கப்பட்ட அண்ணாவின் நினைவிடமும் கலைஞரின் நினைவிடமும் வருகின்ற பிப்ரவரி 26ஆம் தேதி இரவு 7 மணிக்கு திறக்கப்பட உள்ளது. நிகழ்ச்சிக்கு அழைப்பிதழ் அச்சிடப்படவில்லை. விழாவாக கொண்டாட விரும்பவில்லை. நிகழ்ச்சியாக நடத்த முடிவெடுத்துள்ளோம். ஆகவே நிகழ்ச்சிக்கு எதிர்க்கட்சி மற்றும் தோழமைக் கட்சி உட்பட எல்லா கட்சி உறுப்பினர்களும் வர வேண்டும் என்று சபாநாயகர் மூலம் கேட்டுக்கொள்கிறேன் என்று தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், அந்த நினைவிடத்தை பார்த்துவிட்டு கவிஞர் வைரமுத்து தனது எக்ஸ் தள பக்கத்தில் கவிதை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்தக் கவிதை:
கலைஞர் நினைவிடம்
கண்டு சிலிர்த்தேன்
கலைஞரின்
கையைப் பிடித்துக்கொண்டே
கலைஞர் நினைவிடம்
சுற்றிவந்த உணர்வு
இது மகனுக்குத்
தனயன் எழுப்பிய மண்டபமல்ல
தலைவனுக்குத்
தொண்டன் கட்டிய தாஜ்மஹால்
"இப்படியோர் நினைவிடம்
வாய்க்குமென்றால்
எத்தனை முறையும் இறக்கலாம்"
கலைஞர் கண்டிருந்தால்
கவிதை பாடியிருப்பார்
உருவமாய் ஒலியாய்
புதைத்த இடத்தில்
கலைஞர் உயிரோடிருக்கிறார்
உலகத் தரம்
நன்றி தளபதி.
AIADMK.. கள ஆய்வுக் கூட்டங்களில் தொடர்ந்து மோதல்.. வெடிக்கும் தொண்டர்கள்.. திகைப்பில் தலைமை!
Lunch box recipe: கோவக்காய் வேர்க்கடலை பொறியல்.. ஒரு விசில்.. ஒரு பொறியல்.. ஓஹோ டேஸ்ட்!
Special Story: சிங்கம் கழுகு கூட்டணியா.. சிலாகிக்கும் NTK.. சீமான் விளக்கம்.. ரஜினி சந்திப்பு ஏன்?
ரஜினியை சீமான் சந்தித்து விட்டு வந்த மறு நாளே.. கோவை வடக்கு நாதக நிர்வாகிகள் கூண்டோடு விலகல்!
Drumsticks price.. என்னடா இது.. முருங்கைக்கு வந்த கிராக்கி.. விர் விலை உயர்வு.. இல்லத்தரசிகள் கவலை!
Kooran movie.. நாம எத்தனை வழக்கு போடறோம்.. ஒரு நாய் நம்ம மேல கேஸ் போட்டா எப்படி இருக்கும்!
வங்கக் கடல் காற்று சுழற்சி.. தமிழ்நாடு, இலங்கையை நோக்கி நகரக் கூடும்.. வானிலை மையம்
ஏக்கம் (ஒரு பக்க சிறுகதை)
நிக்கோபார் தீவு அருகே.. காற்றழுத்தத் தாழ்வு உருவாக ஆரம்பித்து விட்டது.. தமிழ்நாடு வெதர்மேன்
{{comments.comment}}