சென்னை: அனைவரும் ஆ்வலுடன் எதிர்பார்த்திருந்த நடிகரும், தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் தலைவருமான விஜய் இன்று ரசிகர்கள் புடை சூழ நீலாங்கரையில் உள்ள வாக்குச் சாவடிக்கு வருகை தந்து வாக்களித்தார்.
ஒவ்வொரு வருடமும் நடிகர் விஜய் தனது வீட்டிற்கு அருகே உள்ள வாக்கு மையத்தில் வாக்களிப்பார். கடந்த முறை விஜய் சைக்கிளில் பயணம் செய்து தனது வாக்கினை செலுத்த வந்தார். இவரை காண ரசிகர் பட்டாளம் பெருமளவில் திரண்டது. அப்போது அவரது சைக்கிளில் கருப்பு சிவப்பு நிறம் இருந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அவர் திமுகவுக்குத்தான் வாக்களிக்க சொல்கிறார் என்று பரபரப்பாக பேசப்பட்டது.
இந்த நிலையில் இந்த வருடமும் நடிகர் விஜய் என்ன கலர் சட்டை போடுவார், சைக்கிளில் வருவாரா அல்லது காரில் வருவாரா அல்லது எப்படி வருவார்.. எப்போது வருவார்.. என்ன குறியீட்டை வெளிப்படுத்துவார் என்று ரசிகர்கள் செம உற்சாகத்துடன் காத்திருந்தனர்.
வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிகர் விஜய் கோட்படத்தில் தீவிரமாக நடித்து வருகிறார். இதற்காக ரஷ்யாவில் தற்போது இறுதி கட்டப்பட பிடிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. அரசியலிலும் குதித்துள்ள விஜய் தனது தமிழக வெற்றிக் கழகம் கட்சி அடுத்த சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடும் என்றும் அறிவித்துள்ளார். கமிட்டான இரண்டு படங்களில் விரைவாக நடித்து முடித்துவிட்டு அரசியலில் முழுமையாக இறங்க தயாராக உள்ளார்.
இந்த சூழ்நிலையில் வாக்களிப்பது ஜனநாயக உரிமை, கடமை என பல்வேறு திரைப்படங்களில் பேசி நடித்தவர் நடிகர் விஜய். எனவேதான் தனது வாக்கின் முக்கியத்துவத்தை உணர்ந்து ரஷ்யாவில் இருந்து தற்போது சென்னைக்கு வந்தார் விஜய். அவருடன் கோட் படக்குழுவினரும் சென்னை வந்தடைந்தனர். இந்த நிலையில் பிற்பகல் 12. 30 மணியளவில் தனது வீட்டிலிருந்து காரில் வாக்குச் சாவடிக்குப் புறப்பட்டார் நடிகர் விஜய். வழியெங்கும் அவரை நூற்றுக்கணக்கான ரசிகர்களும் கூடவே வந்தனர். இதனால் வழக்கம் போல வாகன அணிவகுப்புடன் வாக்குச் சாவடிக்கு வந்த விஜய் அங்கு தனது வாக்கைப் பதிவு செய்தார்.
விஜய் இந்த முறை எந்தவிதமான குறியீட்டையும் வெளிப்படுத்தவில்லை என்பதால் பலரும் ஏமாற்றமடைந்தனர்.
Orange alert: தமிழ்நாட்டில் ஒரிரு இடங்களில் 26 மற்றும் 27 தேதிகளில் மிக கன மழை எச்சரிக்கை!
ஜாமின் கிடைத்ததைத் தொடர்ந்து.. புழல் சிறையிலிருந்து வெளியே வந்தார் நடிகை கஸ்தூரி
அமெரிக்கா கோர்ட் பிடிவாரண்ட்.. அதானியை உடனடியாக கைது செய்ய வேண்டும்.. ராகுல்காந்தி ஆவேசம்
விஜய் பங்கேற்கும்.. அம்பேத்கர் புத்தக வெளியீட்டு விழாவில் கலந்து கொள்ள மாட்டார் திருமாவளவன்!
தனுஷ் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் விவாகரத்து வழக்கில் இறுதிக் கட்டம்.. 27ம் தேதி தீர்ப்பு வழங்கப்படுகிறது!
கடுப்பா இருக்கா பாஸ்.. வாங்க கடிக்கிறோம்.. கலகலன்னு சிரிங்க.. மைன்ட் free ஆகி.. face பிரெஷ்ஷாய்ரும்!
ஆசிரியை ரமணியின் குடும்பத்திற்கு ரூ. 5 லட்சம் உதவி.. தாயாரிடம் வழங்கினார் அமைச்சர் கோவி.செழியன்
Chennai Lakes.. நீர் இருப்பில் மாற்றம் இல்லை.. புதிய காற்றழுத்தத் தாழ்வுக்காக ஏரிகள் வெயிட்டிங்!
Rain forecast: 5 மாவட்டங்களில் இன்று மிக கன மழைக்கு வாய்ப்பு.. 7 மாவட்டங்களில் கன மழை!
{{comments.comment}}