உன்னை தினம் தேடும் தலைவன்.. விஜயகாந்த் மீது காதல் வந்த அந்த ஒரு நிமிடம்.. பிரேமலதா சொன்ன ரகசியம்!

Dec 22, 2024,04:45 PM IST

சென்னை: நடிகரும், தேமுதிக தலைவருமான விஜயகாந்த் பற்றிய பல சுவாரஸ்யமான நிகழ்வுகளை அவரது மனைவியும் தேமுதிக பொதுச் செயலாளருமான பிரேமலதா விஜயகாந்த் தன்னுடைய பல பேட்டிகளில் பகிர்ந்து கொண்டுள்ளார். விஜயகாந்த் உடன் தனக்கு எப்படி திருமணம் நடந்தது, பெண் பார்க்க வந்த அனுபவம், விஜயகாந்த் உடனான திருமண வாழ்க்கை உள்ளிட்ட பல விஷயங்களை அவர் பகிர்ந்து கொண்டுள்ளார். ஆனால் தனக்கு விஜயகாந்த் மீது முதல் முறையாக எப்போது காதல் வந்தது என்ற சுவாரஸ்யமான மலரும் நினைவுகளை பிரேமலதா தற்போது பகிர்ந்துள்ளார்.


டிசம்பர் 28ம் தேதியுடன் கேப்டன் விஜயகாந்த் மறைந்து ஓராண்டு நிறைவடைய உள்ளது. இதனால் விஜயகாந்த்தை பெருமைப்படுத்தும் வகையில் அவர் நடித்த படங்களில் இருந்து 150 பாடல்களை தேர்வு செய்து 13 மணி நேரத்தில் பாடும் சாதனை நிகழ்ச்சி சென்னை தி.நகரில் நேற்று நடத்தப்பட்டது.  தி.நகர் பிட்டி தியாகராயர் மண்டபத்தில் நடந்த இந்த நிகழ்ச்சிக்கு ஜிஜி கவிதாவின் இன்னிசை மழை குழு வழங்கிய இந்த நிகழ்ச்சியில்150 பாடல்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு பாடப்பட்டன. இதற்கான ஏற்பாடுகளை கோமதி ஞானப்பிரகாசம் தலைமையிலான குழு செய்திருந்தது.




இந்த நிகழ்ச்சியில் விஜயகாந்த் நடித்த சில பாடல்களை பிரேமலதா விஜயகாந்த்தும் பாடினார். பல பாடல்களை பாடும் போது உணர்ச்சிவசப்பட்டு கண் கலங்கவும் செய்தார். இந்த விழாவில் பேசிய பிரேமலதா பல மலரும் நினைவுகளைப் பகிர்ந்து கொண்டார்.


பிரேமலதா விஜயகாந்த் பேசும்போது கூறியதாவது:  விஜயகாந்த் நடித்த பாடல்களை எப்போது கேட்டாலும் என்னுடைய கல்லூரி காலத்திற்கே சென்று விடுவேன். விஜயகாந்த் நடித்த தூரத்து இடி முழக்கம், வைதேகி காத்திருந்தாள் உள்ளிட்ட பல படங்களை நான் பார்த்திருக்கிறேன். ஆனால் அப்போது எல்லாம் அவரை ஒரு நடிகராக மட்டுமே திரையில் கண்டு ரசித்திருக்கிறேன்.




நான் கல்லூரியில் படிக்கும் போது, பொங்கல் லீவுக்கு ஹாஸ்டலில் இருந்து ஊருக்கு சென்ற போது என் அப்பா வேலை செய்த கிராமத்து பின்னணியில் தியேட்டருக்கு சென்று உழவன் மகன் படம் பார்த்தேன். அதில் வரும், "உன்னை தினம் தேடும் தலைவன்" பாடலை கேட்டு தான் அவர் மீது எனக்கு ஈர்ப்பு வந்தது. ஒரு நடிகராக திரையில் நான் ரசித்த நடிகரை, கடவுள் எனக்கு கணவராகவும் தந்தார். இப்போதும் உன்னை தினம் தேடும் தலைவன் பாடல், ஆடியில சேதி சொல்லி ஆகிய பாடல்களை கேட்கும் போது என்னும் கல்லூரி கால நினைவுகளுக்கு சென்று விடுவேன் என தெரிவித்துள்ளார்.


விஜயகாந்த்-பிரேமலதா விஜயகாந்த் அவர்களின் திருமணம் முழுமுழுக்க பெற்றோர்களால் நிச்சயிக்கப்பட்ட திருமணம் என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால் அதற்கு பிறகு இப்படி காதல் சுவாரஸ்ய நிகழ்வுகள் இருக்கும் என்பது இதுவரை யாரும் அறியாத ஒரு விஷயமாகும்.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

ஆப் பிரேக்கை எதிர்பார்த்தால்.. கேரம் பாலை போட்டு விட்டீர்களே.. அஸ்வினுக்கு பிரதமர் மோடி கலகல கடிதம்!

news

200 இடங்களில்.. ஏன் 200க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெற இன்றே புறப்படுவீர்.. திமுக செயற்குழு

news

பிரதமர் நரேந்திர மோடிக்கு குவைத் நாட்டின் The Order Of Mubarak Al Kabeer உயரிய விருது!

news

புஷ்பா 2 படம் பார்க்க வந்த போது சிக்கிய கடத்தல்காரன்.. Smuggling டெக்னிக்ஸ் கத்துக்க வந்திருப்பாரோ!!

news

ஆங்கில புத்தாண்டு 2025 ராசிபலன் : கும்பம் ராசிக்காரர்களே.. அமைதியாக இருந்து காரியம் சாதிப்பீர்கள்

news

உன்னை தினம் தேடும் தலைவன்.. விஜயகாந்த் மீது காதல் வந்த அந்த ஒரு நிமிடம்.. பிரேமலதா சொன்ன ரகசியம்!

news

தாய் மனம் (சிறுகதை)

news

மார்கழி 8 திருவெம்பாவை பாசுரம் 8.. கோழி சிலம்பச் சிலம்பும் குருகு எங்கும்

news

மார்கழி 8 ஆண்டாளின் திருப்பாவை பாசுரம் 8.. கீழ்வானம் வெள்ளென்று எருமை சிறு வீடு!

அதிகம் பார்க்கும் செய்திகள்