சென்னை: பழம்பெரும் நடிகர் ஜூனியர் பாலையா எனப்படும் ரகு பாலையா காலமானார்.
மூத்த முதுபெரும் நடிகர் டி.எஸ். பாலையாவின் 3வது மகன்தான் ஜூனியர் பாலையா எனப்படும் ரகு பாலையா. தனது தந்தை வழியிலும் தானும் நடிகராக வலம் வந்தவர். காமெடியா கதாபாத்திரங்களில் பெரும்பாலும் நடித்திருப்பார். சில படங்களில் குணச்சித்திர வேடங்களிலும் நடித்துள்ளார்.
மேல்நாட்டு மருமகள் படம்தான் இவரது முதல் படமாகும். அதிலிருந்து தொடங்கிய இவரது திரை வாழ்க்கையில், கரகாட்டக்காரன், கோபுர வாசலிலே உள்ளிட்ட பல படங்கள் முக்கியமானதாக அமைந்தது. சில முக்கியமான டிவி தொடர்களிலும் கூட இவர் நடித்துள்ளார். சிறு சிறு வேடங்களில் வந்தாலும் கூட தனது பாணி நடிப்பால் முத்திரை பதித்தவர் ஜூனியர் பாலையா.
குறிப்பாக பாக்யராஜ் இயக்கத்தில் வெளியான விட்ல விசேஷங்க, சுந்தரகாண்டம் படங்களில் இவரது கேரக்டர் வெகுவாக பேசப்பட்டது. கடைசியாக ஜூனியர் பாலையா நடித்த படம் என்னங்க சார் உங்க சட்டம் தான். அதன் பிறகு நடிக்கவில்லை. தனது கெரியர் முழுவதும் துணைக் கதாபாத்திரங்களில்தான் நடித்துள்ளார் ஜூனியர் பாலையா. தனது தந்தையைப் போலவே பெரிய அளவில் வருவார் என்று எதிர்பார்க்கப்பட்டாலும் கூட அது நடக்காமல் போய் விட்டது. ஜூனியர் பாலையா போலவே அவரது மகன் ரோஹித் பாலையாவும் நடிகராக உருவாகியுள்ளார்.
பாலையாவின் உடல் சென்னை ஆழ்வார்திருநகர், ராமகிருஷ்ணா நகர், வாஞ்சிநாதன் தெருவில் உள்ள அவரது வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள், திரையுலகினர் அஞ்சலிக்குப் பிறகு இறுதிச் சடங்குகள் இன்று மாலை நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கோடை விடுமுறையை மாணவர்கள் பயனுள்ள வகையில் கழிக்க வேண்டும்.. அமைச்சர் அன்பில் மகேஷ்..!
அது மட்டும் பண்ணாதீங்க...அமைச்சர்களுக்கு முதல்வர் கொடுத்த அட்வைஸ்
குடியரசுத் தலைவருக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட முடியுமா..? குடியரசு துணைத் தலைவர் ஜக்தீப் கேள்வி..!
good friday 2025 : புனித வெள்ளிக்கு ஏன் இந்த பெயர் வந்தது தெரியுமா?
என்னென்ன காயெல்லாமோ சாப்பிட்டிருப்பீங்க.. தோசைக்காய பப்பு டேஸ்ட் பண்ணிருக்கீங்களா..!
12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் ஏப்ரல் 18, 2025...யாருக்கு என்ன பலன் காத்திருக்கு?
ஹஜ் ஒதுக்கீடு ரத்து...பிரதமர் தலையிட முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்
வக்பு வாரிய சட்டத் திருத்தத்திற்கு.. இடைக்கால தடை.. உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு!
மதுரை சித்திரை திருவிழா... அன்னதானம் வழங்க விதிமுறைகள் அறிவிப்பு!
{{comments.comment}}