விஜய்யின் 50 வது பிறந்தநாள்.. போக்கிரி ரீ ரிலீஸ்.. ரசிகர்களுக்கு செம ட்ரீட்.. கொண்டாட வெயிட்டிங்!

Jun 08, 2024,03:26 PM IST

சென்னை: தளபதி என்று ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்படும் நடிகர் விஜயின் 50 வது பிறந்த நாளை முன்னிட்டு, விஜய் நடிப்பில் உருவான போக்கிரி திரைப்படம் ஜூன் 21ஆம் தேதி உலகம் முழுவதும் ரீ ரிலீஸ் செய்யப்படவுள்ளது. இதற்காக ரசிகர்கள் இப்போதிலிருந்தே கொண்டாட்டத்திற்கு தயாராகி வருகின்றனர். ஜூன் 22ம் தேதி விஜய்யின் பிறந்த நாள் வருகிறது.


தற்போது சூப்பர் ஹிட் படங்கள் அனைத்தும் ரீலீஸ் செய்யப்படுவது ட்ரெண்டாகி வருகிறது. ரஜினி, கமல், விஜய், அஜித், உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்களின் மாபெரும் வெற்றி பெற்ற படங்களை ரீ ரிலீஸ் செய்யப்படுவதால் ரசிகர்கள் அதனை ஆவலோடு ரசித்து கொண்டாடி வருகின்றனர். இப்படி ஏகப்பட்ட படங்கள் ரீரிலீஸ் ஆன போதும் கூட கில்லிதான் ரீரிலீஸ் வசூலில் சாதனை படைத்தது.




கில்லி திரைப்படம் ரீ ரிலீஸ் செய்யப்பட்டு மாபெரும் வெற்றியடைந்தது மட்டுமல்லாமல் 50 நாட்களை தாண்டி இப்படம் வெற்றி நடை போட்டு வருவதுடன், வசூல் ரீதியாகவும் சாதனை படைத்து வருகிறது. நடிகர் விஜய்யின் ஐம்பதாவது பிறந்த நாள் ஜூன் 22 ஆம் தேதி கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. இது தவிர தமிழக வெற்றி கழகத்தின் தலைவராகவும், அக்கட்சி நிர்வாகிகள் விஜயின் 50 வது பிறந்தநாள் முன்னிட்டு பள்ளி மாணவ மாணவிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்க முன்னேற்பாடு நடவடிக்கைகளையும் செய்து வருகின்றனர்.


விஜயின் 50 வது பிறந்தநாள் விழாவில் ரசிகர்களுக்கு ட்ரீட் கொடுக்க இளைய தளபதி விஜய் நடிப்பில் உருவான போக்கிரி படம் வரும் ஜூன் 21ஆம் தேதி ரீ ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளனர். விஜயின் ஐம்பதாவது பிறந்தநாளை கொண்டாடுவதுடன் போக்கிரி படம் மீண்டும் ரிலீஸ் செய்யும் நாளுக்காக ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்து வருகின்றனர்.




இளையதளபதி விஜய் நடிப்பில், இயக்குனர் பிரபு தேவா இயக்கத்தில், கடந்த 2007 ஆம் ஆண்டு பொங்கலன்று போக்கிரி திரைப்படம் ரிலீஸ் ஆனது. இதில் தளபதி விஜய், அசின், வடிவேலு, நாசர், பிரகாஷ்ராஜ், நெப்போலியன், ஆனந்த்ராஜ், ஸ்ரீமன், வின்சென்ட், அசோகன், உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். இப்படத்தில் விஜயின் எதார்த்தமான நடிப்பு  ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.காதல், ஆக்சன், நகைச்சுவை, மற்றும் விறுவிறுப்பான திரைக்கதை என அனைத்து அம்சங்களும் நிறைந்து இருந்ததால் இப்படம் மக்கள் மனதில் நீங்கா இடத்தைப் பெற்றது. இது தவிர இப்படத்தில் அமைந்துள்ள அனைத்து பாடல்களும் சூப்பர் ஹிட் கொடுத்தது.


இது மட்டுமில்லாமல் இத்திரைப்படம் அப்போதே ஷிப்பிங் எனப்படும் மறுவெளியீட்டில் வெளியாகி 100 நாட்கள் ஓடி சாதனை படைத்தது என்பது நினைவிருக்கலாம்.


விஜய்க்கு 50 வயசானாலும், பார்க்க 25 வயது மாதிரிதான் இருக்கு என்பது ரசிகர்களின் தீர்ப்பு.. அப்படிப்பட்ட ரசிகர்கள் போக்கிரியை சும்மா விடுவார்களா.. வெறித்தனமாக கொண்டாட இப்போதிருந்தே வெயிட்டிங்தான்!

சமீபத்திய செய்திகள்

news

கூட்டணி அழைப்புக்கு நன்றி.. எங்கள் பயணம் எங்கள் கால்களை நம்பிதான்... கூட்டணி குறித்து சீமான் பதில்!

news

தயவு செய்து அவதூறு பரப்புவதை நிறுத்துங்க.. நடிகர் ஸ்ரீயின் குடும்பத்தினர் வேண்டுகோள்..!

news

சபரிமலையில் நடிகர்கள் கார்த்தி ரவி மோகன் சுவாமி தரிசனம்!

news

Today gold rate: வரலாறு காணாத தொடர் உயர்வில் தங்கம் விலை... அதிர்ச்சியில் வாடிக்கையாளர்கள்!

news

வக்பு சட்டத்தை கண்டித்து.. கடை அடைப்பு போராட்டம் நெல்லையில் பரபரப்பு..!

news

கோடை விடுமுறையை மாணவர்கள் பயனுள்ள வகையில் கழிக்க வேண்டும்.. அமைச்சர் அன்பில் மகேஷ்..!

news

அது மட்டும் பண்ணாதீங்க...அமைச்சர்களுக்கு முதல்வர் கொடுத்த அட்வைஸ்

news

குடியரசுத் தலைவருக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட முடியுமா..? குடியரசு துணைத் தலைவர் ஜக்தீப் கேள்வி..!

news

good friday 2025 : புனித வெள்ளிக்கு ஏன் இந்த பெயர் வந்தது தெரியுமா?

அதிகம் பார்க்கும் செய்திகள்