பத்தவச்சுட்டியே பரட்டை.. விஜய் பேச்சால் சலசலப்பு.. கப்சிப்பாக்க அதை கையில் எடுக்குமா திமுக?

Oct 29, 2024,06:45 PM IST

சென்னை : சமீபத்தில் தனது கட்சியின் முதல் அரசியல் மாநாட்டில் தமிழக வெற்றிக் கழக தலைவரும், நடிகருமான விஜய், திமுக.,வை குறிப்பிட்டு பேசி வார்த்தைகளே தமிழக அரசியலில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. இது ஒரு புறம் இருந்தாலும், விஜய் சொல்லிய அந்த ஒரு விஷயம் திமுக கூட்டணிக்குள் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளதாக அரசியல் வட்டாரத்தில் பேச்சு ஒன்ற தீயாய் பரவிக் கொண்டிருக்கிறது.


தமிழக வெற்றிக் கழக மாநாட்டில் திமுக பற்றியும், அவர்களின் ஆட்சி பற்றியும் விஜய் பல்வேறு குற்றச்சாட்டுக்களை முன் வைத்தார். அவர்கள் தான் தங்களின் எதிரி என வெளிப்படையாக தெரிவித்தார். ஊழலுக்கு எதிராக விஜய் பேசிய பேச்சு சிலரிடம் விமர்சனங்களையும், சிலரிடம் வரவேற்பையும் பெற்றுள்ளது. குறிப்பாக திமுக., வை தாக்கி விஜய் பேசிய பேச்சு திமுக.,விற்கு எதிரான நிலைப்பாட்டை கொண்ட அதிமுக, பாமக, பாஜக உள்ளிட்ட கட்சிகளிடம் வரவேற்பை பெற்றுள்ளது. 




அதேசமயம், யாரை மனதில் வைத்து விஜய் கடைசியாக பேசினாரோ அந்த திருமாவளவன் நேற்று விஜய் பேச்சுக்கு கடுமையான கண்டனங்களைத் தெரிவித்துள்ளார். கடுமையாகவும் விமர்சித்துள்ளார்.


விஜய் வைத்த டிவிஸ்ட்


மாநாட்டில் பேச்சை முடித்து விட்டு கிளம்பிய விஜய், மறுபடியும் ஓடி வந்து மைக்கை பிடித்து, கூட்டணிக் யார் வந்தாலும் அவர்களை வரவேற்க தயாராக இருக்கிறோம். அப்படி கூட்டணிக்கு வருபவர்களுக்கு நாங்கள் 2026ல் தனி மெஜாரிட்டியுடன் வெற்றி பெற்றாலும் ஆட்சியில் பங்கு தருவோம் என்று ஒரு ட்விஸ்ட் வைத்தார். அது விடுதலைச் சிறுத்தைகள் கட்சியை மனதில் வைத்துத்தான் பேசியதாக கூறப்படுகிறது.


கடந்த சில மாதங்களுக்கு முன், லோக்சபா தேர்தல் முடிந்த சில வாரங்களிலேயே, ஆட்சியில் பங்கு கேட்டு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன், தன்னுடைய எக்ஸ் தள பக்கத்திலேயே வீடியோ ஒன்றை பதிவிட்டார். இரண்டு முறை வீடியோ பதிவிட்டு, பிறகு அதை அவரே நீக்கவும் செய்தார். அப்போதே திமுக-விசிக கூட்டணியில் விரிசல் ஏற்பட்டுள்ளதாக சொல்லப்பட்டது.  அந்த வீடியோ குறித்து திமுகவினர் சமூக வலைதளங்களில் கடுமையாக விமர்சித்தனர். பதிலுக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினரும் பேசினர். அதற்கு பிறகு திமுக தலைமை உடன் திருமாவளவன் சந்திப்பு நடந்த பிறகு அந்த பிரச்சினை அப்படியே அடங்கிப் போனது. 


தற்போது விஜய் பேசிய ஆட்சியில் பங்கு தரப்படும் என்ற பேச்சுக்கு காங்கிரஸ் கட்சியின் விருதுநகர் எம்பி மாணிக்கம் தாகூர் வரவேற்பு தெரிவித்துள்ளார். விஜய் பேச்சு குறித்து அவர் போட்ட டிவீட்டில், ஜாதிவாரி கணக்கெடுப்பு, ஆட்சி அதிகாரத்தில் பங்கு இரண்டும் எனக்குப் பிடித்திருக்கிறது என்று கூறியிருந்தார். இதையடுத்து திமுகவினர் அவரை கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.  இதைத்தான் விஜய்யும் எதிர்பார்த்து கல் எறிந்துள்ளதாக கருதப்படுகிறது.


