வயநாடு தொகுதியில் போட்டியிடும்.. ராகுல் காந்திக்கு எவ்வளவு சொத்து இருக்கு தெரியுமா..?

Apr 04, 2024,05:08 PM IST

வயநாடு: காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி வேட்பு மனு தாக்கலுடன் தாக்கல் செய்துள்ள அபிடவிட்டில் ரூ. 20 கோடி மதிப்பிலான சொத்து விவரங்களையும் தெரிவித்துள்ளார்.


கேரளாவில் உள்ள  20 தொகுதிகளுக்கும் லோக்சபா தேர்தல் வரும் ஏப்ரல் 26 ஆம் தேதி நடைபெறுகிறது.  கடந்த 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற லோக்சபா தேர்தலில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கேரளாவில் உள்ள வயநாடு தொகுதியில் போட்டியிட்டு மகத்தான வெற்றி பெற்றார். மீண்டும் அதே தொகுதியில் ராகுல் காந்தி போட்டியிடுகிறார்.


கேரளாவில் காங்கிரஸ் கட்சி 16 தொகுதிகளில் போட்டியிடுகிறது.  நான்கு தொகுதிகளை அதன் கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கியுள்ளது. வயநாட்டில் போட்டியிடும் ராகுல் காந்தி தனது வேட்புமனுவை  நேற்று தாக்கல் செய்தார். இவருடன் உ.பி மேற்கு காங்கிரஸ் பொதுச் செயலாளரும் ராகுல் காந்தியின் சகோதரியுமான பிரியங்கா காந்தியும் உடன் இருந்தார். அப்போது அவர்களுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.




ராகுல் காந்தி தன்னிடம், ரூ. 20 கோடி மதிப்பிலான சொத்துக்கள் இருப்பதாக தெரிவித்துள்ளார்.  தன்னிடம் சொந்தமாக எந்த வாகனமும் இல்லை என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். வருமான, சேமிப்பு, முதலீடுகள் என மொத்தம் ரூபாய் 9.24 கோடி மதிப்பிலான அசையும் சொத்துக்கள் அவரிடம் உள்ளன. ராகுல் காந்தியின் ரொக்கக் கையிருப்பு ரூ. 55,000 ஆகும். வங்கியில் உள்ள ரொக்க இருப்பு ரூ. 26.25 லட்சமாகும். ஷேர்கள் உள்ளிட்டவை மூலம் ரூ. 4.33 கோடி வைத்துள்ளார்.  ராகுல் காந்தியிடம் ரூ. 4.20 லட்சம் மதிப்பிலான நகைககள் உள்ளன. 


டெல்லியில் விவசாய நிலம், அலுவலகம், உள்ளிட்ட ரூ. 11 கோடி மதிப்பிலான அசையா சொத்துக்கள் ராகுல் காந்தியிடம் உள்ளன. டெல்லி மேஹ்ராலி பகுதியில் உள்ள நிலமானது, பிரியங்கா காந்தியை இணை உரிமையாளாரக் கொண்டதாகும். ஹரியானா மாநிலம் குருகிராமில் ராகுல் காந்திக்கு ரூ. 9 கோடி மதிப்பிலான அலுவலகம் உள்ளது. கடந்த 2019 ஆம் ஆண்டின் படி அவருடைய மொத்த சொத்து மதிப்பு ரூபாய் 15 .89 கோடி என்பது குறிப்பிடத்தக்கது.


ராகுல் காந்தி எதிர்த்து அதே தொகுதியில் போட்டியிடும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் ஆனி ராஜாவுக்கு மொத்தம் ரூபாய் 72 லட்சம் மதிப்பிலான சொத்துக்கள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகள்

news

ஒரே நாடு ஒரே தேர்தல் சாத்தியமற்றது.. கூட்டாட்சி தத்துவத்தை சிதைக்கும்.. முதல்வர் மு.க.ஸ்டாலின்

news

மகாத்மா காந்தி பிறந்த மாதத்தில்.. புதிய மதுபானக் கொள்கையை அறிமுகப்படுத்தும் ஆந்திர அரசு!

news

ஐபிஎல் 2025 வருது வருது.. நவம்பரில் வீரர்கள் ஏலம்.. துபாயா, தோஹாவா இல்லாட்டி அபுதாபியா?

news

பெண் உதவியாளரை நாசப்படுத்தியதாக.. அரபி குத்து, காவாலா பாடல் புகழ் ஜானி மாஸ்டர் கைது!

news

சபாஷ் பாஸ்கர்.. மாற்றுத் திறனாளி பயணியிடம் காட்டிய கனிவு.. வேற லெவல் மாற்றத்தில் சென்னை எம்டிசி!

news

வங்கதேசத்துடன் கிரிக்கெட் போட்டி கூடாது.. சென்னையில் போராட்டத்தில் குதித்த இந்து மக்கள் கட்சி

news

என்ன தலைவா.. கடைசியில நீயும் அரசியல்வாதி ஆகிட்டியே?.. விஜய் போட்ட டிவீட்.. கதறும் கட்சிகள்!

news

அதீத பணிச்சுமை.. வீடு திரும்பிய இளம் பெண்.. படுக்கையில் சரிந்து பரிதாப மரணம்!

news

நவராத்திரி விற்பனை கண்காட்சி.. சென்னையில்.. செப்டம்பர் 21 முதல் கோலாகல தொடக்கம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்