விக்கிரவாண்டி இடைத் தேர்தல்.. எங்களோட வேட்பாளர் அன்னியூர் சிவா.. திமுக செம ஃபாஸ்ட்!

Jun 11, 2024,06:12 PM IST

விழுப்புரம்: விக்கிரவாண்டி சட்டமன்ற இடைத்தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அத்தொகுதியில் திமுக வேட்பாளராக அன்னியூர் சிவா போட்டியிடுவார் என முதல்வர் மு க ஸ்டாலின் அறிவித்துள்ளார்.


திமுக சட்டமன்ற உறுப்பினராக இருந்த விக்கிரவாண்டி தொகுதி வேட்பாளர் புகழேந்தி கடந்த ஏப்ரல் 6ஆம் தேதி இறந்ததை அடுத்து, அத்தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இங்கு ஜூலை 10ம் தேதி இடைத் தேர்தல் நடைபெறவுள்ளது. வேட்பு மனு தாக்கல் ஜூன் 14ஆம் தேதி தொடங்கி ஜூன் 21 ஆம் தேதி வேட்புமனு தாக்கலுக்கான கடைசி தேதி ஆகும். திமுக கூட்டணியில் திமுகதான் இங்கு சிட்டிங் எம்எல்ஏ என்பதால் அக்கட்சியே மீண்டும் போட்டியிடுகிறது.




இன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் மு க ஸ்டாலின் முக்கிய அமைச்சர்களுடன் தீவிர ஆலோசனை மேற்கொண்டார். இந்த ஆலோசனைக்குப் பிறகு விக்கிரவாண்டி தொகுதியில் திமுக வேட்பாளராக அன்னியூர் சிவா களமிறங்குவதாக திமுக தலைமை கழகம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. விக்கிரவாண்டி தொகுதி சட்டமன்ற இடைத்தேர்தலில் திமுக சார்பில் அன்னியூர் சிவா கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் போட்டியிடுவார் என திமுக தலைவரும், முதல்வருமான மு க ஸ்டாலின் அறிவித்துள்ளார்.


விக்கிரவாண்டி தொகுதி திமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளள அன்னியூர் சிவா, திமுகவின் விவசாய  தொழிலாளர் அணி மாநில செயலாளராக இருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட மறு நாளே தனது வேட்பாளரை அறிவித்து விட்டது. இன்று காலையில்தான் புதிய நிர்வாகிகளும் மாவட்ட அளவில் மாற்றப்பட்டனர். தேர்தல் களத்தில் திமுக காளைப் பாய்ச்சலை கையில் எடுத்துள்ளதால், கட்சியினர் உற்சாகமடைந்துள்ளனர்.

சமீபத்திய செய்திகள்

news

நீட் விவகாரத்தில் ஏப்ரல் 9ல்.. சட்டமன்ற அனைத்து கட்சி ஆலோசனை கூட்டம்.. முதல்வர் மு.க ஸ்டாலின்

news

தமிழ்நாட்டில் இன்றும் .. 17 மாவட்டங்களில்‌.. கன மழைக்கு வாய்ப்பு.. சென்னை வானிலை ஆய்வு மையம்!

news

பாஜக தலைவர் மாற்றம் உறுதி... அண்ணாமலையே சூசகமாக தகவல்!

news

நெருப்புடா.. நெருங்குடா.. இன்று முதல் விஜய்க்கு ஒய் பிரிவு பாதுகாப்பு அமல்..!

news

நாளும் நல்லதுசெய்யும் முதலமைச்சர் இந்த இரண்டு செயல்களாலும் இன்னும் இன்னும் உயர்கிறார்: வைரமுத்து

news

வந்தோம் போனோம் என்று இருக்க மாட்டோம்.. இஸ்லாமியர்களுக்கு உறுதுணையாக இருப்போம் - தவெக

news

எஸ்ஐ பணியில் சேர ஆசையா?.. தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் வெளியிட்ட சூப்பர் அப்டேட்!

news

உங்கள் வாழ்வில் இருந்து ஒருவரை நீக்கும்போது.. அதன் மதிப்பை உடனடியாக அறிய மாட்டீர்கள்.. செல்வராகவன்!

news

கூலி படத்தின் முக்கிய அப்டேட் இன்று வெளியீடு.. வெறி வெயிட்டிங்கில் ரசிகர்கள்!!

அதிகம் பார்க்கும் செய்திகள்