தெறிக்கும்.. அனல் பறக்கும்.. "விஜய் 68".. கோலாகல ஆரம்பம்..!

Oct 03, 2023,11:16 AM IST

சென்னை: இளைய தளபதி விஜய் நடிக்கும் விஜய் 68 புதுப்பட பூஜை பிரசாத் ஸ்டூடியோவில் போடப்பட்டுள்ள நிலையில் படம் தொடர்பான அத்தனை பேரும் சந்தோஷமாக போட்டு வரும் ஸ்டேட்டஸ்கள் ரசிகர்களை குஷியில் மூழ்கடித்துள்ளது.


இயக்குநர் வெங்க்பிரபு, சினேகா, லைலா, பிரசாந்த், பிரபுதேவா என பெரும் பெரும் தலைகள் படத்தில் இருக்கும் நிலையில் நாயகி  மீனாட்சி சௌத்ரிதான் செம ஹேப்பி மோடில் இருக்கிறார். 


வெங்கட் பிரபு இயக்கத்தில் காமெடி கலந்த கதையாக விஜய் 68 படம் உருவாக உள்ளது. இப்படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்க யுவன் சங்கர் ராஜா இசை அமைக்கிறார். ஏற்கனவே விஜய் ஆண்டனியின் கொலை படத்தில் நடித்த மீனாட்சி சவுத்ரி தற்போது விஜய் 68 படத்தில் நாயகியாக நடிக்க இருக்கிறார். 




இப்படம் குடும்பப் பின்னணி கொண்ட கதையாகவும், இதில் நடிகர் விஜய் அப்பா மகன் என இரட்டை வேடங்களில் நடிப்பதாகவும் தகவல்கள் கசிந்து வருகின்றன. அப்பா கதாபாத்திரத்தில் நடிக்கும் விஜய்க்கு சினேகா ஜோடியாகவும் மகன் கதாபாத்திரத்தில் நடிக்கும் விஜய்க்கு மீனாட்சி சவுத்ரி ஜோடியாகவும் நடிக்க இருப்பதாக கூறுகின்றனர். விஜய்யும், சினேகாவும் ஏற்கனவே வசீகரா படத்தில் ஜோடியாக நடித்துள்ளனர். 


தளபதி விஜய் நடித்த லியோ படம் வருகிற அக்டோபர் 19ஆம் தேதி வெளிவர உள்ளது. ஏற்கனவே இப்படத்தில் இரண்டு பாடல்கள் பாடல்கள் வெளியிடப்பட்டு மாபெரும் வெற்றி பெற்ற நிலையில் தற்போது இப்படத்தின் ட்ரெய்லர் அக்டோபர் ஐந்தாம் தேதி வெளியிடப்பட உள்ளது. இதற்காக விஜய் ரசிகர்கள் லியோ படத்தின் வெற்றியை கொண்டாட  எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.


இந்த நிலையில்தான் மிகவும் சிம்பிளாக விஜய் 68 படத்தின் பூஜை போடப்பட்டுள்ளது. இப்படத்தில் இடம் பெறும் ஒரு பாடல் நாளை  AI ஸ்டூடியோவில் பிரம்மாண்டமான செட்டில்  படமாக்க இருக்கிறது. இதற்காக மிகப்பெரிய அளவில் பிரபல தொழில்நுட்ப வல்லுனர்கள் பயன்படுத்த போவதாக தகவல் வெளியாகி உள்ளது. இயக்குனர் வெங்கட் பிரபு Game began தளபதி 68 என்ற லோகோவை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு உள்ளார். இந்த செய்தி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி பரபரப்பாகி வருகிறது. விஜய் ரசிகர்கள் இந்த மகிழ்ச்சியான செய்தியை கொண்டாடி வருகின்றனர்.

சமீபத்திய செய்திகள்

news

தமிழ்நாட்டு மண்ணில் பிரதமர் மோடி உறுதி தர வேண்டும்.. ஊட்டியிலிருந்து முதல்வர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை

news

நவீன பாம்பன் கடல் பாலம்.. நாட்டுக்கு அர்ப்பணித்தார் பிரதமர் மோடி.. புதிய ரயிலுக்கும் பச்சைக் கொடி!

news

அமைச்சர் நிர்மலா சீதாராமனை நான் சந்திச்சேனா.. நாம் தமிழர் தலைவர் சீமான் திட்டவட்ட மறுப்பு!

news

Tamil Nadu rains.. இன்னும் 10 நாட்களுக்கு மழைதான்.. தமிழ்நாடு வெதர்மேன் ஹேப்பி நியூஸ்!

news

அதிபர் டிரம்ப்புக்கு எதிராக அமெரிக்காவில் வெடித்தது பெரும் போராட்டம்.. வீதிகளில் இறங்கிய மக்கள்!

news

12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் ஏப்ரல் 06, 2025...யாருக்கு என்ன பலன் காத்திருக்கு?

news

Chennai Super Kings no more a champion team?.. தொடர் சொதப்பல் + தோல்விகளால்.. ரசிகர்கள் அதிர்ச்சி!

news

மீண்டும் ஒரு மோசமான தோல்வியை சந்தித்த சென்னை சூப்பர் கிங்ஸ்.. ரசிகர்கள் கடும் அதிருப்தி!

news

தமிழ்நாட்டு மக்களின் கோரிக்கைகளை இலங்கை உறுதி செய்ய வேண்டும்: பிரதமர் மோடி இலங்கையில் பேச்சு!

அதிகம் பார்க்கும் செய்திகள்