வேங்கைவையல் வழக்கு.. வன்கொடுமை தடுப்பு கோர்ட்டிலிருந்து.. நீதித்துறை நடுவர் கோர்ட்டுக்கு மாற்றம்!

Feb 03, 2025,01:21 PM IST

புதுக்கோட்டை: வேங்கைவயல் குடிநீர்த் தொட்டியில் மனிதக் கழிவைக் கலந்தது தொடர்பான வழக்கு விசாரணை புதுக்கோட்டை வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் இருந்து நீதித்துறை நடுவர் நீதிமன்றத்திற்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


புதுக்கோட்டை மாவட்டம் அன்னவயல் ஒன்றியத்தில் உள்ள வேங்கைவயல் கிராமத்தில் கடந்த 2022 ஆம் ஆண்டு டிசம்பர் 26 ஆம் தேதி மேல்நிலை குடிநீர் தேக்க தொட்டியில் மனித மலம் கலக்கப்பட்ட சம்பவம் தமிழ்நாடு முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதனை கண்டித்து பல்வேறு அரசியல் கட்சிகளும் போராட்டம் நடத்தினர்.




இதனைத் தொடர்ந்து இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொள்ள காவல் துறை சிறப்பு புலனாய்வு குழுவை அமைத்தது.  2023 ஆம் ஆண்டு இவ்வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. விசாரணை தொடர்ந்து வந்த நிலையில், இந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. இச்சம்பவம் முடிந்து இரண்டு ஆண்டுகள் நிறைவடைந்த நிலையிலும் தொடர்ந்து குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்யப்படாமல் இருந்தது. மேலும் இந்த வழக்கில் குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்ய கால அவகாசம் கோரப்பட்டிருந்த நிலையில் கடந்த 20ஆம் தேதி குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.


அதில் வேங்கைவயல்  கிராமத்தைச் சேர்ந்த ஆயுதப்படை காவலர் முரளி ராஜா, சுதர்சன் மற்றும் முத்துகிருஷ்ணன் ஆகியோர் தான் குற்றமிழைத்தவர்கள் என்று கூறப்பட்டிருந்தது. இந்த மூன்று பேரும் பட்டியல் இனத்தவர்கள். தனிப்பட்ட பிரச்சினை காரணமாக இவர்கள் இந்த செயலில் ஈடுபட்டதாகவும், குற்றப்பத்திரிகையில் கூறப்பட்டிருந்தது. 


இதற்கிடையே இந்த குற்றப்பத்திரிகையில் பல்வேறு முரண்பாடுகள் இருப்பதால் இதனை ஏற்க கூடாது என விடுதலை சிறுத்தைகள் கட்சி கோரிக்கை விடுத்தது.  பாதிக்கப்பட்ட சமூகத்தின் மீதே குற்றம் சாட்டுவது அதிர்ச்சி தருவதாகவும் விசிக தலைவர் திருமாவளவன் கூறியிருந்தார். ஆனால் முழுமையான விசாரணைக்குப் பிறகே, உரிய ஆதாரங்களோடுதான் குற்றம் சாட்டப்பட்டவர்கள் குறித்த முடிவுக்கு காவல்துறை வந்திருப்பதாக தமிழ்நாடு அரசு விளக்கம் அளித்தது.


இதையடுத்து  வழக்கு விசாரணையை புதுக்கோட்டை வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்றத்திலிருந்து நீதித்துறை நடுவர் நீதிமன்றத்திற்கு மாற்றவும் தமிழ்நாடு அரசு கோரிக்கை வைத்திருந்தது. இந்தப் பின்னணியில் இன்று இந்த வழக்கு நீதித்துறை நடுவர் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டுள்ளது.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத் தேர்தல், டெல்லி சட்டசபைத் தேர்தலுக்கான.. பிரச்சாரம் முடிவுக்கு வந்தது!

news

விடாமல் தொல்லை கொடுத்த நபர்.. உறவின்போது வாயைப் பொத்தி.. கழுத்தை நெரித்துக் காலி செய்த பெண்!

news

சிம்புவின் புதிய அவதாரம்.. 50வது படத்தில் தயாரிப்பாளராக புது வடிவம்.. இயக்கம் தேசிங்கு பெரியசாமி

news

வேங்கைவையல் வழக்கு.. வன்கொடுமை தடுப்பு கோர்ட்டிலிருந்து.. நீதித்துறை நடுவர் கோர்ட்டுக்கு மாற்றம்!

news

கமலிடம் சினிமா பற்றியும், ரஜினியிடம் அரசியலையும் பேசுகிறீர்கள்.. என்ன டிசைன் இது? - வினோதினி கேள்வி!

news

திருப்பரங்குன்றம் மலை விவகாரத்தால் பதட்டம்.. மதுரை முழுவதும்.. இன்றும், நாளையும் 144 தடை உத்தரவு!

news

தினம் ஒரு கவிதை.. இனி ஒரு விதி செய்வோம்!

news

Ratha Saptami 2025: ரதசப்தமி.. சூரிய மந்திரம் சொல்லி.. நீண்ட ஆயுளும், நலமும், வளமும் பெறுவோம்!

news

அண்ணாவின் 56வது நினைவு தினம்.. முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னையில் அமைதிப் பேரணி

அதிகம் பார்க்கும் செய்திகள்