"தமிழக வெற்றி கழகம்".. தமிழ்நாடு முழுவதும் கொண்டாடித் தீர்க்கும் விஜய் ரசிகர்கள்!

Feb 02, 2024,02:54 PM IST

சென்னை: தமிழக வெற்றி கழகம் என்ற கட்சி பெயரை அறிமுகப்படுத்தி கட்சி தொடங்கியுள்ள விஜய்யையும், கட்சியையும் தமிழ்நாடு முழுவதிலும் உள்ள விஜய் ரசிகர்கள் இனிப்பு வழங்கியும், வெடி வெடித்தும் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.


நடிகர் விஜய் தமிழகத்தின் முன்னணி நடிகராக வலம் வருபவர். 1974ம் ஆண்டு ஜூன் 22ம் தேதி பிறந்தவர். இவர் அரசிலுக்கு எப்போது வருவார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருந்தனர். ரசிகர்களின் எதிர்பார்பை இன்று நிறைவேற்றியுள்ளார் நடிகர் விஜய். தமிழக வெற்றி கழகம் என்று கட்சி பெயரை இன்று அறிவித்துள்ளார். 




கடந்த 25ம் தேதி சென்னையை அடுத்த பனையூரில் மக்கள் இயக்க நிர்வாகிகளுடன் விஜய், ஆலோசனை நடத்தினார். வருகிற தேர்தல் குறித்து ஆலோசனை நடந்ததாக  நிர்வாகிகள் தரப்பில் கூறப்பட்டது. இந்நிலையில், டெல்லி சென்று புஸ்ஸி ஆனந்த் தேர்தல் அதிகாரிகளை சந்தித்து விட்டு வெளியே வந்த உடன் கட்சி பெயர் அறிவிக்கப்பட்டது.


சென்னையை அடுத்த பனையூரில் உள்ள விஜய்யின் பண்ணை வீடு இனி கட்சியின் தலைமை அலுவலமாக செயல்படும் என்று தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் அறிவித்துள்ளார். டிவிகே  விஜய் என்ற பெயரில் தனியாக சமூக வலைதளக் கணக்கு தொடங்கப்பட்டுள்ளது. அதில் முதல் பதிவாக கட்சியின் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.


இந்நிலையில், எப்போ? எப்போ? என்று ரசிகர் காத்திருந்த சூழலில் விஜய் கட்சி பெயர் அறிவித்ததை விஜய் ரசிகர்கள் உச்சாகத்துடன் கொண்டாடி வருகின்றனர்.தமிழகம் முழுவதிலும் உள்ள அவரது ரசிகர்கள் வெடி வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் கோலகலமாக கொண்டாடி வருகின்றனர். விஜய் ரசிகர்கள் பொதுமக்கள் அனைவர்களையும் அழைத்து இனிப்பு வழங்கியும். வருங்கால முதல்வர் வாழ்க! தளபதி வாழ்க! என்று கோஷங்கள் இட்டு கொண்டாட்டி வருகின்றனர். ரசிகர்கள் கோவில்களில் வழிபாடு செய்து சிறப்பு பூஜைகள் செய்து வருகின்றனர். 


தமிழகத்தின் வருங்கால முதல்வர். தமிழகத்தின் விடியலின் தலைவர். 2026ம் ஆண்டின் முதல்வர். எங்கள் தளபதி என்று கேக் வெட்டி விஜய்யின் படத்திற்கு ஊட்டியும் கொண்டாடி வருகின்றனர். 28 ஆண்டாக நலத்திட்ட உதவிகள் செய்து வருகிறோம். திரையுலகில் போட்டியை ஜெயித்தது போல அரசியலிலும் ஜெயிப்பார் என்று கூறியுள்ளனர் விஜய் ரசிகர்கள். மக்களாக இருந்து நலத்திட்ட உதவிகளை செய்து வந்தோம். இனி கட்சியாக மாறி செயல்படுவோம் என்று மதுரை மாவட்ட விஜய் ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.

சமீபத்திய செய்திகள்

news

நீட் விவகாரத்தில் ஏப்ரல் 9ல்.. சட்டமன்ற அனைத்து கட்சி ஆலோசனை கூட்டம்.. முதல்வர் மு.க ஸ்டாலின்

news

தமிழ்நாட்டில் இன்றும் .. 17 மாவட்டங்களில்‌.. கன மழைக்கு வாய்ப்பு.. சென்னை வானிலை ஆய்வு மையம்!

news

பாஜக தலைவர் மாற்றம் உறுதி... அண்ணாமலையே சூசகமாக தகவல்!

news

நெருப்புடா.. நெருங்குடா.. இன்று முதல் விஜய்க்கு ஒய் பிரிவு பாதுகாப்பு அமல்..!

news

நாளும் நல்லதுசெய்யும் முதலமைச்சர் இந்த இரண்டு செயல்களாலும் இன்னும் இன்னும் உயர்கிறார்: வைரமுத்து

news

வந்தோம் போனோம் என்று இருக்க மாட்டோம்.. இஸ்லாமியர்களுக்கு உறுதுணையாக இருப்போம் - தவெக

news

எஸ்ஐ பணியில் சேர ஆசையா?.. தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் வெளியிட்ட சூப்பர் அப்டேட்!

news

உங்கள் வாழ்வில் இருந்து ஒருவரை நீக்கும்போது.. அதன் மதிப்பை உடனடியாக அறிய மாட்டீர்கள்.. செல்வராகவன்!

news

கூலி படத்தின் முக்கிய அப்டேட் இன்று வெளியீடு.. வெறி வெயிட்டிங்கில் ரசிகர்கள்!!

அதிகம் பார்க்கும் செய்திகள்