சென்னை: கோட் படம் இறுதிக் கட்டத்தை எட்டி உள்ள நிலையில், இப்படத்தின் படப்பிற்காக சென்னை விமான நிலையத்தில் இருந்து துபாய்க்கு புறப்பட்டு சென்றார் நடிகர் விஜய்.
வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிகர் விஜய் நடிக்கும் படம் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் (கோட்).
ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிப்பில் நடிகர் விஜய், தந்தை மகன் என இரண்டு வேடங்களில் நடித்து வருகிறார். இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்.
ஆக்ஷன் திரில்லர் பாணியில் உருவாகும் இப்படத்தில் நடிகை மீனாட்சி சவுத்ரி நடிக்கிறார். இவருடன் பிரபுதேவா, பிரசாந்த், ஜெயராம், அஜ்மல் போன்ற முன்னணி நட்சத்திரங்கள் இப்படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து வருகின்றனர். டாப் ஹீரோயினாக வலம் வந்த சினேகா மற்றும் லைலாவும் நடித்து வருகின்றனர். இது தவிர யோகி பாபு, ஜெயராம், மோகன், போன்ற நட்சத்திரங்களும் இந்த படத்தில் நடித்து மக்களை கவர உள்ளர். இது மட்டுமல்லாமல் சமீபத்தில் நடிகை திரிஷா இப்படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிப்பதாகவும், அதில் அவர் கேமியோ கதாபாத்திரத்தில் நடித்து வருவதாகவும் கூறப்பட்டது.
கோட் படத்தின் அப்டேட்டுகளையும் வெளியிடுமாறு ரசிகர்கள் கேட்டுக் கொண்டதை அடுத்து இயக்குனர் வெங்கட் பிரபு தொடர்ந்து கோட் பட போஸ்டர்கள் ஒன்னு, ரெண்டு, மூணு ,என்ற அடிப்படையில் வெளியிட்டார். இது ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. மேலும் இப்படத்தின்
ரிலீஸுக்காக ரசிகர்கள் எதிர்பார்த்து காத்து வருகின்றனர்.
இந்த நிலையில் கோட்படத்தின் படப்பிடிப்பு இறுதி கட்டத்தை எட்டி உள்ளது. இப்படத்தின் சில காட்சிகள் துபாயில் படமாக்கப்பட்ட உள்ளது. அதற்காக சென்னை விமான நிலையத்திற்கு வந்த நடிகர் விஜய் விமான மூலம் துபாய் புறப்பட்டு சென்றார்.
கடந்த சில தினங்களுக்கு முன்பு இப்படத்தின் கிளைமாக்ஸ் காட்சிகள் கேரளாவில் படமாக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியானது. இதனைத் தொடர்ந்து நடிகர் விஜய் கேரளாவுக்குச் சென்றார். அங்கு ரசிகர்களை விஜய் சந்திப்பார் எனவும் கூறப்பட்டது. அப்போது கேரளா ரசிகர்கள் பெருத்த ஆரவாரத்துடனும் அவரை வரவேற்றனர் என்பது நினைவிருக்கலாம்.
இறுதி கட்டத்தில் பாஜக, அதிமுக பேச்சுவார்த்தை.. ஏப்., 6ல் பிரதமரை சந்திக்கிறார் எடப்பாடி பழனிச்சாமி
கார்ல் மார்க்ஸ் திருவுருவச் சிலை அமைக்கும் அரசின் முடிவு வரவேற்கத்தக்கது: டாக்டர் ராமதாஸ் வரவேற்பு!
சென்னை மெட்ரோ பணிகளை.. டில்லி மெட்ரோ நிறுவனத்திடம் ஒப்படைப்பது சமூக அநீதி: டாக்டர். ராமதாஸ்!
தமிழ்நாட்டில்..17 மாவட்டங்களில்.. இன்றும், நாளையும் கனமழைக்கு வாய்ப்பு..!
அண்ணன் ராம்குமாருக்கு உதவ முடியாது .. கைவிரித்த நடிகர் பிரபு!
வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதாவை எதிர்த்து நாளை தமிழகம் முழுவதும் தவெக போராட்டம்!
ரூ.10 கோடி மதிப்பீட்டில்.. 500 புதிய ஆவின் பாலகங்கள் தொடங்கப்படும். சட்டசபையில் அறிவிப்பு!
வக்பு சட்ட மசோதா - இஸ்லாமியர்கள் மீதான பாசிச தாக்குதல் : விசிக தலைவர் திருமாவளவன்
வளர்பிறை சஷ்டி விரதம்... வியாழக்கிழமை வந்திருப்பது மிக மிக விசேஷமானது!
{{comments.comment}}