- மஞ்சுளா தேவி
சென்னை: சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் லியோ பட வெற்றி விழாவை நடத்த தமிழக அரசு அனுமதி வழங்கி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஏற்கனவே சென்னை நேரு உள் அரங்கில் நடைபெற இருந்த லியோ படத்தின் ஆடியோ வெளியீட்டு கடைசி நேரத்தில் ரத்து செய்யப்பட்டது. இதில் அரசியல் காரணம் இருக்குமோ என பல கேள்விகள் எழுந்தன. அதைத் தொடர்ந்து அடுத்தடுத்து பல்வேறு சர்ச்சைகளும் வெடித்தன.
இருப்பினும், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்த லியோ படம் பல தடைகளையும், எதிர்ப்புகளையும் தாண்டி கடந்த அக்டோபர் 19ஆம் தேதி வெளியிடப்பட்டது. படம் ரிலீஸ் ஆகி கலவையான விமர்சனங்களை பெற்று வந்தது. இருப்பினும், லியோ படம் முதல் வாரத்திலேயே கிட்டத்தட்ட ரூ. 461 கோடி வசூலில் சாதனை படைத்தது.
இந்த நிலையில், தற்போது படத்தின் வெற்றி விழாவை மிகப் பிரம்மாண்டமாக கொண்டாட பட குழுவினர் திட்டமிட்டுள்ளனர். இதற்காக தயாரிப்பாளர் லலித் குமார் தரப்பில் காவல்துறையினரிடம் கோரிக்கை விவிடுக்கப்பட்டது. இந்தக் கோரிக்கையை ஏற்று காவல் துறையினர் படக்குழுவினருக்கு பதில் கடிதம் அனுப்பி இருந்தனர். அதில் வெற்றி விழா எத்தனை மணிக்கு தொடங்கி எத்தனை மணிக்கு முடியும்.. யார் யார்? கலந்து கொள்கிறார்கள்.. பாதுகாப்பிற்கு தனியார் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதா.. எத்தனை டிக்கெட்டுகள் வழங்கப்பட உள்ளது. பார்வையாளர்கள் 5000 க்கு மிகாமல் இருக்க வேண்டும் என பல கட்டுப்பாடுகள் விதித்திருந்தது.
இந்நிலையில் லியோ பட வெற்றி விழாவிற்கு அனுமதி வழங்கப்படும் என தகவல் வெளியாகி உள்ளது. முன்னதாக, இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், வருகின்ற நவம்பர் 1ஆம் தேதி நேரு விளையாட்டு உள் அரங்கில் வேறு எந்த நிகழ்ச்சியும் நடைபெறவில்லை. விழா நடத்த முறையாக என். ஒ. சி கடிதம் பெற்று, தொகை செலுத்தினால் லியோ பட வெற்றி விழாவுக்கு அனுமதி வழங்கப்படும். நேரு விளையாட்டு உள் அரங்கில் மொத்தம் 8000 இருக்கைகள் உள்ளன. இதில் பார்வையாளர்களுக்கு 5500 இருக்கைகள்,
விஐபிகளுக்கு 500 இருக்கைகள் என மொத்தம் 6000 இருக்கைகள் ஒதுக்கப்படும் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
லியோ வெற்றி விழாவுக்கு அனுமதி கிடைத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளதால், ரசிகர்கள் குஷியாகியுள்ளனர்.
Orange alert: தமிழ்நாட்டில் ஒரிரு இடங்களில் 26 மற்றும் 27 தேதிகளில் மிக கன மழை எச்சரிக்கை!
ஜாமின் கிடைத்ததைத் தொடர்ந்து.. புழல் சிறையிலிருந்து வெளியே வந்தார் நடிகை கஸ்தூரி
அமெரிக்கா கோர்ட் பிடிவாரண்ட்.. அதானியை உடனடியாக கைது செய்ய வேண்டும்.. ராகுல்காந்தி ஆவேசம்
விஜய் பங்கேற்கும்.. அம்பேத்கர் புத்தக வெளியீட்டு விழாவில் கலந்து கொள்ள மாட்டார் திருமாவளவன்!
தனுஷ் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் விவாகரத்து வழக்கில் இறுதிக் கட்டம்.. 27ம் தேதி தீர்ப்பு வழங்கப்படுகிறது!
கடுப்பா இருக்கா பாஸ்.. வாங்க கடிக்கிறோம்.. கலகலன்னு சிரிங்க.. மைன்ட் free ஆகி.. face பிரெஷ்ஷாய்ரும்!
ஆசிரியை ரமணியின் குடும்பத்திற்கு ரூ. 5 லட்சம் உதவி.. தாயாரிடம் வழங்கினார் அமைச்சர் கோவி.செழியன்
Chennai Lakes.. நீர் இருப்பில் மாற்றம் இல்லை.. புதிய காற்றழுத்தத் தாழ்வுக்காக ஏரிகள் வெயிட்டிங்!
Rain forecast: 5 மாவட்டங்களில் இன்று மிக கன மழைக்கு வாய்ப்பு.. 7 மாவட்டங்களில் கன மழை!
{{comments.comment}}