தவெகவுடன் மோதலும் இல்லை, திமுக எந்த அழுத்தமும் தரவில்லை.. திருமாவளவன்

Dec 09, 2024,05:45 PM IST

சென்னை: ஆதவ் அர்ஜூனா விவகாரத்தில் திமுக தரப்பில் இருந்து எந்த அழுத்தமும், நெருக்கடியும் எங்களுக்கு இல்லை.அதே போல் விசிகவுக்கும் தமிழக வெற்றிக் கழகத்திற்கும் இடையில் எந்த மோதலும் இல்லை என்று விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.


விடுதலை சிறுத்தைகள் கட்சி எம்பிகள் மற்றும் எம்எல்ஏக்கள் சார்பில் புயல் நிவராண தொகை ரூ.10 லட்சத்தை விசிக தலைவர் திருமாவளவன் இன்று முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து நேரில் வழங்கினார். அதன்பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், திமுக தரப்பில் இருந்து எனக்கு எந்த அழுத்தமும் தரப்படவில்லை. அதை பற்றி என்னிடம் எதுவும் பேசவில்லை. விஜய் பங்கேற்ற நிகழ்ச்சியில் நான் பங்கேறகவில்லை என்று எடுத்த முடிவு சுதந்திரமான முடிவு. விடுதலை சிறுத்தை கட்சிக்கும், தமிழக வெற்றிக்கழக கட்சிக்கும் எந்த மோதலும் இல்லை. 




விஜய் அவர்களோடு எங்களுக்கு சர்ச்சையோ, சிக்கலோ ஏற்பட்டது இல்லை. ஆனால், அவரோடு ஒரே மேடையில் பங்கேற்கும் போது எங்களுடைய கொள்கைப்பகைவர்கள், எங்கள் வளர்ச்சியை விரும்பாதவர்கள், எங்களை வீழ்த்த வேண்டும் என்று கருதக்கூடியவர் அதை ஒரு வாய்ப்பாக கருதி கதைகட்டுபவர்களுக்கும், திரித்து பேசுபவர்களுக்கும் அது ஒரு வாய்ப்பாக இருக்கும் என்று கருதி, முன் உணர்ந்து எங்கள் நலனைக் கருத்தில் கொண்டு நாங்கள் எடுத்த முடிவு இது.அவ்வளவு தான். அதை விகடன் பதிப்பகத்தாருக்கு  முதலிலேயே சுட்டி காண்பித்து விட்டோம். 


இதில் எங்களுக்கு எந்த வருத்தமும் இல்லை. அவரோடு நிற்பதை நாங்கள் வேறு எந்த கோணத்திலும் தவறாக அணுக வில்லை. அவரை வைத்து புத்தகத்தை வெளியிடலாம் என்றும் அறிவித்து விட்டோம். ஆனால், அதை தொடர்ந்து சர்ச்சையாக பேசு பொருளாக சிலர் திட்டமிட்டு மாற்றினார்கள். அதையடுத்து, நூல் வெளியீட்டு விழாவில்  ஆதவ் அர்ஜுனா பங்கேற்பதற்கு முன்பு என்னிடத்தில் பேசினார். அந்த நூலை உருவாக்கியதில் உங்களுக்கு பங்கு இருக்கிறது. ஆகவே அந்த விழாவை நீங்கள் தவிர்க்க வேண்டும் என்று நான் சொல்ல மாட்டேன். அப்படியே உங்களை கட்டுப்படுத்தினால் அது ஜனநாயகம் இல்லை. 


ஆகவே, நீங்கள் சுதந்திரமாக நூல் வெளியீட்டு விழாவில் பங்கேற்கலாம். இதில், எனக்கு எந்த நெருடலும் இல்லை என்பதை அவருக்கு நான் சொன்னேன். ஆனால், அதே வேலையில் அரசியல் எதுவும் பேச வேண்டாம். புரட்சியாளர் அம்பேத்கர் அவர்களைப் பற்றி பேசுங்கள் அல்லது அந்த நூல் உருவாக்கத்தில் இருந்த பின்னணி பற்றி பேசுங்கள் என்று வழிகாட்டு தலை தந்தேன். அதையும் மீறி அவர் பேசிய பேச்சு பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது. மேலும், விசிகவின் நம்பகத் தன்மையை நொறுக்கும் அளவுக்கு அது அமைந்து விட்டது என்று தெரிவித்துள்ளார்.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

Annamalai.. சவுக்கால் அடிப்பேன்.. திமுக ஆட்சி போகும் வரை செருப்பு போட மாட்டேன்.. அண்ணாமலை ஆவேசம்!

news

மார்கழி 12 திருவெம்பாவை பாசுரம் 12.. ஆர்த்த பிறவித்துயர் கெட நாம் ஆர்த்தாடும்!

news

மார்கழி 12 ஆண்டாளின் திருப்பாவை பாசுரம் 12.. கனைத்திளங் கற்றெருமை கன்றுக்கு இரங்கி

news

Chandrapriyanga.. மகன்களுக்கு சமையல் கற்று தரும் சந்திரபிரியங்கா.. செம்ம செம.. சூப்பர் அம்மாதான்!

news

Anna university: அண்ணா பல்கலைக்கழக சம்பவம்.. கடுமையான தண்டனை தர வேண்டும்.. கனிமொழி

news

Gold rate.. தங்கமே தங்கம்.. இப்படி வித்தா எப்படிம்மா வாங்குறது.. சவரனுக்கு ரூ. 200 அதிகரிப்பு!

news

Nallakannu: ஸ்ரீவைகுண்டம் அரசு மருத்துவமனைக்கு நல்லகண்ணு பெயர்... முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு

news

மலையாள இலக்கிய உலகின் பிதாமகர்.. எழுத்தையே சுவாசித்தவர்.. மறக்க முடியாத எம்.டி. வாசுதேவன் நாயர்

news

வலுவிழந்தத காற்றழுத்த தாழ்வு.. ஒரு வாரத்திற்கு மிதமான மழைக்கே வாய்ப்பு.. வானிலை ஆய்வு மையம் தகவல்!

அதிகம் பார்க்கும் செய்திகள்