"பறக்கும் பந்து பறக்கும்"... ஜாலியாக பேட்மிண்டன் விளையாடும் லாலு பிரசாத் யாதவ்!

Jul 29, 2023,12:13 PM IST
டெல்லி: சிறுநீரகப் பிரச்சினை, சிறுநீரக மாற்று அறுவைச் சிகிச்சை, மத்திய புலனாய்வு அமைப்புகளின் தொடர் விசாரணை என தொடர்ந்து அழுத்தமான வாழ்க்கையில் இருந்து வரும் பீகார் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவ் ஜாலியாக பேட்மிண்டன் விளையாடும் வீடியோவை அவரது மகனும், பீகார் துணை முதல்வருமான தேஜஸ்வி யாதவ் வெளியிட்டுள்ளார்.

ராஷ்டிரிய ஜனதாதள தலைவரான லாலு பிரசாத் யாதவுக்கு தற்போது 75 வயதாகிறது.  அவர் மீது ஏகப்பட்ட வழக்குகளை மத்திய புலனாய்வு ஏஜென்சிகள் போட்டுள்ளன. அதுதொடர்பாக அவர் கைது செய்யப்பட்டார். தொடர் விசாரணைக்குட்படுத்தப்பட்டார். தற்போது உடல் நலக் குறைவு காரணமாக ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டு வெளியில் உள்ளார்.



கடந்த டிசம்பர் மாதம் அவருக்கு சிங்கப்பூரில் சிறுநீரக மாற்று அறுவைச் சிகிச்சை நடத்தப்பட்டது. அவரது இளைய மகள் ரோஹினிதான் சிறுநீரகம் தானம் செய்துள்ளார். இந்த அறுவைச் சிகிச்சைக்குப் பிறகு டெல்லி திரும்பிய லாலு அங்குள்ள தனது மூத்த மகள்  மிசாவின் வீட்டில்தான் தங்கியிருந்தார். சமீபத்தில்தான் அவர் பாட்னா திரும்பினார். அதன் பின்னர் எதிர்க்கட்சிக் கூட்டணிக் கூட்டங்களில் ஆக்டிவாக பங்கேற்று வருகிறார்.

பாட்னா கூட்டத்தில் அவர் பங்கேற்றார். பாஜகவுக்கு எதிராகவும் தொடர்ந்து பேசி வருகிறார். தனது தந்தையை பல்வேறு வழிகளிலும் முடக்கப் பார்க்கிறது பாஜக. இதற்காக மத்திய புலனாய்வு ஏஜென்சிகளையும் அது ஏவி வருகிறது. ஆனால் அவரை முடக்க முடியாது என்று கூறி வருகிறார் தேஜஸ்வி யாதவ்.

இந்த நிலையில் தனது தந்தை பேட்மிண்டன் விளையாடுவது போன்ற ஒரு வீடியோவை அவர் வெளியிட்டுள்ளார். அதில், பயப்படாதவர்.. யாருக்கும் அடி பணியாதவர்.. போராடியுள்ளார்.. போராடிக் கொண்டிருக்கிறார்.. போராடிக் கொண்டே இருப்பார்.. ஜெயிலுக்குப் போக அஞ்சாதவர்.. தொடர்ந்து வெல்வார் என்று கூறியுள்ளார் தேஜஸ்வி யாதவ்.

சமீபத்திய செய்திகள்

news

ஏக்கம் (ஒரு பக்க சிறுகதை)

news

வங்கக் கடல் காற்று சுழற்சி.. தமிழ்நாடு, இலங்கையை நோக்கி நகரக் கூடும்.. வானிலை மையம்

news

நிக்கோபார் தீவு அருகே.. காற்றழுத்தத் தாழ்வு உருவாக ஆரம்பித்து விட்டது.. தமிழ்நாடு வெதர்மேன்

news

நவம்பர் 22 - இன்றைய நல்ல நேரம், செய்ய வேண்டிய வழிபாடு

news

மங்களகரமான வெள்ளிக்கிழமையில் பண மழையில் நனையப் போகும் 2 ராசிக்காரர்கள்

news

Orange alert: தமிழ்நாட்டில் ஒரிரு இடங்களில் 26 மற்றும் 27 தேதிகளில் மிக கன மழை எச்சரிக்கை!

news

ஜாமின் கிடைத்ததைத் தொடர்ந்து.. புழல் சிறையிலிருந்து வெளியே வந்தார் நடிகை கஸ்தூரி

news

அமெரிக்கா கோர்ட் பிடிவாரண்ட்.. அதானியை உடனடியாக கைது செய்ய வேண்டும்.. ராகுல்காந்தி ஆவேசம்

news

விஜய் பங்கேற்கும்.. அம்பேத்கர் புத்தக வெளியீட்டு விழாவில் கலந்து கொள்ள மாட்டார் திருமாவளவன்!

அதிகம் பார்க்கும் செய்திகள்