தகுதி நீக்கம் செய்யப்பட்ட.. வினேஷ் போகத்துக்கு நீர்ச்சத்து குறைவு.. மருத்துவமனையில் சிகிச்சை!

Aug 07, 2024,03:52 PM IST

புதுடெல்லி:   நீர்ச்சத்து குறைபாடு காரணமாக இந்திய மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத்  பாரீஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவர் சுயநினைவு இல்லாமல் இருப்பதாக உறவினரும் பயிற்சியாளரான மகாவீர் சிங் போகத் தெரிவித்துள்ளார்.


16 பேர் கொண்ட சுற்றில் நாக் அவுட் சுற்று, கால் இறுதி மற்றும் அரை இறுதி ஆகிய மூன்று போட்டிகளிலும் விளையாடி வெற்றி பெற்றார் வினேஷ் போகத் .இதனைத் தொடர்ந்து இன்று இறுதிப்போட்டி நடக்க இருந்தது. அதன் முன்னதாக  ஒலிம்பிக் மல்யுத்த விதிமுறைகளின் படி 50 கிலோ எடை பிரிவில் சரியாக 50 கிலோ இருக்க வேண்டும். மாறாக நேற்று மாலை அவர் எடை கூடுதலாக 2 கிலோ  இருந்துள்ளரா.




இதையடுத்து எடையைக் குறைக்க கடுமையான உடற்பயிற்சி செய்துள்ளார். விடிய விடிய உடற்பயிற்சி செய்தும் கூட அவரது இறுதி எடை 50 கிலோ 100 கிராமாக இரு்நதது.  இதனால்  வினேஷ் போகத் தகுதி நீக்கம் செய்யப்பட்டார். உடல் எடையை குறைப்பதற்காக இரவு முழுவதும் சாப்பிடாமல் தூங்காமல் விடிய விடிய உடற்பயிற்சி செய்து ஒரே இரவில் 1.85 கிலோ எடையை குறைத்ததால் அவரது உடல் பலவீனமடைந்தது. நீர்ச்சத்து குறைபாடும் ஏற்பட்டது.


மயக்க நிலையில் இருந்த அவர் பாரீஸ் ஒலிம்பிக் கிராமத்திலேயே உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு விக்னேஷ் போகத் சுய நினைவில்லாமல் இருப்பதாகவும், தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும், வினேஷ் போகத்தின் பெரியப்பாவும் பயிற்சியாளருமான மகாவீர் சிங் போகத் தகவல் தெரிவித்துள்ளார்.  அதேசமயம், அவரது உடல் நிலை ஸ்திரமாக இருப்பதாகவும், ஓய்வில் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகள்

news

ஒரே நாடு ஒரே தேர்தல் சாத்தியமற்றது.. கூட்டாட்சி தத்துவத்தை சிதைக்கும்.. முதல்வர் மு.க.ஸ்டாலின்

news

மகாத்மா காந்தி பிறந்த மாதத்தில்.. புதிய மதுபானக் கொள்கையை அறிமுகப்படுத்தும் ஆந்திர அரசு!

news

ஐபிஎல் 2025 வருது வருது.. நவம்பரில் வீரர்கள் ஏலம்.. துபாயா, தோஹாவா இல்லாட்டி அபுதாபியா?

news

பெண் உதவியாளரை நாசப்படுத்தியதாக.. அரபி குத்து, காவாலா பாடல் புகழ் ஜானி மாஸ்டர் கைது!

news

சபாஷ் பாஸ்கர்.. மாற்றுத் திறனாளி பயணியிடம் காட்டிய கனிவு.. வேற லெவல் மாற்றத்தில் சென்னை எம்டிசி!

news

வங்கதேசத்துடன் கிரிக்கெட் போட்டி கூடாது.. சென்னையில் போராட்டத்தில் குதித்த இந்து மக்கள் கட்சி

news

என்ன தலைவா.. கடைசியில நீயும் அரசியல்வாதி ஆகிட்டியே?.. விஜய் போட்ட டிவீட்.. கதறும் கட்சிகள்!

news

அதீத பணிச்சுமை.. வீடு திரும்பிய இளம் பெண்.. படுக்கையில் சரிந்து பரிதாப மரணம்!

news

நவராத்திரி விற்பனை கண்காட்சி.. சென்னையில்.. செப்டம்பர் 21 முதல் கோலாகல தொடக்கம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்