சென்னை: செந்தில்பாலாஜிக்கு மீண்டும் அமைச்சர் பதவி கொடுப்பது கொள்ளையர் கையில் சாவியை கொடுப்பது போல என்று விஜய பிரபாகரன் பேசியுள்ளது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 2023ம் ஆண்டு ஜூன் மாதம் சட்ட விரோத பணப்பரிமாற்ற வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத் துறையினர் கைது செய்தனர். இதையடுத்து செந்தில் பாலாஜி ஜாமின் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். ஆனால் அந்த மனுவை அமர்வு நீதிமன்றம், உயர்நீதிமன்றம் என அனைத்து நீதிமன்றங்களும் ஏற்கவில்லை. இதனால் ஜாமின் கிடைக்காமல் தொடர்ந்து சிறைவாசம் அனுபவித்து வந்தார் செந்தில் பாலாஜி.
இந்நிலையில், நேற்று உச்சநீதிமன்றத்தின் 3 நீதிபதிகள் கொண்ட அமர்வு செந்தில் பாலாஜிக்கு நிபந்தனை ஜாமின் வழங்கி உத்த்தரவிட்டது. அதன்படி தினசரி அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும். பாஸ்போர்ட்டை ஒப்படைக்க வேண்டும். சாட்சிகளைக் கலைக்கக் கூடாது, விசாரணைக்கு ஒத்துழைப்பு தர வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். 2 நபர் உத்தரவாதத்தின்பேரில் செந்தில் பாலாஜி ஜாமின் பெறலாம் என்றும் நீதிமன்றம் தெரிவித்திருந்தது. இதனையடுத்து நேற்று முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நிபந்தனை ஜாமின் கிடைத்தது.
செந்தில் பாலாஜி நிபந்தனையில் வெளியில் வந்துள்ளதைக் கொண்டாடும் திமுகவை முன்னாள் ஆளுனர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன், நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்ளிட்டோர் கடுமையாக விமர்சித்துள்ளனர். இந்த வரிசையில் தற்போது தேமுதிக கட்சியை சேர்ந்த விஜய பிரபாகரனும் இதை விமர்சித்துள்ளார். இது குறித்து செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், செந்தில் பாலாஜி என்ன தியாகம் செய்தா ஜெயிலுக்கு போனார். தப்பு செய்து தான் ஜெயிலுக்கு போனார்.
100க்கணக்கான பெயில் மனுக்களைத் தாண்டி இன்றைக்கு தான் அவருக்கு விடுதலை கிடைத்துள்ளது. இதில் சொல்வதற்கு ஒன்றுமில்லை. தப்பு செய்தவர்கள் தண்டனை அனுபவித்து தான் ஆக வேண்டும். அவருக்கு அமைச்சர் பதவி கொடுக்கக்கூடாது. செந்தில்பாலாஜிக்கு மீண்டும் அமைச்சர் பதவி கொடுப்பது கொள்ளையர் கையில் சாவியை கொடுப்பது போல. திமுக அவருக்கு அமைச்சர் பதவி கொடுத்தார்கள் என்றால், அவர்களுக்குள் ஏதோ ஒரு டீலிங் உள்ளது போன்று தான் என்று தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
Orange alert: தமிழ்நாட்டில் ஒரிரு இடங்களில் 26 மற்றும் 27 தேதிகளில் மிக கன மழை எச்சரிக்கை!
ஜாமின் கிடைத்ததைத் தொடர்ந்து.. புழல் சிறையிலிருந்து வெளியே வந்தார் நடிகை கஸ்தூரி
அமெரிக்கா கோர்ட் பிடிவாரண்ட்.. அதானியை உடனடியாக கைது செய்ய வேண்டும்.. ராகுல்காந்தி ஆவேசம்
விஜய் பங்கேற்கும்.. அம்பேத்கர் புத்தக வெளியீட்டு விழாவில் கலந்து கொள்ள மாட்டார் திருமாவளவன்!
தனுஷ் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் விவாகரத்து வழக்கில் இறுதிக் கட்டம்.. 27ம் தேதி தீர்ப்பு வழங்கப்படுகிறது!
கடுப்பா இருக்கா பாஸ்.. வாங்க கடிக்கிறோம்.. கலகலன்னு சிரிங்க.. மைன்ட் free ஆகி.. face பிரெஷ்ஷாய்ரும்!
ஆசிரியை ரமணியின் குடும்பத்திற்கு ரூ. 5 லட்சம் உதவி.. தாயாரிடம் வழங்கினார் அமைச்சர் கோவி.செழியன்
Chennai Lakes.. நீர் இருப்பில் மாற்றம் இல்லை.. புதிய காற்றழுத்தத் தாழ்வுக்காக ஏரிகள் வெயிட்டிங்!
Rain forecast: 5 மாவட்டங்களில் இன்று மிக கன மழைக்கு வாய்ப்பு.. 7 மாவட்டங்களில் கன மழை!
{{comments.comment}}