தாண்டவமாடும் புயல்.. மினி வங்கக் கடலானது சென்னை..  இன்று மாலை வரை..  கன மழை தொடரும்!

Dec 04, 2023,10:37 AM IST
- மஞ்சுளா தேவி

சென்னை: மிச்சாங் புயல் சென்னைக்கு அருகே வந்திருப்பதால், காற்றின் வேகம் சற்று அதிகமாக இருக்கும் காரணத்தால், இன்று மாலை வரை மிக கன மழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

தமிழ்நாட்டில் 23 மாவட்டங்களில் அடுத்த மூன்று மணி நேரத்தில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும் வானிலை மையம் அறிவித்துள்ளது.

வங்கக் கடலில் ஏற்பட்ட புயலின் காரணமாக சென்னை மற்றும் வடகடலோர மாவட்டங்களில் கன மழை கொட்டி தீர்த்து வருகிறது. குறிப்பாக சென்னையில் நேற்று இரவு முதல் தற்போது வரை மழை தொடர்ந்து நீடித்து வருகிறது. இதனால் சாலைகளில் மழைநீர்  பெருக்கெடுத்து ஓடுவதால் ஊரே மினி வங்கக் கடல் போல்  காட்சியளிக்கிறது. 

மிச்சாங் புயல் சென்னைக்கு 150 கிலோமீட்டர் தொலைவில் கிழக்குத் தென்கிழக்கில் மையம் கொண்டுள்ளது. இது நெல்லூர் -மசூலிப்பட்டினம் இடையே நாளை கரையைக் கடப்பதாலும், காற்றின் வேகம்  சற்று அதிகமாக இருப்பதாலும் சென்னையில் இன்று மாலை  வரை மழை  நீடிக்கும். ஆந்திராவின் நெல்லூர் பகுதிகளில் தற்போது பலத்த காற்றுடன் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. புயல் கரையைக் கடக்கும் போது கடுமையான வானிலை நிலவும் என்பதால் 5 துறைமுகங்களில் 5 ஆம் எண் புயல் கூண்டு  ஏற்றப்பட்டுள்ளது.



சென்னை ,திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ஆகிய மாவட்டங்களில் இன்று இடியுடன் கன மழையும், திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, விழுப்புரம், மயிலாடுதுறை, தஞ்சை, அரியலூர் ,பெரம்பலூர், கள்ளக்குறிச்சி, வேலூர், திருப்பத்தூர், தர்மபுரி,கிருஷ்ணகிரி, சேலம், நாமக்கல், திருச்சி ,தஞ்சை, திருவாரூர், ஆகிய 23 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழையை எதிர்பார்க்கலாம்.

டபுள் செஞ்சுரியைத் தாண்டி மழை ஆட்டம்

சென்னையில் அதிகபட்சமாக பெருங்குடியில் 29 சென்டிமீட்டர் (290 மில்லி மீட்டர்) மழை பதிவாகியுள்ளது.  மீனம்பாக்கம் மற்றும் ஆலந்தூரில் தலா 25 சென்டிமீட்டர் மழையும், மாமல்லபுரத்தில் 20 செமீ மழையும் பதிவாகியுள்ளது.

வளசரவாக்கத்தில் 19 செமீ மழையும், அண்ணா நகரில் 18.3 செமீ மழையும், கோடம்பாக்கம்  18 .2 செமீ,மழையும் அடையாறு மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் 17.4 செமீ மழையும் மற்றும் நுங்கம்பாக்கத்தில் 15 செமீ மழையும் பதிவாகியுள்ளது.

2015ம் ஆண்டில்தான் இப்படி மழை பேயாட்டம் போட்டது. அதன் பிறகு இப்போதுதான் வெளுத்து வாங்கி வருகிறது. ஒரே நாளில் பல இடங்களில் 200 மில்லி மீட்டர் அளவுக்கு மழை கொட்டித் தீர்த்துள்ளதால் சென்னை நகரமே மிதக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகள்

news

Orange alert: தமிழ்நாட்டில் ஒரிரு இடங்களில் 26 மற்றும் 27 தேதிகளில் மிக கன மழை எச்சரிக்கை!

news

ஜாமின் கிடைத்ததைத் தொடர்ந்து.. புழல் சிறையிலிருந்து வெளியே வந்தார் நடிகை கஸ்தூரி

news

அமெரிக்கா கோர்ட் பிடிவாரண்ட்.. அதானியை உடனடியாக கைது செய்ய வேண்டும்.. ராகுல்காந்தி ஆவேசம்

news

விஜய் பங்கேற்கும்.. அம்பேத்கர் புத்தக வெளியீட்டு விழாவில் கலந்து கொள்ள மாட்டார் திருமாவளவன்!

news

தனுஷ் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் விவாகரத்து வழக்கில் இறுதிக் கட்டம்.. 27ம் தேதி தீர்ப்பு வழங்கப்படுகிறது!

news

கடுப்பா இருக்கா பாஸ்.. வாங்க கடிக்கிறோம்.. கலகலன்னு சிரிங்க.. மைன்ட் free ஆகி.. face பிரெஷ்ஷாய்ரும்!

news

ஆசிரியை ரமணியின் குடும்பத்திற்கு ரூ. 5 லட்சம் உதவி.. தாயாரிடம் வழங்கினார் அமைச்சர் கோவி.செழியன்

news

Chennai Lakes.. நீர் இருப்பில் மாற்றம் இல்லை.. புதிய காற்றழுத்தத் தாழ்வுக்காக ஏரிகள் வெயிட்டிங்!

news

Rain forecast: 5 மாவட்டங்களில் இன்று மிக கன மழைக்கு வாய்ப்பு.. 7 மாவட்டங்களில் கன மழை!

அதிகம் பார்க்கும் செய்திகள்