சென்னை: ஓடிடி உரிமம் தொடர்பான வழக்கில் நடிகர் விக்ரமின் வீர தீர சூரன் திரைப்படம் வெளியிட, டெல்லி உயர் நீதிமன்றம் இடைக்கால தடை விதிக்கப்பட்ட நிலையில், அனைத்து பிரச்சனைகளும் முடிக்கப்பட்டு இன்று மாலைக்குள் படம் வெளியாகலாம் என தகவல் வெளியாகி உள்ளது.
சித்தா படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இயக்குனர் அருண் குமார் இயக்கத்தில் நடிகர் விக்ரம் நடித்துள்ள திரைப்படம் தான் வீர தீர சூரன் திரைப்படம். இவருடன் துஷாரா விஜயன், எஸ்.ஜே.சூர்யா, மலையாள நடிகர் சுராஜ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர் . இப்படத்தின் ட்ரெய்லர் சமீபத்தில் வெளியாகி படத்தின் டிரைலரே ரசிகர்கள் அனைவரையும் மிரள வைத்தது. இதனால், இப்படத்தின் வெளியீட்டிற்காக ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருந்தனர்.
ஏனெனில் ஏற்கனவே இப்படம் ஜனவரியில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் அஜித்தின் விடாமுயற்சி படத்தால் ரிலீஸ் தேதி தள்ளிப்போனது. இந்த நிலையில், தமிழ் சினிமா வரலாற்றில் எப்போதுமே முதல் பாகம் வெளியீடு செய்வது வழக்கம். ஆனால் கொஞ்சம் வித்தியாசமாக வீர தீர சூரன் திரைப்படத்தின் 2 ஆம் பாகம் இன்று காலை வெளியாக இருந்தது.
ஆனால் அறிவித்தபடி இப்படம் வெளியாகவில்லை. இதனால் ரசிகர்கள் மிகுந்த ஏமாற்றம் அடைந்தனர். அதாவது படத்தின் ஓடிடி உரிமம் விற்கப்படும் முன்னதாகவே ரிலீஸ் தேதியை அறிவித்தால், தயாரிப்பு நிறுவனத்தின் மீது பி4யு முதலீட்டு நிறுவனம் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் படத்தை வெளியிட மேலும் 4 வாரங்கள் இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டது.
மேலும் படத்தை தயாரித்த ஹெச். ஆர் பிக்சர்ஸ் நிறுவன உரிமையாளர் ரியாஷிபு, 48 மணி நேரத்தில் அனைத்து ஆவணங்களையும் தாக்கல் செய்ய வேண்டும். பி4யு நிறுவனத்திற்கு 7 கோடி டெபாசிட் செய்ய வேண்டுமெனவும் டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது.
இந்த நிலையில் வீர தீர சூரன் பார்ட் 2 திரைப்படம் மேலும் 4 வாரங்கள் தள்ளிப் போகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், படத்தின் தயாரிப்பு நிறுவனம் பி4யு நிறுவனத்திற்கு 7 கோடி வழங்க முடிவு செய்துள்ளது. இதனால், இப்படத்தின் மீதான அனைத்து சிக்கல்களும் தீர்க்கப்பட்டு விட்டதால் இன்று மாலைக்குள் படம் வெளியாகலாம் என தகவல் வெளியாகி உள்ளது.
வக்பு வாரிய சட்ட மசோதா நாளை தாக்கல்.. எதிர்த்து வாக்களிக்க இந்தியா கூட்டணி எம்.பிக்கள் முடிவு
தமிழ்நாட்டில் வெப்பநிலை படிப்படியாக ..2 முதல் 4 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்..!
வழக்கத்தைவிட.. ஏப்ரல், ஜூனில் வெப்பம் அதிகரிக்கும்.. இந்திய வானிலை மையம் எச்சரிக்கை..!
Emburan Movie: பெரியாறு அணை குறித்து அவதூறு கருத்துகளை நீக்குக.. பண்ருட்டி வேல்முருகன்..!
Madurai Chithirai Thiruvizha 2025: மீனாட்சி அம்மன் கோவிலில்..ஏப்ரல் 29ல் கொடியேற்றத்துடன் தொடக்கம்..
அருவறுப்பான ஆண்களே அழிஞ்சு நாசமா போங்க.. பாடகி சின்மயி ஆவேசம்!
கும்பகோணம் வெற்றிலைக்கும் தோவாளை மாணிக்க மாலைக்கும் புவிசார் குறியீடு!
டி.என்.பி.எஸ்.சி குரூப்-1 தேர்வு.. ஏப்ரல் 30 வரை விண்ணப்பிக்கலாம்.. வெளியானது அரசு உத்தரவு..!
தமிழகத்தில் ஆட்சி அமைப்போம்.. அமித்ஷா கூறியது நகைச்சுவை:விசிக தலைவர் திருமாவளவன்!
{{comments.comment}}