சீமான் என்ன பாஜகவின் கொள்கை பரப்புச் செயலாளரா?.. விசிக தலைவர் திருமாவளவன் கேள்வி!

Jan 28, 2025,06:10 PM IST

சென்னை: சீமான் பேசுவதை பார்த்தால் பாஜகவின் கொள்கை பரப்புச் செயலாளரா என்ற கேள்வி எழுகிறது என விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.


சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட தொல் திருமாவளவன் இது குறித்து பத்திரிக்கையாளர்களிடம் பேசுகையில்,  இடதுசாரி இயக்கங்களின் தூண்களாக நின்றவர்கள், அம்பேத்கர் இயக்கங்களுடன் கைகோர்த்து நின்றபோது நம்பிக்கையை பெற முடிந்தது. பொதுவாக அம்பேத்கர் இயக்கங்களை ஜாதிய இயக்கங்களாக புறம்தள்ளிய காலம் உண்டு. அந்த இயக்கங்களை ஊக்குவிக்காமல் கடுமையான விமர்சனங்களை வைத்த காலங்கள் உண்டு. அதன் மூலம் அம்பேத்கர் இயக்கங்கள் தனிமை தனிமைப்பட்டு சுருங்கிப்போன வரலாறு உண்டு. 




வலது சாரி இயக்கங்கள் இடதுசாரி இயக்கங்களை அழிக்க நினைக்கிறது. தேர்தல் நடைமுறைதான் பாஜக வளர காரணமாக உள்ளது. இடதுசாரி இயக்கங்கள் அரசியல் கோட்பாடோடும், வலதுசாரி இயக்கங்கள் ஆட்சி அதிகாரத்தோடும் வலிமையாக உள்ளன. தேர்தல்  களத்தில் தலித்களை எவ்வாறு கைப்பற்றுவது என்று வலதுசாரி கைதேர்ந்து உள்ளனர். இடதுசாரி மற்றும் அம்பேத்கர் இயக்கங்களுக்கு இடையே உள்ள இடைவெளியை குறைக்க வேண்டும்.


தமிழகத்தில் ஒரு தலித் முதலமைச்சர் ஆக வேண்டும் என ஆளுநர் கூறியது தலித்துகளை அபகரிக்கும் சூழ்ச்சியாகும். சீமான் பொருத்தம் இல்லாத அரசியலை தற்போது பேசிக்கொண்டு இருக்கிறார். ஈரோடு இடைத்தேர்தலில் பாஜக வாக்குகளை பெற இந்த உத்தியை பின்பற்றுகிறாரா என என்ன தோன்றுகிறது. சீமான் பாசிச அரசியலை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறார். 


தமிழ் தேசியம் பேசிக்கொண்டு தமிழர்களுக்கு எதிராக செயல்படுகிறார். பெரியாரை விமர்சித்து பாஜக ஆதரவு வாக்குகளை பெற சீமான் முயற்சிக்கிறாரா என்று ஐயம் எழுகிறது. சீமானின் அரசியல் இனவாதத்தை நோக்கி பாசிச கூறுகளை கொண்டதாக உள்ளது. தமிழ் தேசியம் என்ற பெயரால் தமிழர்களுக்கு எதிரான அரசியலை சீமான் செய்கிறாரா என்ற கேள்வி எழுகிறது என கூறியுள்ளார்.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

Chennai Super Kings அணியில் Baby AB.. குர்ஜாப்னீத் சிங்கிற்கு பதிலாக டெவால்ட் ப்ரீவிஸ்!

news

அமித்ஷா அல்ல.. எந்த ஷா வந்தாலும்.. ஒரு கை பார்ப்போம்.. முதல்வர் மு க ஸ்டாலின் சவால்!

news

கூட்டணி அழைப்புக்கு நன்றி.. எங்கள் பயணம் எங்கள் கால்களை நம்பிதான்... கூட்டணி குறித்து சீமான் பதில்!

news

தயவு செய்து அவதூறு பரப்புவதை நிறுத்துங்க.. நடிகர் ஸ்ரீயின் குடும்பத்தினர் வேண்டுகோள்..!

news

கோடை விடுமுறையை மாணவர்கள் பயனுள்ள வகையில் கழிக்க வேண்டும்.. அமைச்சர் அன்பில் மகேஷ்..!

news

அது மட்டும் பண்ணாதீங்க...அமைச்சர்களுக்கு முதல்வர் கொடுத்த அட்வைஸ்

news

குடியரசுத் தலைவருக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட முடியுமா..? குடியரசு துணைத் தலைவர் ஜக்தீப் கேள்வி..!

news

பூஜ்ஜிய நிழல் தினம்... பொதுமக்களுக்கு அறிவியல் விழிப்புணர்வு ஏற்படுத்திய பள்ளி மாணவர்கள்!

news

குழாய் மூலம் வீடுகளுக்கு எரிவாயு வழங்கும் திட்டம்... 9 மாவட்டங்களுக்கு அனுமதி!

அதிகம் பார்க்கும் செய்திகள்