சென்னையே மீனவ கிராமம்தானே.. மக்களை ஏன் அப்புறப்படுத்தணும்.. வினோதினி கேள்வி!

Apr 19, 2023,10:12 AM IST

சென்னை:  சென்னை, நகரமாவதற்கு முன்பு அது ஒரு மீனவ கிராமமாகத்தானே இருந்தது. வாழ்விடத்தை அழித்து விட்டு அதை அழகுபடுத்த வேண்டியது ஏன் என்று எனக்குப் புரியவில்லை என்று நடிகை வினோதினி வைத்தியநாதன் கேட்டுள்ளார்.

சென்னை மெரீனா அருகில் உள்ள லூப் சாலையில் உள்ள மீனவர்களின் மீன் விற்பனை கடைகளை அப்புறப்படுத்த சென்னை மாநகராட்சி நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்த நடவடிக்கைக்கு சென்னை உயர்நீதிமன்றமும் அனுமதி அளித்துள்ளது. இது பெரும் சர்ச்சையாகியுள்ளது. மீனவர்கள் சாலைகளை மறித்து போராட்டங்களில் குதித்துள்ளனர். இவர்களின் போராட்டத்துக்கு ஆதரவும் பெருகி வருகிறது.



இந்த விவகாரம் தொடர்பாக நடிகை வினோதினி வைத்தியநாதன் தனது கருத்தை தெரிவித்து பதிவு போட்டுள்ளார். அவரது பதிவு இதோ:

நான் குடியிருக்கும் பகுதியிலுள்ள Housing boardஐ சில மாதங்களுக்கு முன் இடிக்க ஆரம்பித்தார்கள். இடிக்கப்போகிறோமென்று 4-5 வருடங்களாக சொல்லிவந்தனர். ஆனால் அங்குள்ள மக்கள் கொரொனாவாலும் வறுமையாலும் பாதிக்கப்பட்டு வீடுகளை காலிசெய்வதில் தாமதம் ஏற்பட்டுக்கொண்டே இருந்தது. இப்பொழுதும் பலர் வீட்டு வாடகைக்கும் advanceஉக்கும் பணமில்லாமல் கந்துவட்டியில் சிக்கித் தவிக்கின்றனர். அங்கு குடியிருந்த எனக்கு மிகவும் பரிச்சயமான பாய் அம்மா (தள்ளுவண்டி கடை வைத்திருப்பவர்), நீலமேகம் (காய்லாங்கடை அண்ணன்), சுமதி (வீட்டு வேலை செய்யும் அம்மா), லதா (பூக்கட்டுபவர்) என்று 1000 குடும்பங்களுக்கு மேல் வேறு இடங்களுக்கு புகலிடம் தேடிச்சென்று அடிப்படை வாழ்வாதாரத்தைத் தொலைத்து எப்படியோ வாழ்ந்துகொண்டிருக்கின்றனர். 

நொச்சிக்குப்பத்து ஆட்களைப்பார்க்கும் பொழுது எனக்கு இவர்கள்தான் நினைவுக்கு வருகின்றனர். அது என்ன மரீனாவை அழகுபடுத்துவது? Aesthetics vs Livelihood, அதாவது, அழகியலுக்கும் வாழ்வாதாரத்துக்கும் நடுவில் தேர்வு வந்தால், வாழ்வாதாரத்துக்கு தானே priority தர வேண்டும்? 

சென்னை city என்பதற்கு முன் ஒரு fishing village தானே? முதலில் இங்கு என்ன இருந்தது? 

19ஆம் நூற்றாண்டில் ஹார்பர் வந்ததால் பல மீனவ communities அங்கிருந்து அகற்றப்பட்டனர். அதன் பிறகு 1980களில் மீனவர்கள் தங்களை மாய்த்துக்கொண்டும் சுடப்பட்டும் தங்களுடைய இடத்தைப் பாதுகாக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. இப்பொழுது இந்த அழகு படுத்தும் பணி. இப்பொழுது கடைகள் போட்டிருக்கும் மீனவர்கள் புதிதாகக் கட்டப்பட்டுக்கொண்டிருக்கும் மீன் மார்க்கெட்டில் licenseஓடு மீன் விற்கலாம்தான். ஆனால் 1500 stalls இருந்த இடத்தில் 900 stallsக்குதான் license தரப்படப் போகிறதாம். அதிலும் 40% புதிய தொழில்முனைவோருக்குக் கொடுக்கப்பட இருக்கின்றன. மற்றவர்கள் எங்கே செல்வார்கள்? எப்போதிலிருந்து இது நடக்கப்போகிறது?

Loop Roadஇல் traffic பிரச்சினை ஏற்படுவதால்தான் இந்த அழகுபடுத்தும் நடவடிக்கையென்றால் இதற்கு மாற்று தீர்வாக ஒரு பெரிய மேம்பாலம் அமைக்க முடியாதா? மேம்பாலத்திற்குக் கீழ் natural habitat fish market, மேலே வாகனங்கள் நிம்மதியாக செல்லலாம். Vincent D’Souza சொல்வதோடு சேர்த்து… சென்னை என்றால் CSK, filter coffee, Kapaaleeswarar temple மட்டுமல்ல. நொச்சிக்குப்பமும் நடுக்குப்பமும் மீனவர்களும் மீன்வாடையும் கூட. மேல் கூறியவற்றைவிட பின் சொன்னதுதான் சென்னையின் முதல் அடையாளமாகவும் இருந்தது. 



என் வீட்டுப் பூனைகளுக்கு இதே மீன் கடைகளில் மீன் வாங்கிவிட்டு மரீனாவில் காற்று வாங்கிய ஒரு மாலைப்பொழுது.. என்று தனது நினைவுகளையும், கருத்துக்களையும் மெரீனா காற்றோடு கலந்து பதிவிட்டுள்ளார் வினோதினி.

சமீபத்திய செய்திகள்

news

ஒரே நாடு ஒரே தேர்தல் சாத்தியமற்றது.. கூட்டாட்சி தத்துவத்தை சிதைக்கும்.. முதல்வர் மு.க.ஸ்டாலின்

news

மகாத்மா காந்தி பிறந்த மாதத்தில்.. புதிய மதுபானக் கொள்கையை அறிமுகப்படுத்தும் ஆந்திர அரசு!

news

ஐபிஎல் 2025 வருது வருது.. நவம்பரில் வீரர்கள் ஏலம்.. துபாயா, தோஹாவா இல்லாட்டி அபுதாபியா?

news

பெண் உதவியாளரை நாசப்படுத்தியதாக.. அரபி குத்து, காவாலா பாடல் புகழ் ஜானி மாஸ்டர் கைது!

news

சபாஷ் பாஸ்கர்.. மாற்றுத் திறனாளி பயணியிடம் காட்டிய கனிவு.. வேற லெவல் மாற்றத்தில் சென்னை எம்டிசி!

news

வங்கதேசத்துடன் கிரிக்கெட் போட்டி கூடாது.. சென்னையில் போராட்டத்தில் குதித்த இந்து மக்கள் கட்சி

news

என்ன தலைவா.. கடைசியில நீயும் அரசியல்வாதி ஆகிட்டியே?.. விஜய் போட்ட டிவீட்.. கதறும் கட்சிகள்!

news

அதீத பணிச்சுமை.. வீடு திரும்பிய இளம் பெண்.. படுக்கையில் சரிந்து பரிதாப மரணம்!

news

நவராத்திரி விற்பனை கண்காட்சி.. சென்னையில்.. செப்டம்பர் 21 முதல் கோலாகல தொடக்கம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்