நடிகை வரலட்சுமி மிரட்டும்.. பான் இந்தியா திரில்லர்.. சபரி.. மே 3ஆம் தேதி வெளியீடு..!

Apr 16, 2024,03:35 PM IST

சென்னை: இயக்குனர் அனில் கட்ஸ் இயக்கத்தில், நடிகை வரலட்சுமி சரத்குமார் நடித்த சபரி திரைப்படம் வரும் 2024, மே 3 ஆம் தேதியன்று பான் இந்தியா படமாக உலகம் முழுவதும் ரிலீஸ் ஆக தயாராக உள்ளதாம்.


மகா மூவிஸ் தயாரிப்பில், நடிகை வரலட்சுமி சரத்குமார் நடிக்கும் சபரி திரைப்படத்தை  அனில் கட்ஸ்  இயக்கியுள்ளார். இப்படத்தின் மூலம் இவர் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகியுள்ளார்.இவர் இப்படத்தின் கதை, திரைக்கதை, வசனம், ஆகியவற்றையும் கையாண்டுள்ளார். கோபி சுந்தர் இசையமைத்துள்ளார். 




எமோஷனல் மற்றும் பல திரில்லிங்கான தருணங்களைக் கொண்ட இப்படம் சைக்காலஜிக்கல் திரில்லர் ஜானரில் உருவாக்கப்பட்டுள்ளதாம். இதில் வரலட்சுமி சரத்குமார் கதாநாயகியாக நடித்து, அதிரடி ஆக்சன் காட்சிகளில் அசத்தியுள்ளாராம். மேலும் கணேஷ் வெங்கட்ராம், ஷஷாங்க், மைம் கோபி, சுனைனா, ராஜஸ்ரீ நாயர், மதுநந்தன், ரஷிகா பாலி, விவா ராகவா, பிரபு, பத்திரம், கிருஷ்ண தேஜா, பிந்து பகிடிமரி, போன்ற பல கலைஞர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இவர்களுடன் அஷ்ரிதா வேமுகந்தி, ஷர்ஷினி கொடுகு, அர்ச்சனா ஆனந்த், பிரமோதினி,  நிவேஷா, பேபி கிருத்திகா, மற்றும் பலர் நடித்துள்ளனர்.




வரலட்சுமி நடிப்பில் திர்லராக உருவாகியுள்ள சபரி திரைப்படம் வரும் மே 3ஆம் தேதி உலகம் முழுவதும் வெளிவர தயாராக உள்ளதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர். மேலும் இப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளில் ஒரே நேரத்தில் வெளியாக உள்ளதாம்.

சமீபத்திய செய்திகள்

news

தமிழ்நாட்டில் இன்றும் .. 17 மாவட்டங்களில்‌.. கன மழைக்கு வாய்ப்பு.. சென்னை வானிலை ஆய்வு மையம்!

news

உங்கள் வாழ்வில் இருந்து ஒருவரை நீக்கும்போது.. அதன் மதிப்பை உடனடியாக அறிய மாட்டீர்கள்.. செல்வராகவன்!

news

12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் ஏப்ரல் 04, 2025...யாருக்கு என்ன பலன் காத்திருக்கு?

news

எஸ்ஐ பணியில் சேர ஆசையா?.. தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் வெளியிட்ட சூப்பர் அப்டேட்!

news

இறுதி கட்டத்தில் பாஜக, அதிமுக பேச்சுவார்த்தை.. ஏப்., 6ல் பிரதமரை சந்திக்கிறார் எடப்பாடி பழனிச்சாமி

news

கார்ல் மார்க்ஸ் திருவுருவச் சிலை அமைக்கும் அரசின் முடிவு வரவேற்கத்தக்கது: டாக்டர் ராமதாஸ் வரவேற்பு!

news

சென்னை மெட்ரோ பணிகளை.. டில்லி மெட்ரோ நிறுவனத்திடம் ஒப்படைப்பது சமூக அநீதி: டாக்டர். ராமதாஸ்!

news

தமிழ்நாட்டில்..17 மாவட்டங்களில்.. இன்றும், நாளையும் கனமழைக்கு வாய்ப்பு..!

news

அண்ணன் ராம்குமாருக்கு உதவ முடியாது .. கைவிரித்த நடிகர் பிரபு!

அதிகம் பார்க்கும் செய்திகள்