ஷ்ஷ்ஷ்ஷ்.. நைட் வந்தாச்சு.. ரோவரும், லேண்டரும் தூங்கறாங்க.. இஸ்ரோ உருக்கம்!

Sep 03, 2023,02:59 PM IST

ஸ்ரீஹரிகோட்டா: நிலவில் தற்போது இரவு நேரம் என்பதால் விக்ரம் லேண்டரும், பிரக்யான் ரோவரும் தங்களது பணிகளை முடித்துக் கொண்டு தூக்க நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.



நம்முடைய பூமியில் 24 மணி நேரம் என்பது பகல் 12 மணி நேரம், இரவு 12 மணி நேரம் என்பதை உள்ளடக்கியதாகும். இதுவே நிலவில் எப்படி என்றால் பகல் நேரமானது 14 நாட்களாகவும், இரவு நேரம் என்பது 14 நாட்களையும் உள்ளடக்கியதாகும். அதாவது நமக்கு 24 மணி நேரம் ஒரு நாள் என்றால், நிலாவில் 28 நாட்கள்தான் ஒரு நாள் கணக்காகும்.


இப்போது நமது சந்திரயான் 3 நிலவில் போய் இறங்கியுள்ள நேரத்தில் அங்கு இரவு தொடங்கியுள்ளது. இந்த இரவானது, நமது பூமியின் கணக்குப்படி 14 நாட்கள் நீடிக்கும். எனவேதான் சீனா நம்மை கேலி செய்தபோது, ஒரு இரவைத் தாண்டுமா சந்திரயான் 3 பார்க்கலாம் என்று நக்கலடித்திருந்தது.




இந்த இரவைத்தான் தற்போது விக்ரம் லேண்டரும், பிரக்யான் ரோவரும் சந்தித்துள்ளனர். அவர்கள் போய் இறங்கிய நிலையில் தற்போது இரவு தொடங்கியுள்ளதால் இருவருக்கும் ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. ரோவரும், லேண்டரும் தூக்க நிலையில் வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்குக் கொடுக்கப்பட்ட வேலைகளை சிறப்பாக முடித்துள்ளதைத் தொடர்ந்து தற்போது இருவரும் தூக்க நிலையில் உள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.


இதுகுறித்து இஸ்ரோ வெளியிட்டுள்ள டிவீட்டில்,  ரோவர் தனது வேலைகளை முடித்து விட்டது. தற்போது பாதுகாப்பாக அது பார்க் செய்யப்பட்டுள்ளது.  ஸ்லீப் மோடில் அது உள்ளது. APXS மற்றும் LIBS  பேலோடுகள் ஆப் செய்யப்பட்டுள்ளன. இவற்றிலிருந்து வரும் தகவல்கள் லேண்டர் மூலமாக பூமிக்கு வரும்.


தற்போது பேட்டரி முழுமையாக சார்ஜ் செய்யப்பட்ட நிலையில் உள்ளது. சோலார் பேனல்களுக்கு அடுத்த சூரிய உதயத்தின்போதுதான் மீண்டும் ஒளி கிடைக்கும். அதாவது செப்டம்பர் 22ம் தேதிதான் சூரிய உதயம் வருகிறது. அப்போது மீண்டும் சோலார் பேனல்களுக்கு ஒளி கிடைக்கும். ரிசீவர் ஆன் செய்யப்பட்ட நிலையில் உள்ளது. 


இரவு முடிந்து ரோவரும், லேண்டரும் வெற்றிகரமாக விழித்தெழுவார்கள், மீண்டும் பணியைத் தொடருவார்கள் என்று நம்புகிறோம். அப்படி இல்லாமல் போனால், இந்தியாவின் நிலவு தூதர்களாக அங்கேயே நீடித்திருப்பார்கள் என்று இஸ்ரோ உருக்கமாக கூறியுள்ளது.


சமீபத்திய செய்திகள்

news

Orange alert: தமிழ்நாட்டில் ஒரிரு இடங்களில் 26 மற்றும் 27 தேதிகளில் மிக கன மழை எச்சரிக்கை!

news

ஜாமின் கிடைத்ததைத் தொடர்ந்து.. புழல் சிறையிலிருந்து வெளியே வந்தார் நடிகை கஸ்தூரி

news

அமெரிக்கா கோர்ட் பிடிவாரண்ட்.. அதானியை உடனடியாக கைது செய்ய வேண்டும்.. ராகுல்காந்தி ஆவேசம்

news

விஜய் பங்கேற்கும்.. அம்பேத்கர் புத்தக வெளியீட்டு விழாவில் கலந்து கொள்ள மாட்டார் திருமாவளவன்!

news

தனுஷ் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் விவாகரத்து வழக்கில் இறுதிக் கட்டம்.. 27ம் தேதி தீர்ப்பு வழங்கப்படுகிறது!

news

கடுப்பா இருக்கா பாஸ்.. வாங்க கடிக்கிறோம்.. கலகலன்னு சிரிங்க.. மைன்ட் free ஆகி.. face பிரெஷ்ஷாய்ரும்!

news

ஆசிரியை ரமணியின் குடும்பத்திற்கு ரூ. 5 லட்சம் உதவி.. தாயாரிடம் வழங்கினார் அமைச்சர் கோவி.செழியன்

news

Chennai Lakes.. நீர் இருப்பில் மாற்றம் இல்லை.. புதிய காற்றழுத்தத் தாழ்வுக்காக ஏரிகள் வெயிட்டிங்!

news

Rain forecast: 5 மாவட்டங்களில் இன்று மிக கன மழைக்கு வாய்ப்பு.. 7 மாவட்டங்களில் கன மழை!

அதிகம் பார்க்கும் செய்திகள்