அய்யா சாமீகளா.. ரோமியோ நல்ல படம்.. அன்பே சிவம் ஆக்கிடாதிங்க.. விஜய்ஆண்டனி

Apr 20, 2024,03:10 PM IST

சென்னை: என் அன்பு மக்களே ரோமியோ ஒரு நல்ல படம். போய் பாருங்க புரியும். ரோமியோவ அன்பே சிவம் ஆக்கிடாதீங்க என இசையமைப்பாளரும், நடிகருமான  விஜய் ஆண்டனி தெரிவித்துள்ளார்.


இசையமைப்பாளராக  விஜய் ஆண்டனி பல பாடல்களுக்கு இசையமைத்துள்ளார். இவரது இசையில் வெளியான பாடல்களுக்கு நல்ல வரவேற்பு உண்டு. இசை மட்டுமல்ல நடிப்பிலும் கலக்கியவர். நான், சலீம், சைத்தான், பிச்சக்காரன் போன்ற இவரது படங்கள் மாபெரும் வரவேற்பை பெற்றன. நடிகராக மட்டும் அல்லாமல் தயாரிப்பாளர், எடிட்டர், இயக்குநர் என பன்முக திறமை கொண்டராக வளம் வந்தவர்.மேலும், பிச்சைக்காரன் 2 படத்தின் மூலம் இயக்குநராகவும் அவதாரம் எடுத்தார்.


இந்நிலையில், குட் டெவில் புரொடக்சன் சார்பில் விஜய் ஆண்டனி ரோமியோ படத்தை தயாரித்துள்ளார். விநாயக் வைத்தியநாதன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி, மிருணாளினி ரவி நடிப்பில் சில நாட்களுக்கு முன்பு ரோமியோ படம் வெளியானது. இந்த படம் குறித்து விஜய் ஆண்டனி இன்று தனது எக்ஸ் தள பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதில், ரோமியோ போன்ற பல நல்ல படங்களை கொண்டாடாமல், தமிழ் சினிமாவை குறை சொல்லும் அறிவு ஜீவிகளுக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள். என் அன்பு மக்களே ரோமியோ ஒரு நல்ல படம். போய் பாருங்க புரியும். ரோமியோவ அன்பே சிவம் ஆக்கிடாதீங்க என கூறியுள்ளார்.




இதற்கு ப்ளூ சட்டை மாறன் நக்கலான பதிலடி கொடுத்துள்ளார். அவரும் ஒரு போஸ்ட் போட்டு எரியும் தீயில் பெட்ரோலையும், டீசலையும் கலந்து ஊற்றி வேடிக்கை காட்டி வருகிறார்.

சமீபத்திய செய்திகள்

news

தமிழ்நாட்டில் இன்றும் .. 17 மாவட்டங்களில்‌.. கன மழைக்கு வாய்ப்பு.. சென்னை வானிலை ஆய்வு மையம்!

news

உங்கள் வாழ்வில் இருந்து ஒருவரை நீக்கும்போது.. அதன் மதிப்பை உடனடியாக அறிய மாட்டீர்கள்.. செல்வராகவன்!

news

12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் ஏப்ரல் 04, 2025...யாருக்கு என்ன பலன் காத்திருக்கு?

news

எஸ்ஐ பணியில் சேர ஆசையா?.. தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் வெளியிட்ட சூப்பர் அப்டேட்!

news

இறுதி கட்டத்தில் பாஜக, அதிமுக பேச்சுவார்த்தை.. ஏப்., 6ல் பிரதமரை சந்திக்கிறார் எடப்பாடி பழனிச்சாமி

news

கார்ல் மார்க்ஸ் திருவுருவச் சிலை அமைக்கும் அரசின் முடிவு வரவேற்கத்தக்கது: டாக்டர் ராமதாஸ் வரவேற்பு!

news

சென்னை மெட்ரோ பணிகளை.. டில்லி மெட்ரோ நிறுவனத்திடம் ஒப்படைப்பது சமூக அநீதி: டாக்டர். ராமதாஸ்!

news

தமிழ்நாட்டில்..17 மாவட்டங்களில்.. இன்றும், நாளையும் கனமழைக்கு வாய்ப்பு..!

news

அண்ணன் ராம்குமாருக்கு உதவ முடியாது .. கைவிரித்த நடிகர் பிரபு!

அதிகம் பார்க்கும் செய்திகள்