கடனே ரூ.6203 கோடி தான்...எப்படி ரூ.14,131 கோடி மீட்டீர்கள்?.. மத்திய அரசுக்கு விஜய் மல்லையா கேள்வி

Jan 25, 2025,11:30 AM IST

டில்லி : நான் வாங்கிய கடன் தொகையே ரூ.6203 கோடி தான். பிறகு எப்படி ரூ.14,131.60 கோடியை மீட்டீர்கள்? என மத்திய அரசுக்கு தொழிலதிபர் விஜய் மல்லியா எக்ஸ் தள பதிவு மூலம் கேள்வி எழுப்பி உள்ளார்.


சமீபத்தில் பார்லிமென்ட்டில் கேள்வி ஒன்றிற்கு பதிலளித்து பேசிய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், பொருளாதார குற்றவாளியான கிங்ஃபிஷர் நிறுவன உரிமையாளர் விஜய் மல்லியாவிடம் இருந்து ரூ.14,131 கோடிகளை மீட்டுள்ளதாக கூறி இருந்தார். இதை சுட்டிக் காட்டி விஜய் மல்லையா எக்ஸ் தளத்தில் ஒரு போஸ்ட் போட்டுள்ளார். அதில் மத்திய அரசிற்கு சில கேள்விகளை முன் வைத்துள்ளார்.


சமீபத்தில் பொருளாதார குற்றவாளிகள் குறித்து பார்லிமென்ட்டில் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு, பொருளாதார குற்றவாளிகள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து விளக்கமாக பதிலளித்த நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், இதுவரை அமலாக்கத்துறை சார்பில் பொருளாதார குற்றவாளிகளிடம் இருந்து ரூ.22,280 கோடி மீட்கப்பட்டு, பாதிக்கப்பட்டவர்களுக்கு திருப்பி கொடுக்கப்பட்டுள்ளது. இதில் விஜய் மல்லையாவிடம் இருந்து மட்டும் அமலாக்கத்துறை ரூ.14,131 கோடியை மீட்டுள்ளது என தெரிவித்தார். 




விஜய் மல்லையா தன்னுடைய பதிவில்,கிங்ஃபிஷர் நிறுவனம் பெற்ற கடன் ரூ.6203 கோடி. இதற்கு வட்டியுடன் சேர்த்து ரூ.1200 கோடிகள் கடன் மீட்பு தீர்ப்பாயத்தால் மீட்கப்பட்டது. ரூ.6203 கோடி கடன் வாங்கியதாக தான் கோர்ட் தீர்ப்பும் சொல்கிறது. ஆனால் மத்திய நிதியமைச்சர் பார்லிமென்ட்டில், அமலாக்கத்துறை மற்றும் வங்கிகள் மூலமாக என்னிடம் இருந்து ரூ.14,131.60 கோடிகளை மீட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.  


இருந்தாலும் நான் இன்னும் பொருளாதார குற்றவாளி தான். என்னுடைய கடன் தொகையை விட இரண்டு மடங்கு அதிகமான தொகையை என்னிடம் இருந்து மீட்டது எப்படி என அமலாக்கத்துறையும், வங்கிகளும் சட்டப்பூர்வமாக நிரூபிக்க வேண்டும். நிவாரண தொகையை கோருவதற்கு எனக்கு உரிமை உள்ளது என குறிப்பிட்டுள்ளார்.


தான் கடனாக பெற்ற தொகையை விட இரண்டு மடங்கு அதிகமான தொகையை தன்னிடம் இருந்து மீட்டது எப்படி? கடன் மற்றும் வட்டி தொகை போக மீதமுள்ள பணத்தை தனக்கு திருப்பி அளித்து, வழக்குகளில் இருந்து தன்னை விடுவிக்கும் படியும் விஜய் மல்லையா கேட்டுள்ளார். 


