சென்னை: தடை செய்யப்பட்ட போதைப் பொருளை பயன்படுத்தியதாக கூறி முன்னணி திரை நட்சத்திரங்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி தமிழர் முன்னேற்றப்படை தலைவர் வீரலட்சுமி தமிழக அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் கூறுகையில், தற்போதைய காலத்தில் போதை பொருட்களின் பயன்பாடு அதிகரித்துள்ளது. குறிப்பாக பள்ளி, கல்லூரிகளில் பயிலும் மாணவர்கள் இந்த போதை பொருட்களின் பயன்பாட்டிற்கு அடிமையாகி வருகின்றனர். சாதாரண மக்கள் போதை பொருட்கள் பயன்படுத்தினால். நடவடிக்கை எடுக்கும் போலீசார், திரைப்பிரபலங்கள் மீது ஏன் நடவடிக்கை எடுப்பதில்லை. திரைப்பிரலங்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழர் முன்னேற்றப்படை தலைவர் வீரலட்சுமி, மது விலக்கு மற்றும் ஆயர்தீர்வை துறையில் புகார் அளித்து நடவடிக்க எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.
வீரலட்சுமி கொடுத்துள்ள புகாரில் கூறியிருப்பதாவது:
கடந்த சில ஆண்டுகளாக தமிழ்நாட்டில் சமூகத்தை சீரழிக்கின்ற வகையில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களிடையே தடை செய்யப்பட்ட மிகக் கொடிய போதைப் பொருள் புழக்கத்தில் இருந்து வந்துள்ளது. இதனால் மாணவர்களின் உடல் நலன் பாதிக்கப்படுவதுடன், கல்வியும் நாசமாகிறது. இளைய சமூகத்தினரின் எதிர்காலம் கேள்விக்குறியாக உள்ளது.
இந்த போதை பொருள் குறித்து அதனால் ஏற்படும் விளைவுகள் குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் இடத்தில் இருக்கக்கூடிய சினிமாத்துறையில், துளியும் இந்த மக்கள் மீதும், சமூகத்தின் மீதும், மாணவர்கள் மீதும் அக்கறை இல்லாமல் தங்கள் பொறுப்பை உணராமல், தங்களின் சுப போக வாழ்க்கையில் மட்டும் கவனம் செலுத்தி வருகின்றன.
பிரபல நடிகர்களான விஜய், தனுஷ், விஜய் யேசுதாஸ், த்ரிஷா, ஆண்ட்ரியா மற்றும் பாடல் சுசித்ராவின் முன்னாள் கணவர் கார்த்திக். உள்ளிட்டோர் விருந்து நிகழ்ச்சிகளின் போது தடை செய்யப்பட்ட கொடிய போதை பொருட்கள் பயன்படுத்தி வருவதாக பாடகி சுசித்ரா பல்வேறு யூடியூப் சேனலுக்கு பேட்டி கொடுத்துள்ளார். சாதாரண மக்கள் போதை பொருட்கள் பயன்படுத்தினால் நடவடிக்கை எடுக்கும் போலீசார் ,பிரபல நடிகர் நடிகைகள் போதை பொருள் பயன்படுத்தி வந்தால் நடவடிக்கை எடுக்காமல் இருக்கின்றனர்.
குற்றம் சாட்டப்பட்ட அனைத்து நடிகர் நடிகைகளையும் போதைப் பொருளுக்கு அடிமையாகி இருக்கிறார்களா என்று பரிசோதனை செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.
நீட் விவகாரத்தில் ஏப்ரல் 9ல்.. சட்டமன்ற அனைத்து கட்சி ஆலோசனை கூட்டம்.. முதல்வர் மு.க ஸ்டாலின்
தமிழ்நாட்டில் இன்றும் .. 17 மாவட்டங்களில்.. கன மழைக்கு வாய்ப்பு.. சென்னை வானிலை ஆய்வு மையம்!
பாஜக தலைவர் மாற்றம் உறுதி... அண்ணாமலையே சூசகமாக தகவல்!
நெருப்புடா.. நெருங்குடா.. இன்று முதல் விஜய்க்கு ஒய் பிரிவு பாதுகாப்பு அமல்..!
நாளும் நல்லதுசெய்யும் முதலமைச்சர் இந்த இரண்டு செயல்களாலும் இன்னும் இன்னும் உயர்கிறார்: வைரமுத்து
வந்தோம் போனோம் என்று இருக்க மாட்டோம்.. இஸ்லாமியர்களுக்கு உறுதுணையாக இருப்போம் - தவெக
எஸ்ஐ பணியில் சேர ஆசையா?.. தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் வெளியிட்ட சூப்பர் அப்டேட்!
உங்கள் வாழ்வில் இருந்து ஒருவரை நீக்கும்போது.. அதன் மதிப்பை உடனடியாக அறிய மாட்டீர்கள்.. செல்வராகவன்!
கூலி படத்தின் முக்கிய அப்டேட் இன்று வெளியீடு.. வெறி வெயிட்டிங்கில் ரசிகர்கள்!!
{{comments.comment}}