சென்னை: பெண்களுக்கு எப்போதுமே அரசியல் போர்க்களம்தான். ஒவ்வொரு நாளும் நெருப்பாற்றை நீந்தித்தான் கடக்க வேண்டியிருக்கிறது. எதிர்த்துப் போராடியிருக்க வேண்டிய விஜயதரணி, தேசத்திற்கு துரகோம் செய்து விட்டு பாஜகவுக்குப் போயுள்ளார் என்று காங்கிரஸ் எம்.பி ஜோதிமணி கூறியுள்ளார்.
நீண்ட காலமாக காங்கிரஸ் கட்சியில் செயல்பட்டு வந்த, 3 முறை விளவங்கோடு தொகுதியிலிருந்து சட்டசபைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டவரான விஜயதரணி நேற்று பாஜகவில் தன்னை இணைத்துக் கொண்டார். இது பெரும் பரபரப்பையும், சலசலப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்ட காங்கிரஸார் இதை கொண்டாடி வருகின்றனர். இனிமேல் கன்னியாகுமரியில் பாஜகவுக்கு டெபாசிட் கூட கிடைக்காது என்று அவர்கள் லட்டு கொடுத்துக் கொண்டாடிக் கொண்டுள்ளனர். அதேசமயம், விஜயதரணியின் கட்சி தாவல் பெரும் விவாதங்களைக் கிளப்பியுள்ளது.
இந்தப் பின்னணியில் கரூர் காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணி ஒரு டிவீட் போட்டுள்ளார். சிந்திக்க வைப்பதாக அது உள்ளது. பெண்களுக்கு, குறிப்பாக அரசியலில் இருக்கும் பெண்கள் சந்திக்கும் ஒரு முக்கியப் பிரச்சினையை - "அங்கீகாரம்" - கோடிட்டுக் காட்டியுள்ளார் ஜோதிமணி. அதேசமயம், அந்த அங்கீகாரம் கிடைக்காத பட்சத்தில் கொள்கைகளைத் தியாகம் செய்து வேற்று முகாமுக்குப் போவதும் சரியல்ல என்றும் அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.
ஜோதிமணியின் டிவீட்:
தலைவர் ராகுல்காந்தி நாட்டைக் காக்க இறுதி யுத்தத்தை நடத்திக்கொண்டிருக்கும் இந்த நேரத்தில், விஜயதரணி காங்கிரஸ் கட்சியில் இருந்துவிலகி பாஜகவில் இணைந்திருப்பது, இந்த தேசத்திற்கு செய்யும் மாபெரும் துரோகம்.
அரசியல் பெண்களுக்கு எப்போதும் போர்க்களம் தான். ஒவ்வொரு நாளும் நெருப்பாற்றை நீந்திதான் கடக்க வேண்டியிருக்கிறது. பெண்களின் உழைப்பும், திறமையும், செல்வாக்கும் அவ்வளவு எளிதாக அங்கீகரிக்கப்படுவதில்லை என்பது உண்மைதான்.
ஆனால் அதற்காக கொண்ட கொள்கையில் சமரசம் செய்துகொள்வதையும், நாம் இவ்வளவு காலம் எதிர்த்து நின்ற பாஜகவின் பாசறைக்குச் செல்வதையும் எவ்விதத்திலும் ஏற்றுக்கொள்ள முடியாது என்று கூறியுள்ளார் ஜோதிமணி.
காங்கிரஸிலிருந்து, சிந்தனையாற்றலும், செயலாற்றலும் கொண்ட ஒரு பெண் தலைவர் பாஜகவுக்கு செல்வது இது முதல் முறையல்ல. இதற்கு முன்பு நடிகை குஷ்புவும் காங்கிரஸில் தீவிரமாக செயலாற்றி வந்தவர்தான். அவருக்கும் காங்கிரஸ் கட்சியில் எதிர்பார்த்த அங்கீகாரம் கிடைக்கவில்லை என்ற ஏமாற்றத்தால்தான் பாஜகவுக்கு சென்றார்.
சிறந்தவர்களை தவற விடுவது எந்தக் கட்சிக்கும் நல்லதல்ல.. அனுபவத்திற்கேற்ப உரிய அங்கீகாரங்களை, குறிப்பாக பெண் தலைவர்களுக்குத் தருவதை ஒவ்வொரு கட்சியும் உறுதி செய்தாலே இதுபோன்ற முகாம் மாற்றங்களைத் தவிர்க்க முடியும்.
வங்கக் கடல் காற்று சுழற்சி.. தமிழ்நாடு, இலங்கையை நோக்கி நகரக் கூடும்.. வானிலை மையம்
நிக்கோபார் தீவு அருகே.. காற்றழுத்தத் தாழ்வு உருவாக ஆரம்பித்து விட்டது.. தமிழ்நாடு வெதர்மேன்
நவம்பர் 22 - இன்றைய நல்ல நேரம், செய்ய வேண்டிய வழிபாடு
மங்களகரமான வெள்ளிக்கிழமையில் பண மழையில் நனையப் போகும் 2 ராசிக்காரர்கள்
Orange alert: தமிழ்நாட்டில் ஒரிரு இடங்களில் 26 மற்றும் 27 தேதிகளில் மிக கன மழை எச்சரிக்கை!
ஜாமின் கிடைத்ததைத் தொடர்ந்து.. புழல் சிறையிலிருந்து வெளியே வந்தார் நடிகை கஸ்தூரி
அமெரிக்கா கோர்ட் பிடிவாரண்ட்.. அதானியை உடனடியாக கைது செய்ய வேண்டும்.. ராகுல்காந்தி ஆவேசம்
விஜய் பங்கேற்கும்.. அம்பேத்கர் புத்தக வெளியீட்டு விழாவில் கலந்து கொள்ள மாட்டார் திருமாவளவன்!
தனுஷ் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் விவாகரத்து வழக்கில் இறுதிக் கட்டம்.. 27ம் தேதி தீர்ப்பு வழங்கப்படுகிறது!
{{comments.comment}}