விசிக, நாம் தமிழர் மாநிலக் கட்சிகளாக அங்கீகாரம்.. திருமாவளவனுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து

Jan 11, 2025,10:10 AM IST

சென்னை: விடுதலைச் சிறுத்தைகள் மற்றும் நாம் தமிழர் கட்சி ஆகியவற்றுக்கு மாநிலக் கட்சிகளுக்கான அங்கீகாரத்தை தேர்தல் ஆணையம் வழங்கியுள்ளது. இதையடுத்து இரு கட்சியினரும் அதைக் கொண்டாடி வருகின்றனர். விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவனுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.


கடந்த மக்களவைத் தேர்தலின்போது இந்த இரு கட்சிகளும் சிறப்பான முறையில் வாக்குகளைப் பெற்றன. விடுதலைச் சிறுத்தைகள் கட்சி இரு தொகுதிகளில் (விழுப்புரம் தனி, சிதம்பரம் தனி) போட்டியிட்டு இரு தொகுதிகளிலும் வெற்றி பெற்றது. விழுப்புரத்தில் ரவிக்குமாரும், சிதம்பரத்தில் தொல் திருமாவளவனும் வெற்றி பெற்றனர். திமுக  தலைமையிலான இந்தியா கூட்டணியில் இடம் பெற்ற விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு 2.25 சதவீத வாக்குகள் கிடைத்தன. திமுக கூட்டணியில் நான்காவது பெரிய கட்சியாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சி உள்ளது. 




அதேபோல சட்டசபையிலும் பிரதிநிதித்துவத்தைக் கொண்டுள்ளது விடுதலைச் சிறுத்தைகள் கட்சி. இதையடுத்து தேர்தல் ஆணையத்தின் விதிமுறைகளை திருப்திகரமாக பூர்த்தி செய்துள்ளதால் விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு மாநிலக் கட்சிக்கான அங்கீகாரம் கிடைத்துள்ளது. மேலும் பானைச் சின்னமும் அக்கட்சிக்கு தனிச் சின்னமாக ஒதுக்கப்பட்டுள்ளது.


மறுபக்கம் நாம் தமிழர் கட்சி, அது தோற்றுவிக்கப்பட்டது முதலே தொடர்ந்து தனியாக போட்டியிட்டு ஒவ்வொரு தேர்தலிலும் தனது வாக்கு வங்கியை பலப்படுத்திக் கொண்டே வந்தது. யாருடனும் கூட்டு சேருவதில்லை என்பதை கொள்கையாகவே வைத்துள்ள சீமான் ஒவ்வொரு தேர்தலிலும் தோற்றாலும் கூட வாக்குகளை கவருவதில் முன்னேறிக் கொண்டே இருக்கிறார். அந்த வகையில் கடந்த மக்களவைத் தேர்தலில் அனைவரையும் ஆச்சரியப்படுத்தும் வகையில், 8.20 சதவீத வாக்குகளை அறுவடை செய்தது நாம் தமிழர் கட்சி. அக்கட்சிக்கு ஒரு தொகுதியிலும் வெற்றி கிடைக்காவிட்டாலும் கூட மொத்தமாக 35 லட்சத்து 60 ஆயிரத்து 485 வாக்குகள் கிடைத்தன. இது கடந்த தேர்தலை விட 4.30 சதவீத வாக்குகள் அதிகமாகும்.  தேர்தல் ஆணையத்தின் விதிப்படி தேவையான வாக்கு சதவீதத்தை நாம் தமிழர் கட்சி எட்டி விட்டதால் அக்கட்சிக்கும் தற்போது மாநிலக் கட்சி அங்கீகாரம் கிடைத்துள்ளது.


நாம் தமிழர் கட்சி முன்பு விவசாயி சின்னத்தை வைத்திருந்தது. பிறகு அது பறிக்கப்பட்டு விட்டது. மாறாக மைக் சின்னம் தரப்பட்டது. கடைசியாiக கடந்த விக்கிரவாண்டித் தேர்தலில் கூட மைக் சின்னத்தில்தான் நாம் தமிழர் கட்சி போட்டியிட்டது. இந்த நிலையில் விவசாயி அல்லது புலி சின்னத்தை வழங்குமாறு நாம் தமிழர் கட்சி கோரிக்கை வைத்திருந்தது. ஆனால் இரண்டு சின்னத்தையும் தேர்தல் ஆணையம் நிராகரித்து விட்டது. விவசாயி சின்னம் ஏற்கனவே உள்ள ஒரு சின்னத்தைப் போல உள்ளதால் அதை வழங்க முடியாது என்றும், புலி உயிருடன் உள்ள விலங்கு என்பதால் அதையும் வழங்க முடியாது என்றும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. வேறு புதிய சின்னத்தைத் தேர்வு செய்து தெரிவிக்குமாறும் அது நாம் தமிழர் கட்சிக்கு அறிவுறுத்தியுள்ளது. இதனால், தனது கட்சிக்கு அங்கீகாரம் கிடைக்க உதவிய மைக் சின்னத்தையே சீமான் தேர்வு செய்வாரா  அல்லது வேறு புதிய சின்னத்தை முடிவு செய்வாரா என்பது எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.


திருமாவளவனுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து


இதற்கிடையே, மாநிலக் கட்சி அந்தஸ்தை எட்டியுள்ள விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் போட்டுள்ள எக்ஸ் தள பதிவில், விதலைச் சிறுத்தைகள் கட்சியை அங்கீகரிக்கப்பட்ட மாநிலக் கட்சியாகத் தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருப்பதை அறிந்து மகிழ்கிறேன். 


அன்புச் சகோதரர் தொல்.திருமாவளவன் அவர்களின் உழைப்புக்குக் கிடைத்த அங்கீகாரமாக இதை எண்ணிப் பாராட்டுகிறேன் என்று முதல்வர் பாராட்டியுள்ளார்.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

தேர்தலுக்கு முன்னும் பின்னும் மக்களை ஏமாற்ற வேண்டும் என்பதே ஆட்சியாளர் எண்ணம்: தவெக தலைவர் விஜய்

news

சென்னை அயலகத் தமிழர் நாள் விழாவில்.. வடஅமெரிக்க தமிழ் எழுத்தாளர் மன்றத்தின் புத்தக கண்காட்சி

news

7வது முறையாக திமுக ஆட்சி அமையும்.. ஏற்றம் காணும் அரசாக அது இருக்கும்.. முதல்வர் மு.க.ஸ்டாலின்

news

ரியாஸ்கானின் தாயாரும்.. உமா ரியாஸின் மாமியாருமான.. ரஷிதா பானு காலமானார்!

news

தமிழ் தேசிய அரசியலின் முதல் அங்கீகாரம்.. நாம் தமிழர் கட்சியும், சீமானும் சாதித்தது எப்படி?

news

விழுந்து விழுந்து அடிபட்டாலும்.. தளராமல் எழுந்து வந்து.. எழுச்சி பெற்ற விடுதலைச் சிறுத்தைகள்!

news

டங்ஸ்டன் திட்டம் வேண்டாம்.. மேலூர் மைந்தனாக என் மனசு படாதபாடு படுகிறது.. நடிகர் ராமராஜன் உருக்கம்

news

ஈரோடு கிழக்கில் திமுகவே போட்டியிடுகிறது.. வி.சி. சந்திரகுமார் வேட்பாளர்..முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு

news

விசிக, நாம் தமிழர் மாநிலக் கட்சிகளாக அங்கீகாரம்.. திருமாவளவனுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து

அதிகம் பார்க்கும் செய்திகள்