மீண்டும் பிரச்சாரக் களத்தில் குதிக்கும் நடிகர் கார்த்திக்.. ஏப்ரல் 9 முதல் 17 வரை.. அதிமுகவுக்காக!

Apr 06, 2024,02:53 PM IST

சென்னை: நமது மனித உரிமை காக்கும் கட்சியின் நிறுவனத் தலைவரும், பிரபல நடிகருமான  கார்த்திக் நீண்ட இடைவெளிக்குப் பிறகு தீவிர அரசியல் களத்தில் குதிக்கவுள்ளார். 


அதிமுக சார்பாக போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து வரும் ஏப்ரல் 9ஆம் தேதி முதல் ஏப்ரல் 17ஆம் தேதி வரை பல்வேறு இடங்களில் தேர்தல் பிரச்சார மேற்கொள்ள உள்ளார் நடிகர் கார்த்திக்.


தமிழ் சினிமாவில் 80, 90களில் உச்ச நடிகர்களில் ஒருவராக விளங்கியவர் நவரச நாயகன் கார்த்திக். 1981 ஆம் ஆண்டு தமிழில் பாரதிராஜா இயக்கிய அலைகள் ஓய்வதில்லை என்ற படம் மூலம் அறிமுகமானவர். ஒரு காலத்தில் பெண்களின் கனவு மன்னன் ஆகவும் திகழ்ந்தவர். இவர் நடித்த படங்கள் என்றாலே காதலை மையப்படுத்தி அமைந்திருக்கும். அதனால் தான் இவரை காதல் மன்னன் எனவும் ரசிகர்கள் அழைத்து வந்தனர். 




சினிமாவில் உச்சத்தில் இருந்தபோதே சரணாலயம் என்ற அமைப்பை உருவாக்கி செயல்பட்டு வந்தார் கார்த்திக். அவர் போன இடமெல்லாம் ஆயிரக்கணக்கில் திரண்ட கூட்டத்தைப் பார்த்து பலரும் மிரண்டனர். இதனைத் தொடர்ந்து 2006 ஆம் ஆண்டு முதன் முதலில் தனது அரசியல் பயணத்தை தொடங்கினார். அப்போது அவர் அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சியின் மாநில செயலராக செயல்பட்டவர், பின்னர் லோக்சபா தேர்தலுக்கு முன்பு 2018 ஆம் ஆண்டு நாடாளும் மக்கள் கட்சி என்ற கட்சியைத் தொடங்கினார். 


அதன் பின்னர் அதை விட்டு விட்டு நமது மனித உரிமை காக்கும் என்ற புதிய கட்சியை தொடங்கினார். 2011 ஆம் ஆண்டு அதிமுகவுடன் கூட்டணி அமைக்க கார்த்தி முயற்சித்த போது அந்த முயற்சியை தோல்வியடைந்தது. இதனைத் தொடர்ந்து அதிமுகவில் இருந்து  விலகியதாகவும், தான் சுயேச்சையாக போட்டியிடுவதாகவும் அறிவித்தார். அதன் பின்னர் கார்த்திக் தீவிர அரசியலில் இல்லை. இடையில் சில படங்களில் நடித்தார். அதன் பின்னர் அவரை அதிகம் வெளியில் பார்க்க முடியவில்லை. இந்த நிலையில் தற்போது மீண்டும் பிரச்சாரக் களத்திற்கு வருகிறார் கார்த்திக்.


லோக்சபா தேர்தலில் அதிமுக சார்பிலும்,  கூட்டணி கட்சிகளின் சார்பிலும், போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து கார்த்திக் பிரச்சாரத்தில் ஈடுபட்டு, வாக்கு சேகரிக்க உள்ளார். இதன்படி வரும் ஏப்ரல் 9ஆம் தேதி மதுரை, 10ஆம் தேதி திண்டுக்கல், 11ஆம் தேதி தேனி, 13ஆம் தேதி சிவகங்கை, 14ஆம் தேதி திருநெல்வேலி, 15ஆம் தேதி விருதுநகர், 16ஆம் தேதி திருச்சிராப்பள்ளி, 17ஆம் தேதி கோயம்புத்தூர், ஆகிய இடங்களில் தீவிர பிரச்சாரம் மேற்கொள்ள இருக்கிறார். 


மீண்டும் கார்த்திக் வெளியில் வருவதால் அவரது ரசிகர்களும், தொண்டர்களும் உற்சாகமடைந்துள்ளனர்.

சமீபத்திய செய்திகள்

news

Today gold rate: வரலாறு காணாத தொடர் உயர்வில் தங்கம் விலை... அதிர்ச்சியில் வாடிக்கையாளர்கள்!

news

வக்பு சட்டத்தை கண்டித்து.. கடை அடைப்பு போராட்டம் நெல்லையில் பரபரப்பு..!

news

கோடை விடுமுறையை மாணவர்கள் பயனுள்ள வகையில் கழிக்க வேண்டும்.. அமைச்சர் அன்பில் மகேஷ்..!

news

அது மட்டும் பண்ணாதீங்க...அமைச்சர்களுக்கு முதல்வர் கொடுத்த அட்வைஸ்

news

குடியரசுத் தலைவருக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட முடியுமா..? குடியரசு துணைத் தலைவர் ஜக்தீப் கேள்வி..!

news

good friday 2025 : புனித வெள்ளிக்கு ஏன் இந்த பெயர் வந்தது தெரியுமா?

news

என்னென்ன காயெல்லாமோ சாப்பிட்டிருப்பீங்க.. தோசைக்காய பப்பு டேஸ்ட் பண்ணிருக்கீங்களா..!

news

12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் ஏப்ரல் 18, 2025...யாருக்கு என்ன பலன் காத்திருக்கு?

news

ஹஜ் ஒதுக்கீடு ரத்து...பிரதமர் தலையிட முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்

அதிகம் பார்க்கும் செய்திகள்