- வர்ஷினி
சென்னை: அக்டோபர் 6ந் தேதி முதல் உலகம் முழுவதும் திரையரங்கில் வெளியிட தயாராக உள்ள ரத்தம் திரைப்படம் 100% திருப்தியை அளிக்கும். இப்படத்தை பார்க்கும்போது திருப்தியாகவும், மகிழ்ச்சியாகவும் உணர்கிறேன் என தனது பட அனுபவத்தை நடிகர் விஜய் ஆண்டனி கூறியிருக்கிறார்.
நடிகரும், இசையமைப்பாளரும் ஆன விஜய் ஆண்டனி ரத்தம் படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார். தொடர்ந்து வெற்றியைப் பெற்ற இவருடைய படங்களை அடுத்து வரும் விஜய் ஆண்டனியின் ரத்தம் படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் மட்டுமல்லாது வர்த்தக வட்டாரத்திலும் அதிகரித்துள்ளது.
அக்டோபர் 6 ந் தேதி இப்படம் திரைக்கு வருகிறது. தமிழ் படம் 1 மற்றும் தமிழ் படம் 2 படங்களை இயக்கிய சி .எஸ் அமுதன் ரத்தம் திரைப்படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தை இன்பினிட்டி பிலிம் வென்சர்ஸின் கமல் போஹ்ரா, டி .லலிதா, பி .பிரதீப் மற்றும் பங்கஜ் போஹ்ரா ஆகியோர் தயாரித்துள்ளனர் . கண்ணன் நாராயணன் இசையமைக்கிறார் .கோபி அமர்நாத் ஒளிப்பதிவு செய்ய, படத் தொகுப்பை
டி .எஸ் சுரேஷ் கையாண்டு உள்ளார்.
படத்தில் பணிபுரிந்த அனுபவம் குறித்து விஜய் ஆண்டனி கூறியதாவது:
சி.எஸ்.அமுதனின் திறமை குறித்து எனக்கு பல வருடங்களாக தெரியும். அவர் ஸ்பூஃப் அடிப்படையிலான திரைப்படங்கள் எடுப்பதில் பிரபலமானவர் என்றாலும், வெவ்வேறு ஜானர்களில் கதையை படமாக்குவதிலும் அவர் திறமையானவர். ரத்தம் படத்தின் கதையை அவர் என்னிடம் சொன்னபோது எனக்கு உடனே பிடித்துப் போனது மற்றும் அந்தக் கதையை காட்சிப்படுத்துவதும் மிகவும் எளிதாக இருந்தது. என் கேரியரில் இது ஒரு வித்தியாசமான படமாக இருக்கும் என்று நான் நம்பினேன். மேலும், இது உலகெங்கிலும் உள்ள பார்வையாளர்களை நிச்சயம் ஈர்க்கும். படத்தின் இறுதி வடிவத்தைப் பார்க்கும் போது திருப்தியாகவும் மகிழ்ச்சியாகவும் உணர்கிறேன்.
இந்த படத்தில் உள்ள ஒவ்வொரு கதாபாத்திரமும் முக்கியத்துவம் வாய்ந்தது. முழு கதையும் அவர்களால் தான் நகரும். தீவிரமான அர்ப்பணிப்புடன் மஹிமா நம்பியார், நந்திதா ஸ்வேதா, ரம்யா நம்பீசன் என எல்லாருமே சிறப்பாக நடித்திருக்கிறார்கள். இந்த படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரம் கூட படத்திற்கு வலு சேர்க்கும். ‘ரத்தம்’ படம் பார்த்து விட்டு பார்வையாளர்கள் திரையரங்குகளை விட்டு வெளியே வரும்போது நிச்சயம் அவர்களுக்கு 100% திருப்தியைத் தரும்" என கூறினார் விஜய் ஆண்டனி.
Govt Holidays 2024: ஏப்ரல் 14ம் தேதி தமிழ்ப் புத்தாண்டு விடுமுறை.. எந்த மாதத்தில் அதிக லீவு?
Rain alert: நவம்பர் 26, 27, 28.. தமிழ்நாட்டில் மிக கன மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் தகவல்
Political Talk.. எம்ஜிஆர் ஜெயலலிதா எழுதிய வரலாற்றை.. வலுக்கட்டாயமாக அழிக்கிறதா அதிமுக?
மாநாட்டில் விஜய் கலக்கிவிட்டார்.. இப்படி பேசுவார் என நினைச்சுக் கூட பார்க்கலை.. எஸ்.ஏ.சந்திரசேகர்
TVK.. மாவட்டச் செயலாளர்களாக யாரைப் போடலாம்.. தீவிரமாக களம் குதித்த விஜய்யின் தவெக!
AIADMK.. கள ஆய்வுக் கூட்டங்களில் தொடர்ந்து மோதல்.. வெடிக்கும் தொண்டர்கள்.. திகைப்பில் தலைமை!
Special Story: சிங்கம் கழுகு கூட்டணியா.. சிலாகிக்கும் NTK.. சீமான் விளக்கம்.. ரஜினி சந்திப்பு ஏன்?
ரஜினியை சீமான் சந்தித்து விட்டு வந்த மறு நாளே.. கோவை வடக்கு நாதக நிர்வாகிகள் கூண்டோடு விலகல்!
Kooran movie.. நாம எத்தனை வழக்கு போடறோம்.. ஒரு நாய் நம்ம மேல கேஸ் போட்டா எப்படி இருக்கும்!
{{comments.comment}}