பாரம்பரியத்தையும், கலாச்சாரத்தையும் இறுக்கிப் பிடித்து.. உயர்த்தி நிற்கும் கிராமத்து கொடை விழாக்கள்

May 05, 2024,08:27 AM IST

கிராமங்களில் இன்று வரை நடைபெறும் ஒரு முக்கியமான அம்சம்.. கொடை விழாக்கள் எனப்படும் கிராமத்து கோவில் விழாக்கள்தான். கடும் வெப்பமும், அனலும் வீசும் கோடைகாலத்தில்தான் பெரும்பாலும் கொடை விழாக்கள் நடைபெறுவது வழக்கம். மக்கள் மனசும், கடவுளின் மனசும் ஒரு சேர குளிரும் தருணம்தான் இந்த கொடை விழாக்கள்.


சமுதாயம் மற்றும் பராம்பரிய,  கலாச்சாரங்களை பறை சாற்றும் வகையில் இந்த கொடை விழாக்கள் உள்ளன. இது தான்  நமது தமிழ்நாட்டின்  பண்பாடுக்கு சிறந்த எடுத்துகாட்டும் கூட. குறிப்பாக கிராமிய இசை கலையான பறை, தப்பாட்டம்,  நாதஸ்வரம், பக்கவாத்தியம்,  கொட்டு மேளங்கள் இன்றும் நம்மூர் திருவிழாக்கள் மற்றும்  கொடை  விழாக்களில் கோலோச்சுவதைப் பார்க்கலாம். காலங்காலமாக தொடரும் மற்றுமொறு வழக்கம், வில்லுப்பாட்டு. இதில் தெய்வங்களின் கதையை பாட்டாக  பாடுவர். கேட்பதற்கும் ரசிக்கும்படியாக இருக்கும். 




இன்று சமுக வலைதளங்களில்தான் நம்மில் பெரும்பாலானோர்  அதிக ஆர்வம் காட்டுகின்றனர். நம் நாட்டு கிராமங்களில் நடைபெறும்  கொடை விழாவிற்கு அயல்நாட்டினர் கூட வந்து பார்த்து ரசிக்கிறார்கள், வியப்படைகிறார்கள். சமுக வலைத்தொடர்பு மூலம் நமது திருவிழாக்களை அவர்கள் அறிந்து கொண்டு இங்கு வருகின்றனர். நம்மாட்களும் சும்மா இருப்பதில்லையே.. "ஏலேய் இது எங்க ஊர் திருவிழா" என்று ரீல்ஸ்களிலும்  விழாக்களை போட்டு விடுகிறார்கள். இதுவும் டிரெண்டிங்கில் இடம் பிடிக்க தவறுவதில்லை. 


முந்தைய தலை முறையினர் முதல் தற்போது உள்ள 2கே கிட்ஸ்கள்  வரை கொடை விழாக்களில் பெரும் ஆர்வம் காட்டுகின்றனர். இந்த  கொடை விழாவில் சாமியாட்டம், கிடாவெட்டு, ஏன் சில பராம்பரிய நிகழ்வுகளும் இடம் பிடிக்க தவறுவதில்லை. கொடை விழா அந்தந்த சமுதாயத்தினரால்  நடத்தப்படுவது என்றால் ஊர் திருவிழா பொதுவாக ஊர் பொதுமக்களால் நடத்தப்படுவது ஆகும். இது பொதுவாக பத்து நாட்கள் நடக்கும். இந்து மற்றும் கிறிஸ்துவ கோவில்களும் இதில் அடங்கும்.


விழா தொடங்கும் நாளன்று அந்த அந்த வழிபாட்டு தலத்துகுரிய கொடியை  கொடி மரத்தில் ஏற்றுவர். பிறகு ஆகம விதிப்படி காலை, மாலை பூஜைகள் நடை பெறும். மாலை வேளைகளில் மக்கள் மனதை கவரும் கலை நிகழ்ச்சிகள் இடம் பெறும். இதிலும் கிராமிய கலைஞர்கள் கலந்து  கொள்கின்றனர். கரகாட்டம், பறையாட்டம், செண்டை மேள அணிவகுப்பு, பல நடன கலைஞர்களின் அணிவகுப்பு ஊர் திருவிழாக்களில் இடம் பெயர தவறுவதில்லை.  என்னதான் தற்போது வணிக ரீதியாக பல கடைகள் வந்தாலும் ஆன்லைன் ஷாப்பிங் வந்தாலும்  திருவிழா கடைகளுக்கு மக்களிடம் மவுசு இன்னும் இருக்கத்தான் செய்கிறது. 




