இன்று தலைவர்.. நாளை முதல்வரா.. எதிர்பார்ப்பில் விஜய் ரசிகர்கள்.. டபுள் டிரீட்டுடன் .. கொண்டாட்டம்

Jun 22, 2024,10:52 AM IST

- அஸ்வின்


சென்னை: நேற்று நடிகர்.. இன்று தலைவர்.. நாளை தமிழ்நாட்டின் முதல்வர் என்று விஜய் ரசிகர்கள் உற்சாகத்துடன் மாநிலம் அவரது பிறந்த நாளை கொண்டாடுகின்றனர். கள்ளக்குறிச்சி சம்பவம் தொடர்பாக பிறந்த நாள் கொண்டாட்டம் வேண்டாம் என்று விஜய் அறிவித்துள்ள போதிலும் கூட கோவிலில் தங்கத் தேர் இழுப்பது உள்ளிட்ட பல்வேறு பணிகளில் அவர்கள் ஈடுபட்டுள்ளனர்.


விஜய் பிறந்த நாளையொட்டி அவரைப் பற்றிய ஒரு ரவுண்டப்.. 




கள்ளக்குறிச்சியில் நடந்த கள்ளச்சாராயம் சம்பவத்தால் பாதிக்கப்பட்ட அனைவரையும் நேரில் சென்று விசாரித்த விஜய் அவர்களுக்கு ஆறுதலளித்துள்ளார். இந்த துயரச் சம்பவம் காரணமாக, பிறந்த நாளை கொண்டாட வேண்டாம் என்று அவரது ரசிகர் மன்ற நிர்வாகிகளுக்கும் பொதுமக்களுக்கும் கோரிக்கை விடுத்துள்ளார். சமூகத்தின் மீது விஜய் விழிப்புணர்வோடு இருக்கிறார், சமூகத்தின் மீது அக்கறையோடு இருக்கிறார் என்பதையே இது உணர்த்துவதாக ரசிகர்கள் சொல்கிறார்கள். இவர் நாளை அரசியல்வாதியாக மாறும்போது, மிகச் சிறந்த எடுத்து காட்டாக இருப்பார் என்றும் ரசிகர்கள் அடித்துச் சொல்கிறார்கள்.


ஸ்டெர்லைட் விஷயத்திலும், ஜல்லிக்கட்டு போராட்டத்திலும் இவர் நடந்து கொண்ட விதம் இன்று வரை மக்கள் மனதை விட்டு அகலவில்லை. ஜல்லிக்கட்டு போராட்டத்தில் தனி ஒரு மனிதராக சத்தம் இல்லாமல் இளைஞர்களோடு அருகே அமர்ந்து அந்தப் போராட்டத்தை ஆதரித்தார்.  இதுபோன்று சமூகத்தின் மீது அதிகமான ஒரு கவனம் இவருக்கு எப்பொழுதும் இருக்கிறது. தமிழக வெற்றி கழகத்தை இவர் ஆரம்பித்ததற்கு காரணமும் அதுதான். இளைஞர்களை நல்ல பாதையில், நகர்த்த வேண்டும். இளைஞர்களை வழிநடத்த வேண்டும் என்பதே இவரது நோக்கம்.


தமிழ்நாட்டு மக்களுக்கு இப்பொழுது நல்ல தலைவர் வேண்டும் என்பதே பலரின் ஏக்கமாக உள்ளது. அதை இவரும் அறிந்ததே அந்த நல்ல தலைவராக தான் விளங்க, உருவெடுக்கும் நோக்கில் மக்களை கவர முயற்சித்து வருகிறார். மக்களை கவர மட்டும் இல்லாமல் மக்களுக்கு என்ன என்ன மாதிரி நன்மைகளை செய்ய வேண்டும் என்றும் நாள்தோறும் யோசித்து அவரது ஒவ்வொரு நடவடிக்கைகளிலும் அதை பிரதிபலிக்கிறார். 


தன் மீது வைக்கப்படும் விமர்சனங்களையும் வதந்திகளையும் விஜய் ஒரு சேர எடுத்து்க கொள்கிறார். எதற்கும் கோபப்படாமல், நிதானமாக நடந்து கொள்வதிலும், தனது மெளனத்தால் அனைத்திற்கும் பதில் சொல்கிறார். அது அவரது தனி சிறப்பாக மாறியுள்ளது. மௌனம் என்பதே அவருக்கு ஒரு மிகப்பெரிய ஒரு ஆயுதம். அது அவருக்கு பல இடங்களில் கை கொடுத்து இருக்கிறது. இதுதான் அவரது வெற்றியின் உச்சத்தை தொட்ட அந்த ரகசியம்.


இன்றைய விஜய் பிறந்த நாளை அவரது ரசிகர்கள் நள்ளிரவில் கோட் படத்தின் கிளிம்ப்ஸ், மாலையில் 2வது சிங்கிள் என்று தடபுடலாக, டபுள் ட்ரீட்டுடன் கொண்டாடுகின்றனர். விரைவில் விஜய் தனது அரசியல் மாநாட்டைப் பற்றி அறிவிப்பார் என்ற பெருத்த எதிர்பார்ப்பும் ரசிகர்கள் மத்தியில் ஓடிக் கொண்டிருக்கிறது. அதற்காகவும் ரசிகர்கள் ஆவலோடு காத்திருக்கிறார்கள்.

சமீபத்திய செய்திகள்

news

Orange alert: தமிழ்நாட்டில் ஒரிரு இடங்களில் 26 மற்றும் 27 தேதிகளில் மிக கன மழை எச்சரிக்கை!

news

ஜாமின் கிடைத்ததைத் தொடர்ந்து.. புழல் சிறையிலிருந்து வெளியே வந்தார் நடிகை கஸ்தூரி

news

அமெரிக்கா கோர்ட் பிடிவாரண்ட்.. அதானியை உடனடியாக கைது செய்ய வேண்டும்.. ராகுல்காந்தி ஆவேசம்

news

விஜய் பங்கேற்கும்.. அம்பேத்கர் புத்தக வெளியீட்டு விழாவில் கலந்து கொள்ள மாட்டார் திருமாவளவன்!

news

தனுஷ் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் விவாகரத்து வழக்கில் இறுதிக் கட்டம்.. 27ம் தேதி தீர்ப்பு வழங்கப்படுகிறது!

news

கடுப்பா இருக்கா பாஸ்.. வாங்க கடிக்கிறோம்.. கலகலன்னு சிரிங்க.. மைன்ட் free ஆகி.. face பிரெஷ்ஷாய்ரும்!

news

ஆசிரியை ரமணியின் குடும்பத்திற்கு ரூ. 5 லட்சம் உதவி.. தாயாரிடம் வழங்கினார் அமைச்சர் கோவி.செழியன்

news

Chennai Lakes.. நீர் இருப்பில் மாற்றம் இல்லை.. புதிய காற்றழுத்தத் தாழ்வுக்காக ஏரிகள் வெயிட்டிங்!

news

Rain forecast: 5 மாவட்டங்களில் இன்று மிக கன மழைக்கு வாய்ப்பு.. 7 மாவட்டங்களில் கன மழை!

அதிகம் பார்க்கும் செய்திகள்