சென்னை: ஜி எஸ் டி வரி விதிப்பு முறை முற்றிலும் ரத்து செய்யப்படும்.. உழைப்பவர்களுக்கு உழைப்பு நேர அடையாள அட்டை வழங்கப்படும்.. அகில இந்திய அளவில் விவசாயத்திற்கு தனி பட்ஜெட் என்பது உள்பட பல்வேறு உறுதிமொழிகளுடன் கூடிய விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
திமுக கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சிதம்பரம் மற்றும் விழுப்புரம் தொகுதியில் பானை சின்னத்தில் போட்டியிட்டுகிறது. தீவிரப் பிரச்சாரத்தில் அக்கட்சி ஈடுபட்டுள்ளது. இந்த நிலையில் இன்று தனது தேர்தல் அறிக்கையை விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வெளியிட்டது.
இதுகுறித்து திருமாவளவன் கூறுகையில், ,அனைத்து மக்களின் நலன் கருதி பல்வேறு தரப்பினரிடையே கருத்துக்களை கேட்டறிந்து பின்னர் விசிக தேர்தல்ல அறிக்கையை தயாரிக்கப்பட்டுள்ளது. எனது ஒற்றை சபதம் பாசிச பாஜக அரசை வீழ்த்துவோம் என்பதுதான். அடுத்த தேர்தலில் பாஜக தொடரக்கூடாது.இந்த அரசை வீழ்த்த வேண்டும் என்பதுதான் எனது ஒரே இலக்கு. அதன் அடிப்படையில் தான் எனது தேர்தல் அறிக்கை வரையறுக்கப்பட்டுள்ளதாக கூறினார்.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தேர்தல் அறிக்கையில் இடம் பெற்றுள்ள முக்கிய அம்சங்கள்:
-மனிதன் எத்தனை மணி நேரம் உழைக்க வேண்டும் என்பதன் அடிப்படையில் உழைப்பு நேர அடையாள அட்டை வழங்கப்பட வேண்டும்.
-வாரத்திற்கு 56 மணி நேரம் உழைப்பிற்கான ஊதியத்தை ஒருவர் பெற்றிருப்பதை அரசு உறுதி செய்ய வேண்டும்.
-வறுமைக் கோட்டின் உச்சவரம்பை உயர்த்த வேண்டும்.
-100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தை, 200 நாட்களாக மாற்ற குரல் கொடுப்போம்.அதை நகர்ப்புறங்களுக்கும் விரிவு படுத்துவோம்.
-ஜி எஸ் டி வரிவிதிப்பு முறையை முற்றிலும் ரத்து செய்ய குரல் கொடுப்போம்.
-அகில இந்திய விவசாய தனி பட்ஜெட் வழங்குவோம்.
-பொதுமக்கள் பங்கேற்கும் வகையில் அதற்கான கண்காணிப்பு குழுவும் உருவாக்க வேண்டும்.
-வகுப்புவாத பிரிவினையை தூண்டும் சட்ட திருத்தங்களை நீக்க விசிக நாடாளுமன்றத்தில் வலியுறுத்தும்.
-சி சி ஏ மற்றும் என் ஆர் சி சட்ட திருத்தங்கள் முற்றிலும் நீக்க வேண்டும்.
-ஆளுநர் பதவி ஒழிக்கப்பட விடுதலை சிறுத்தைகள் கட்சி தொடர்ந்து ஒன்றிய அரசை வலியுறுத்தும்.
-புதுச்சேரிக்கு முழு மாநில தகுதியைப் பெற்றுத் தர விசிக நாடாளுமன்றத்தில் குரல் கொடுக்கும்.
-மத்திய அரசின் வருவாயில் 75% விழுக்காட்டை மாநிலங்களுக்கு பகிர்ந்தளிக்க அரசியலமைப்புச் சட்டத்தில் மாற்றம் வேண்டும்.
-அம்பேத்கரின் எழுத்துக்களும், பேச்சுக்களும், முழுமையாக தொகுக்கப்பட்ட 22 மாநில மொழியில் நூல்கள் வெளியிடப்படும்.
-மின்னணு வாக்குப்பதிவுக்கு முடிவு கட்டி வாக்குச்சீட்டு முறைக்கு மாற்ற நாடாளுமன்றத்தில் விசிக வலியுறுத்தும்.
-நீதிபதி தார்குண்டே குழு பரிந்துரைப்படி விகிதாச்சார பிரதிநிதித்துவ முறை வேண்டும்.
-கல்வி தொடர்பான திட்டங்கள் ஆங்கிலத்திலும் அந்தந்த மாநில மொழி பெயர்ப்பிலும் இருக்க வேண்டும்.
-ஒன்றிய அரசு பள்ளிகளில் சமஸ்கிருத வாரம் கொண்டாடப்படுகிறது.அதுபோல் தமிழ் செம்மொழி வாரம் கொண்டாடப்பட விசிக வலியுறுத்தும்.
Orange alert: தமிழ்நாட்டில் ஒரிரு இடங்களில் 26 மற்றும் 27 தேதிகளில் மிக கன மழை எச்சரிக்கை!
ஜாமின் கிடைத்ததைத் தொடர்ந்து.. புழல் சிறையிலிருந்து வெளியே வந்தார் நடிகை கஸ்தூரி
அமெரிக்கா கோர்ட் பிடிவாரண்ட்.. அதானியை உடனடியாக கைது செய்ய வேண்டும்.. ராகுல்காந்தி ஆவேசம்
விஜய் பங்கேற்கும்.. அம்பேத்கர் புத்தக வெளியீட்டு விழாவில் கலந்து கொள்ள மாட்டார் திருமாவளவன்!
தனுஷ் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் விவாகரத்து வழக்கில் இறுதிக் கட்டம்.. 27ம் தேதி தீர்ப்பு வழங்கப்படுகிறது!
கடுப்பா இருக்கா பாஸ்.. வாங்க கடிக்கிறோம்.. கலகலன்னு சிரிங்க.. மைன்ட் free ஆகி.. face பிரெஷ்ஷாய்ரும்!
ஆசிரியை ரமணியின் குடும்பத்திற்கு ரூ. 5 லட்சம் உதவி.. தாயாரிடம் வழங்கினார் அமைச்சர் கோவி.செழியன்
Chennai Lakes.. நீர் இருப்பில் மாற்றம் இல்லை.. புதிய காற்றழுத்தத் தாழ்வுக்காக ஏரிகள் வெயிட்டிங்!
Rain forecast: 5 மாவட்டங்களில் இன்று மிக கன மழைக்கு வாய்ப்பு.. 7 மாவட்டங்களில் கன மழை!
{{comments.comment}}