ஆட்சி அதிகாரத்தில் பங்கு தருமா திமுக




சட்டசபைத் தேர்தல் சமயத்தில் நிச்சயம் இந்த ஆட்சி அதிகாரத்தில் பங்கு என்ற அம்சம் திமுக கூட்டணிக்குள் குழப்பத்தை ஏற்படுத்தும். விடுதலைச் சிறுத்தைகள் கட்சி நீண்ட காலமாக இதை வலியுறுத்தி வருகிறது. காங்கிரஸ் கட்சியும் இதை பலமுறை கேட்டுள்ளது. மறைந்த கலைஞர் கருணாநிதி இருந்தபோதே அவரிடம் பாமகவும் கூட அதிகாரத்தில் பங்கு கேட்ட வரலாறும் உண்டு. அதேசமயம், பெரும்பான்மை பலம் பெறத் தவறி திமுக ஒருமுறை கூட்டணிக் கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சி அமைத்த போதும் கூட, கூட்டணிக் கட்சிகளுக்கு அதிகாரப் பகிர்வைத் தரவில்லை திமுக. கூட்டணிக் கட்சிகளும் கூட குறிப்பாக பாமகவும் கூட அப்போது அமைச்சர் பதவி கோரவில்லை என்பதும் வரலாறாகும். எனவே இந்தக் கோரிக்கையானது நீண்ட காலமாக இருக்கிறது. அதாவது நீரு பூத்த நெருப்பு போல இது புகைந்து கொண்டுதான் உள்ளது. இதை தற்போது விஜய் ஊதி விட்டிருப்பதாகவே தெரிகிறது.


இப்போது கூட்டணியில் குழப்பம் இல்லை, வலுவாக இருக்கிறது என்று திமுகவும், விசிகவும், காங்கிரஸும் கூறினாலும் கூட சத்தம் போடாமல் இந்த ஆட்சி அதிகார கோரிக்கையை அவர்கள் நிச்சயம் திமுகவிடம் முன்வைப்பார்கள் என்றே கருதப்படுகிறது. மேலும் கூடுதல் சீட்டுகளையும் கூட அவர்கள் கேட்பார்கள் என்பதும் உறுதி. எனவே கடைசி நேர சலசலப்பையும், குழப்பத்தையும் தவிர்க்க இந்த கோரிக்கை தொடர்பாக திமுக அதிரடியான நடவடிக்கை எடுக்குமா அல்லது எங்களது நிலைப்பாடு இதுதான் என்று திட்டவட்டமாக கூறி விடுமா என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

மகாராஷ்டிராவில் மீண்டும் பாஜக கூட்டணி ஆட்சி.. ஜார்க்கண்ட் ஆட்சியை தக்க வைத்தது ஜேஎம்எம் காங் கூட்டணி

news

வங்ககடலில் உருவானது.. புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி.. தமிழ்நாட்டில் மிக கன மழைக்கு வாய்ப்பிருக்கா?

news

வளர்ச்சிக்கும், நல்லாட்சிக்கும் கிடைத்த பெரும் வெற்றி .. மகாராஷ்டிரா மக்களுக்கு பிரதமர் மோடி நன்றி

news

Priyanka Gandhi.. வயநாடு இடைத் தேர்தலில் பிரியங்கா காந்தி அதிரடி.. அண்ணன் சாதனையை முறியடித்த தங்கை!

news

14 மாநிலங்கள்.. 48 சட்டசபைத் தொகுதிக்கு இடைத் தேர்தல்.. பாஜக 18, காங்கிரஸ் 8, திரினமூலுக்கு 6!

news

மகாராஷ்டிரா வெற்றி.. வரிந்து கட்டிக்கொண்டு பட்டாசு வெடித்த தமிழிசை.. அடுத்து சொன்ன அதிரடி வார்த்தை!

news

Wayanad by poll resutls.. அபார வெற்றியை நோக்கி பிரியங்கா காந்தி.. 3.20 லட்சம் வாக்குகள் வித்தியாசம்!

news

Maharashtra poll results: உத்தவ், சரத் பவாருக்கு கெட் அவுட் சொன்ன ஏக்நாத் ஷிண்டே, அஜீத் பவார்!

news

Wayanad: வயநாட்டில் கொடி நாட்டிய பிரியங்கா காந்தி.. 4வது தலைமுறையிலிருந்து மேலும் ஒரு எம்.பி

அதிகம் பார்க்கும் செய்திகள்