குறிப்பாக திருவிழா கடைகளில் மட்டுமே காணப்படும் அச்சு மெஹந்தி , ஹார்ட் பலூன், மற்றும் இனிப்பு வகையான  வெள்ள ஜிலேபி  என்று அழைக்கப்படும்  சீனி மிட்டாய் ஆகியவற்றைச் சொல்லலாம். சிறுவர் சிறுமியருக்கான விளையாட்டுகளும் களை கட்டியிருக்கும். என்னதான் நகர்ப்புறங்களில் தனியாக பார்க் இருந்தாலும், ஷாப்பிங் மால்கள் இருந்தாலும் கிராமபுறங்களில் திரு விழா கடைகள் மற்றும் திரு விழா  நிகழ்வுகள் என்றுமே மக்களுக்கு மகிழ்ச்சி அளிப்பவைதான். தற்காலிக சந்தோஷம்தான் என்றாலும் கூட இது மனதை அள்ளும் முக்கிய நிகழ்வுகளாக மாறிப் போயுள்ளன. 


திருவிழாவின் முக்கிய நிகழ்வுகளான  தேர் மற்றும் தெப்பதிருவிழா நம் முன்னோர்களை நினைவுபடுத்துவது மட்டுமல்லாமல் அவர்களின் கட்டிட கலையை தேர் சிற்பங்கள் மூலம் அறிந்து கொள்ள வகை செய்கிறது. இந்தியாவின் பன்முகக் கலாச்சாரமானது, வெளி  நாட்டவரையும் கவர்ந்த ஒன்றாகும். இன்றும் சுற்றுலா பயணிகள் நம் நாட்டு பராம்பரிய விழாக்களை காண வருகின்றனர். கொடை விழா மற்றும் ஊர் திருவிழா  ஆகியவை அவர்களுக்கு மிகப் பெரிய விந்தையாகவும், ஆச்சரியமாகவும் உள்ளது. இந்த பாரம்பரியம் தொடர வேண்டும்.. அதுதான் நமது மண்ணின் ஈரத்தை நாமும் பாதுகாக்க உதவும், பாரம்பரியமும் தொடரும். கொடை விழா நடந்தால் மிஸ் பண்ணிடாதீங்க.. ஓடிப் போய் வேடிக்கை பார்த்தும்,  அனுபவித்தும் மகிழுங்க.


- சுஜித்ரா


சமீபத்திய செய்திகள்

news

நவம்பர் 22 - இன்றைய நல்ல நேரம், செய்ய வேண்டிய வழிபாடு

news

மங்களகரமான வெள்ளிக்கிழமையில் பண மழையில் நனையப் போகும் 2 ராசிக்காரர்கள்

news

Orange alert: தமிழ்நாட்டில் ஒரிரு இடங்களில் 26 மற்றும் 27 தேதிகளில் மிக கன மழை எச்சரிக்கை!

news

ஜாமின் கிடைத்ததைத் தொடர்ந்து.. புழல் சிறையிலிருந்து வெளியே வந்தார் நடிகை கஸ்தூரி

news

அமெரிக்கா கோர்ட் பிடிவாரண்ட்.. அதானியை உடனடியாக கைது செய்ய வேண்டும்.. ராகுல்காந்தி ஆவேசம்

news

விஜய் பங்கேற்கும்.. அம்பேத்கர் புத்தக வெளியீட்டு விழாவில் கலந்து கொள்ள மாட்டார் திருமாவளவன்!

news

தனுஷ் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் விவாகரத்து வழக்கில் இறுதிக் கட்டம்.. 27ம் தேதி தீர்ப்பு வழங்கப்படுகிறது!

news

கடுப்பா இருக்கா பாஸ்.. வாங்க கடிக்கிறோம்.. கலகலன்னு சிரிங்க.. மைன்ட் free ஆகி.. face பிரெஷ்ஷாய்ரும்!

news

ஆசிரியை ரமணியின் குடும்பத்திற்கு ரூ. 5 லட்சம் உதவி.. தாயாரிடம் வழங்கினார் அமைச்சர் கோவி.செழியன்

அதிகம் பார்க்கும் செய்திகள்