விஜய்யின் த.வெ.க.கட்சி மாநாட்டிற்கு காவல்துறை அனுமதி.. உற்சாகத்தில் நண்பாஸ் & நண்பீஸ்!

Sep 26, 2024,01:01 PM IST

சென்னை:   தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாட்டிற்கு, விழுப்புரம் மாவட்ட காவல்துறை அனுமதி வழங்கியதுள்ளது. இதனால், த.வெ.க கட்சி தொண்டர்கள் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர்.


தமிழ் திரையுலகில் முக்கிய நட்சத்திரமாக வலம் வருபவர்  நடிகர் விஜய். இவர் கடந்த பிப்ரவரி மாதம் 2ம் தேதி தமிழக வெற்றிக்கழகம் என்ற கட்சியை தொடங்கினார். அதன்பின்னர் கட்சி பணிகளை ஒவ்வொன்றாக செய்து வருகிறார். இந்நிலையில், கடந்த சில வாரங்களுக்கு முன்பு கட்சிக்கொடி மற்றும் பாடலை வெளியிட்டார். மறுபக்கம் தவெக கட்சி சார்பில் மாநாடு நடத்த இடம் தேர்வு செய்யப்பட்டது. அதன்படி விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் கட்சி மாநாடு விக்கிரவாண்டியில் அக்டோபர் 27ம் தேதி நடைபெறும் என்று அக்கட்சி தலைவர் விஜய் அறிவித்திருந்தார்.


இதனையடுத்து, கட்சி மாநாடு நடத்த விழுப்புரம் காவல் துறையினரிடம் அனுமதி கோரி விண்ணப்பித்திருந்தார் அக்கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த். விண்ணப்பத்தை ஏற்ற காவல் துறை தவெக கட்சி மாநாட்டை நடந்த நிபத்தனைகளுடன் அனுமதி வழங்கியுள்ளது. ஏற்கனவே வழங்கப்பட்ட 33 நிபந்தனகளை மீண்டும் சுட்டிக்காட்டி காவல்துறை இந்த அனுமதியை வழங்கியுள்ளது. மேலும், 33 நிபந்தனைகளில் 17 நிபந்தனைகளை கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும் என விழுப்புரம் மாவட்ட காவல் துறை உத்தரவிட்டுள்ளது.




நிபந்தனைகள் என்னென்ன?


சில முக்கிய நிபந்தனைகளை காவல்துறை வலியுறுத்தியுள்ளது. இவற்றைக் கட்டாயம் கடைப்பிடிக்குமாறும் அறிவுறுத்தியுள்ளது. அந்த நிபந்தனைகள்:


உரிய வாகன நிறுத்துமிடத்தில் தான் வாகனங்களை நிறுத்த வேண்டும்


மருத்துவ உதவிக்கான ஆம்புலன்ஸ் வசதி, தீயணைப்பு வாகனம் மாநாடு நடக்கும் இடத்தில் இருக்க வேண்டும்


போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுத்தக் கூடாது


போதுமான கழிவறை வசதி வழங்கப்பட வேண்டும்


குடிநீர் மற்றும் உணவு சுகாதாரமானதாக இருக்க வேண்டும்


விஜய் வரும் வழிகளில் இருபுறமும் தடுப்பு ஏற்படுத்துதல் அவசியம்


பேனர்கள் வரவேற்பு வளைவுகளை போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுத்தாமல் அமைத்தல் வேண்டும் 


ஆகியவையே அவை. இவை உள்பட 17 நிபந்தனைகளை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும் என காவல் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


விஜய் கோரிக்கை


இதற்கு முன்னதாகவே மாநாட்டிற்கு மது அருந்தி வரக்கூடாது உள்ளிட்ட நெறிமுறைகளை விஜய் தனது கட்சித் தொண்டர்களுக்கு மாவட்ட நிர்வாகிகள் மூலமாக அறிவுறுத்தியுள்ளார் என்பது நினைவிருக்கலாம்.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

தோனி அதிரடி.. கடைசி நேர போராட்டம் வீண்.. மீண்டும் ஒரு தோல்வி.. ஏமாற்றத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ்

news

தமிழக அரசு நிறைவேற்றிய மசோதாக்களை ஜனாதிபதிக்கு அனுப்பியது சட்டவிரோதம்.. உச்சநீதிமன்றம்

news

உச்சநீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில்.. இனி முதல்வர் ஸ்டாலினே பல்கலைக்கழக வேந்தர்.. பி.வில்சன்

news

உச்சநீதிமன்றத் தீர்ப்பு வரவேற்கத்தக்கது .. துணைவேந்தர்களை உடனே நியமிக்க வேண்டும்.. டாக்டர் ராமதாஸ்

news

Tamil Nadu leads.. பேரறிவாளவன் வழக்குக்குப் பின்.. சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்திய உச்சநீதிமன்றம்!

news

ஆளுநருக்கு எதிரான.. உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வரலாற்று சிறப்புமிக்கது‌.. முதல்வர் ஸ்டாலின் மகிழ்ச்சி!

news

Summer Food tips.. அடிக்கும் அதிரடி வெயிலுக்கு.. கருப்பு கவுனி அரிசி மோர் கூழ் சூப்பரப்பு!

news

ஏப்ரல் 10.. சம்பவம் காத்திருக்கு.. குட் பேட் அக்லி படத்திற்கு.. யுஏ சான்றிதழ்.. ரசிகர்கள் வெயிட்டிங்

news

ஆளுநர் ஆர்.என். ரவியை உடனடியாகப் பதவி நீக்கம் செய்ய வேண்டும்: திருமாவமவன்!

அதிகம் பார்க்கும் செய்திகள்