Vijay.. திரைப்பட ஒப்பனை அளவுக்குக்கூட அரசியல் ஒப்பனைக்கு ஆயுள் கிடையாது.. விசிக ரவிக்குமார்

Dec 07, 2024,05:08 PM IST

சென்னை: திரைப்பட ஒப்பனை அளவுக்குக்கூட அரசியல் ஒப்பனைக்கு ஆயுள் கிடையாது. யாரோ சொன்னதைக் கேட்டு அரசியலுக்கு வந்துள்ளார் விஜய். அவர் தன்னம்பிக்கையோடு வரவில்லை என்று சாடியுள்ளார் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி எம்.பி. ரவிக்குமார்.


தமிழக வெற்றிக் கழகம் கட்சித் தலைவர் விஜய், நேற்று சென்னையில் நடந்த விகடன் பிரசுரம் ஏற்பாடு செய்திருந்த, எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர் நூல் வெளியீட்டு விழாவில் பேசியிருந்தார். விக்கிரவாண்டி பேச்சு போல இந்த பேச்சும் பல சலசலப்புகளை, விவாதங்களை கிளப்பியுள்ளது. குறிப்பாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்குள் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.




விஜய் மற்றும் இந்த நிகழ்ச்சியில் பேசிய விசிக துணை  பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜூனா ஆகியோரது பேச்சுக்களில் தனக்கு உடன்பாடு இல்லை என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் நேற்றே கூறி விட்டார். இந்த நிலையில் எழுத்தாளரும் விழுப்புரம் தொகுதி விசிக எம்.பியுமான டி. ரவிக்குமார் விஜய்யை சாடி ஒரு அறிக்கை விடுத்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:


தலைவர் எழுச்சித் தமிழர்  திருமாவளவன் அவர்கள் விரிவாக அறிக்கை கொடுத்ததற்குப் பிறகும்கூட விஜய் எங்கள் தலைவரைப் பற்றிப் பேசியதைப் பார்த்தால் அவர் கட்சி ஆரம்பித்திருப்பதே விடுதலைச் சிறுத்தைகளோடு எப்படியாவது கூட்டணி சேர்ந்துவிட வேண்டும்  என்பதற்காகத்தானோ என எண்ணத் தோன்றுகிறது. தன்னம்பிக்கையோடு கட்சி ஆரம்பித்திருந்தால் இப்படி வலிந்து வலிந்து அழைப்பு விடுக்கும் நிலை ஏற்பட்டிருக்காது. 


இதையெல்லாம் பார்க்கும் எவரும்,  ரஜினிகாந்த் அவர்களை கட்சி ஆரம்பிக்கச் சொன்னவர்கள்தான் அவர் உடன்படாததால் விஜய் அவர்களைக் கட்சி தொடங்க வைத்திருக்கிறார்கள் என்பதை எளிதாகப் புரிந்துகொள்ளவார்கள்.  


விஜய், மணிப்பூரைப் பற்றிக் குறிப்பிட்டாரே என்று அப்பாவியாகக் கேட்பவர்கள் அந்த மேடையில் இருந்த நீதிபதி கே.சந்துரு அவர்களிடம் Alibi என்ற சொல்லுக்குப் பொருள் என்ன என்பதைக் கேட்டுத் தெரிந்துகொள்ளலாம். 


திரைப்பட ஒப்பனை அளவுக்குக்கூட அரசியல் ஒப்பனைக்கு ஆயுள் கிடையாது என்று கருத்தைப் பதிவு செய்துள்ளார் எம்.பி. ரவிக்குமார்.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

டெல்லியில் ஆட்சியைப் பிடிக்கிறதா பாஜக?.. தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகளில் பரபர முடிவுகள்

news

இப்பவே தலை தூக்கும் வெயில்.. இன்றும், நாளையும் அதிகபட்சமாக 2 முதல் 3 டிகிரி வரை உயர வாய்ப்பு

news

கிருஷ்ணகிரி அரசுப் பள்ளி மாணவிக்கு பாலியல் வன்கொடுமை.. 3 ஆசிரியர்கள் அதிரடி கைது!

news

திருப்பரங்குன்றத்தை வைத்து.. திமுக ஆட்சிக்கு ஆபத்தை ஏற்படுத்த முயல்கிறது பாஜக.. அமைச்சர் சேகர்பாபு

news

திருப்பரங்குன்றம் விவகாரம்.. முதல்வர் மென்மையாக இருக்கக் கூடாது.. செல்வப்பெருந்தகை வலியுறுத்தல்

news

படகில் சென்று.. திரிவேணி சங்கமத்தில்.. 3 முறை புனித நீராடிய பிரதமர் நரேந்திர மோடி

news

அஜீத் ரசிகர்களே ரெடியா.. விடாமுயற்சி நாளை ரிலீஸ்.. சிறப்புக் காட்சிக்கு அரசு அனுமதி

news

144 தடை உத்தரவு வாபஸ்.. திருப்பரங்குன்றம் மலை கோவில், தர்காவுக்குச் செல்ல போலீஸ் அனுமதி!

news

சாம்சங் நிறுவனத்தில் மீண்டும் சர்ச்சை,3 தொழிலாளர்கள் சஸ்பெண்ட்..தொழிலாளர்கள் உள்ளிருப்புப் போராட்டம்

அதிகம் பார்க்கும் செய்திகள்