கிங்ஃபிஷர் ஏர்லைன்ஸ் நிறுவனம் வங்கிகளிடம் இருந்து கோடி கணக்கில் கடன் வாங்கிய விஜய் மல்லையா, தன்னுடைய நிறுவனம் திவாலாகி விட்டதாக அறிவித்ததுடன், தன்னால் கடன் தொகையை திருப்பி செலுத்த முடியாது என அறிவித்தார். இதனால் பொருளாதார குற்றங்களுக்காக அவர் மீது வழக்கு தொடரப்பட்டது. இதனையடுத்து 2016ம் ஆண்டு லண்டனுக்கு தப்பிச் சென்றார் மல்லையா. அவரை தேடப்படும் குற்றவாளியாக இந்திய அறிவித்ததுடன் அவருக்கு லுக்அவுட் நோட்டீசம் பிறப்பித்தது. பண மோசடி வழக்கில் விஜய் மல்லையாவின் சொத்துக்கள் அமலாக்கத்துறையினரால் பறிமுதல் செய்யப்பட்டது. 


சமீபத்தில் விஜய் மல்லையா பற்ற ரூ.6600 கோடி கடனுக்காக அவருக்கு சொந்தமான நிறுவனங்களின் பங்குகளை விற்று எஸ்பிஐ வங்கிக்கு ரூ.5824.5 கோடிகள் கொடுக்கப்பட்டு, பிறகு ஜூன் 25 ம் தேதி ரூ.800 கோடியை கொடுக்கப்படலாம் என எதிர்பார்க்கப்பட்டதாக அமலாக்கத்துறை தெரிவித்திருந்தது. பொருளாதார குற்றம் என்பது இந்த வழக்கின் ஒரு பகுதி தான். ஆனால் சிபிஐ சார்பில் ஜாமினில் வெளி வர முடியாத பிரிவுகளில் விஜய் மல்லையா மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருந்து வருகிறது.


இதற்கிடையில் பார்லிமென்ட்டில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அளித்துள்ள தகவல் குறித்து விஜய் மல்லையா கேள்வி எழுப்பி உள்ளது புதிய பரபரப்பை கிளப்பி உள்ளது.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

நல்லவன் வந்தா எரிச்சல்தானே வரும்.. இது பண்ணையார்களுக்கான கட்சி கிடையாது ப்ரோ.. விஜய் அதிரடி

news

விஜய் தமிழ்நாட்டின் நம்பிக்கை.. அடுத்த ஆண்டு ஆட்சியைப் பிடிப்பார்.. பிரஷாந்த் கிஷோர் பேச்சு

news

யார் பண்ணையார்?... விமர்சனங்களை அப்படியே திருப்பிப் போட்டு.. விஜய் கொடுத்த நச் பதில்!

news

பொய் சொல்லி தமிழ்நாட்டு மக்களுக்கு துரோகம் செய்கிறார் முதல்வர் ஸ்டாலின்.. உள்துறை அமைச்சர் அமித் ஷா

news

என்னை ஆஸ்தான பாடகியாக விஜய் அறிவிக்கட்டும்.. அப்புறம் பாருங்க.. கிடாக்குழி மாரியம்மாள் உற்சாகம்!

news

இனி என் செயல்பாடுகளும் கோட்பாடுகளும் தளபதி வழியில்.. தவெகவில் இணைந்த ரஞ்சனா நாச்சியார்!

news

தவெக ஆண்டு விழாவில் பிரசாந்த் கிஷோர்... இதை யாருமே எதிர்பார்க்கலியே... என்னவா இருக்கும்?

news

அனைத்துக் கட்சிக் கூட்டம்.. அதிமுக, தவெக, நாதக உள்பட 45 கட்சிகளுக்கு தமிழ்நாடு அரசு அழைப்பு!

news

தவெகவின் முதலாண்டு விழா கோலாகல தொடக்கம்.. பிரஷாந்த் கிஷோருடன் மேடை ஏறிய விஜய்

அதிகம் பார்க்கும் செய்திகள்