தேமுதிக தலைவர் விஜயகாந்த் மியாட் மருத்துவமனையில் அனுமதி.. ஓரிரு நாளில் வீடு திரும்புவார்!

Nov 18, 2023,09:04 PM IST

சென்னை: தேமுதிக தலைவர் விஜயகாந்த் சென்னை மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். வழக்கமான உடல் நல பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.


தேமுதிக தலைவர் விஜயகாந்த் கடந்த 2016ம் ஆண்டு உடல் நிலை பாதிக்கப்பட்டது முதல் தீவிர அரசியலில் ஈடுபடாமல் பெரும்பாலும் ஓய்வில்தான் இருந்து வருகிறார். கட்சிப் பணிகளை அவரது மனைவி பிரேமலதா விஜயகாந்த், மகன் பிரபாகரன் ஆகியோர்தான் பார்த்துக் கொள்கின்றனர்.




வீட்டிலேயே ஓய்விலும், சிகிச்சையிலுமாக இருந்து  வரும் விஜயகாந்த் அவ்வப்போது வெளிநாட்டுக்கும் சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்படுகிறார். இந்த நிலையில் இன்று அவர் திடீரென சென்னை மியாட் மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டார். அவர் வழக்கமான பரிசோதனைக்காக அவர் அழைத்து வரப்பட்டிருப்பதாக கட்சித் தலைமையிலிருந்து அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.


ஓரிரு நாட்கள் அவர் மருத்துவமனையில் இருப்பார் என்றும் வதந்திகளை நம்ப வேண்டாம் என்றும் தேமுதிக சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.





சமீபத்தில்தான் கட்சி தலைமை அலுவலகத்திற்கு விஜயகாந்த் அழைத்து வரப்பட்டிருந்தார். அவரைப் பார்க்க தொண்டர்கள் அலை மோதினர். விஜயகாந்த் மிகவும் நலிவடைந்த நிலையில் இருப்பதைப் பார்த்து தொண்டர்கள் பலர் அழுததையும் பார்க்க முடிந்தது.


சமீபத்திய செய்திகள்

news

வங்கக் கடல் காற்று சுழற்சி.. தமிழ்நாடு, இலங்கையை நோக்கி நகரக் கூடும்.. வானிலை மையம்

news

ஏக்கம் (ஒரு பக்க சிறுகதை)

news

நிக்கோபார் தீவு அருகே.. காற்றழுத்தத் தாழ்வு உருவாக ஆரம்பித்து விட்டது.. தமிழ்நாடு வெதர்மேன்

news

நவம்பர் 22 - இன்றைய நல்ல நேரம், செய்ய வேண்டிய வழிபாடு

news

மங்களகரமான வெள்ளிக்கிழமையில் பண மழையில் நனையப் போகும் 2 ராசிக்காரர்கள்

news

Orange alert: தமிழ்நாட்டில் ஒரிரு இடங்களில் 26 மற்றும் 27 தேதிகளில் மிக கன மழை எச்சரிக்கை!

news

ஜாமின் கிடைத்ததைத் தொடர்ந்து.. புழல் சிறையிலிருந்து வெளியே வந்தார் நடிகை கஸ்தூரி

news

அமெரிக்கா கோர்ட் பிடிவாரண்ட்.. அதானியை உடனடியாக கைது செய்ய வேண்டும்.. ராகுல்காந்தி ஆவேசம்

news

விஜய் பங்கேற்கும்.. அம்பேத்கர் புத்தக வெளியீட்டு விழாவில் கலந்து கொள்ள மாட்டார் திருமாவளவன்!

அதிகம் பார்க்கும் செய்திகள்