Delhi Ganesh.. 400க்கும் மேற்பட்ட படங்கள்.. ஹீரோ டு காமெடியன்.. மறக்க முடியாத டெல்லி கணேஷ்

Nov 10, 2024,04:47 PM IST

சென்னை: பழம்பெரும் நடிகர் டெல்லி கணேஷ் காலமானார். 80 வயதான டெல்லி கணேஷ் 400க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.


சில நாட்களாக உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த டெல்லி கணேஷ், நேற்று நள்ளிரவில் மரணமடைந்தார். அவரது இறுதிச்சடங்குகள் இன்று நடைபெறவுள்ளன.


டெல்லியில் பணியாற்றிய ஆரம்ப காலத்தில்  நிறைய நாடகங்களில் நடித்துக் கொண்டிருந்தார் டெல்லி கணேஷ். கே. பாலச்சந்தர் இயக்கிய பட்டினப்பிரவேசம் படத்தில்தான் அவர் நடிகராக அறிமுகமானார். ஹீரோவாக, பின்னர் வில்லனாக, பிறகு காமெடியனாக, இறுதிக்காலத்தில் குணச்சித்திர வேடம் என அனைத்து விதமான கதாபாத்திரங்களிலும் நடித்தவர் டெல்லி கணேஷ்.




தமிழ், தெலுங்கு, மலையாளம் என்று பல்வேறு மொழிகளில் 400க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள டெல்லி கணேஷ், கமல்ஹாசனுடன் அதிக படங்களில் நடித்தவர். கமல்ஹாசனும் இவரும் இணைந்து நடித்த புன்னகை மன்னன், அபூர்வ சகோதரர்கள், நாயகன், தெனாலி, மைக்கேல் மதன காமராஜன், பாபநாசம் என அனைத்துப் படங்களுமே மறக்க முடியாதவை. கமல்ஹாசனுக்கும் இவருக்குமான நடிப்பு கெமிஸ்ட்ரி மட்டுமல்ல, நட்பும் கூட மிகச்சிறப்பானது. இந்தியன் 2 வரை இவர்களது திரை நட்பும் தொடர்ந்தது.


சிந்து பைரவியில் எல்லோருடைய நடிப்பையும் தூக்கி சாப்பிடும் வகையிலான கேரக்டரை டெல்லி கணேஷுக்குக் கொடுத்திருப்பார் கே.பாலச்சந்தர். அப்படத்தில் இவருடைய நடிப்பு மட்டும் தனியாக தெரியும். பிரமாதமான வேடத்தில் வாழ்ந்திருப்பார் டெல்லி கணேஷ்.


அவ்வை சண்முகியில் இவரது வேடம் குறித்து சொல்லவே தேவையில்லை. கமல் என்ற ஜாம்பவான் ஒரு பக்கம், ஜெமினி கணேசன் என்ற இமயலை மறுபக்கம்.. நடுவில் இவர்  தனி ஆவர்த்தனமே செய்திருப்பார். அட்டகாசமான கேரக்டரில் அவ்வை சண்முகியில் இவரது பங்கும் அட்டகாசமாக அமைந்திருக்கும்.


இளம் தலைமுறை நடிகர்களுடனும் இணைந்து நடித்தவர் டெல்லி கணேஷ். விஜய்யுடன் இவர் நடித்த தமிழன் படத்தில் இவரது கதாபாத்திரம் வெகுவாக பேசப்பட்டது. அதேபோல கேடி பில்லா கில்லாடி ரங்கா படத்தில் விமலின் தந்தை வேடத்தில் அசத்தியிருப்பார் டெல்லி கணேஷ். கடைசி வரை நடித்துக் கொண்டிருந்தவர் டெல்லி கணேஷ் என்பது குறிப்பிடத்தக்கது.


கலைமாமணி உள்ளிட்ட பல்வேறு விருதுகளைப் பெற்றவரான டெல்லி கணேஷ், 1974ம் ஆண்டு பசி படத்திற்காக சிறந்த நடிகருக்கான மாநில அரசின் விருதைப் பெற்றவர் ஆவார். 



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

கோடை விடுமுறையை மாணவர்கள் பயனுள்ள வகையில் கழிக்க வேண்டும்.. அமைச்சர் அன்பில் மகேஷ்..!

news

அது மட்டும் பண்ணாதீங்க...அமைச்சர்களுக்கு முதல்வர் கொடுத்த அட்வைஸ்

news

குடியரசுத் தலைவருக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட முடியுமா..? குடியரசு துணைத் தலைவர் ஜக்தீப் கேள்வி..!

news

good friday 2025 : புனித வெள்ளிக்கு ஏன் இந்த பெயர் வந்தது தெரியுமா?

news

என்னென்ன காயெல்லாமோ சாப்பிட்டிருப்பீங்க.. தோசைக்காய பப்பு டேஸ்ட் பண்ணிருக்கீங்களா..!

news

12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் ஏப்ரல் 18, 2025...யாருக்கு என்ன பலன் காத்திருக்கு?

news

ஹஜ் ஒதுக்கீடு ரத்து...பிரதமர் தலையிட முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்

news

வக்பு வாரிய சட்டத் திருத்தத்திற்கு.. இடைக்கால தடை.. உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு!

news

மதுரை சித்திரை திருவிழா... அன்னதானம் வழங்க விதிமுறைகள் அறிவிப்பு!

அதிகம் பார்க்கும் செய்திகள்