"என்னால முடியலைங்க".. கொதிக்கும் நெட்டிசன்ஸ்.. வைரலான வனிதாவின் போட்டோஷூட்!

Feb 01, 2023,02:20 PM IST
சென்னை: "ஏங்க.. இது உங்களுக்கே நியாயமா இருக்கா?" .. என்று குமுறிக் கொண்டுள்ளனர் நெட்டிசன்ஸ்.. ஏன் இந்தக் குமுறல்.. நடிகை வனிதா விஜயகுமாரின் லேட்டஸ்ட் போட்டோஷூட்டைப் பார்த்துதான் இப்படிக் குமுறிக் கொண்டுள்ளனர்.


சலசலப்புகளுக்கும், பரபரப்புகளுக்கும் பெயர் போனவர் நடிகை வனிதா விஜயகுமார். வாயைத் திறந்தாலே வாய்க்கா தகராறு.. கருத்து சொன்னாலே கலவரம் என்ற ரேஞ்சுக்கு அவரது அன்றாட வாழ்க்கை ஓடிக்கொண்டிருக்கிறது. நாட்டாமை கதாபாத்திரத்தில், ஒரிஜினல் நாட்டாமையையே ஓவர் டேக் செய்யும் அளவிற்கு நடிப்பில் பின்னிப்பெடலெடுக்கும் நடிகர் விஜயகுமாரின் மகள் தான் வனிதா விஜயகுமார்.

நடிகர் விஜய் நடிப்பில் வெளியான 'சந்திரலேகா' திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமான வனிதா, தற்போது வரை தமிழில் பத்துக்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.

பெற்றோருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணத்தால் குடும்பத்தை விட்டு தனியாக வாழ்ந்து வரும் வனிதாவுக்கு இரண்டு பெண் குழந்தை மற்றும் ஒரு ஆண் குழந்தை உள்ளது. இதில், இரண்டு பெண் குழந்தைகளுடன் மட்டும் வனிதா தனியாக வாழ்ந்து வருகிறார்.

2019ம் ஆண்டு விஜய் டிவியில் ஒளிபரப்பப்பட்ட பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் போட்டியாளராக களம் இறங்கினர் வனிதா. ஆரம்பத்தில் விறுவிறுப்பு இல்லாமல் ஈ அடித்த பிக் பாஸ் நிகழ்ச்சி, வனிதாவின் ஆட்டத்தால் சூடு பிடித்தது.



பிக் பாஸ் வீட்டுக்குள் இருக்கும் போட்டியாளர்கள் வனிதாவை எலிமிட்டே செய்வதற்காக நாமினேட் செய்தார்களோ இல்லையோ, பிக் பாஸ் விரும்பிகள் "முதல்ல இவங்கள எலிமினேட் செய்யுங்கப்பா! என கதறினர்.  அந்த அளவுக்கு அதகளம் செய்தவர் வனிதா. ஹேட்டர்ஸ் ஒரு பக்கம் குவிந்து கிடந்தாலும், அவரது "கெத்து"அதிரடிக்கு ரசிகர்களும் உருவானார்கள்.. வனிதா ஆர்மியும்  உருவானது தான் சிறப்பம்சம்.   

பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியே வந்த வனிதாவுக்கு பலரும் ஆதரவு கொடுத்தனர். படங்களில் நடித்து கிடைக்காத புகழ், பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் கிடைத்தது. பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின் டிவி நிகழ்ச்சிகளில் நடிக்கவும், படங்களில் நடிக்கவும் வாய்ப்பு கிடைத்தது.

பிஸியாக வலம் வந்த வனிதா, பீட்டர் பால் என்பவரை மூன்றாவதாக காதல் திருமணம் செய்து அதிரடி காட்டினார். ஆனால் மிக வேகமாக அவரை விட்டுப் பிரிந்தும் கலக்கினார்.  பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் நெட்டிசன்களை ஓவர் டைம் பார்க்கவைத்த வனிதாவின் திருமணம் விவாகரத்தில் முடிந்ததால் இணையத்தில் பேசுபொருளானார்.

இப்படியாக கன்டென்ட் இல்லாமல் தவிக்கும் நெட்டிசன்களுக்கு கன்டென்டை தேடித் தேடி ஓடி வந்து கொடுக்கும் வனிதா, அவ்வப்போது போட்டோஷூட் செய்து இன்ஸ்டாகிராம் மற்றும் ட்விட்டரில் போஸ்ட் செய்வது வழக்கம்.

எப்படித்தான் அழகாக மேக் அப் செய்து போட்டோஷூட் செய்தாலும் "..ப்பா".. என நெட்டிசன்கள் கலாய்ப்பது வழக்கம். ஆனால், இம்முறை வனிதா போஸ்ட் செய்துள்ள புகைப்படம் நெட்டிசன்களையே வாயடைக்க செய்துள்ளது. வனிதாவா இது என்று வியந்து வியந்து பார்த்து வருகின்றனர்.

வெள்ளை தலை முடியுடன், காதில் மீன் ஜிமிக்கி அனிந்துகொண்டு, மேக் அப் தூக்கலாக என்று விதம் விதமாக, கலர்கலராக போட்டோஷூட் செய்து புகைப்படத்தை சரமாரியாக ஷேர் செய்துள்ளார். இவற்றுக்கு கலவையாக கமெண்ட்டுகள் குவிந்து வருகின்றன. "உங்களுக்கு மனசாட்சி இருக்கா இல்லையா.. ,  இது உங்களுக்கே ஞாயமா இருக்கா?, என்னால முடியலைங்க!,  என வனிதாவின் புகைப்படத்திற்கு கண்டபடி கமெண்ட் செய்து வருகின்றனர். 

சில நாட்களாக இணையத்தில் வனிதாவின் பெயர் அடிபடாமல் இருந்த நிலையில் தற்போது இவரின் போட்டோஷூட் ஒரு பேசுபொருளாகி, இணையத்தளத்தில் வைரலாகி வருகிறது.

நெட்டிசன்களை விடுங்க.. வனிதாவின் இந்த மேக் அப் பத்தி நீங்க என்ன நினைக்கிறிங்க என்பதை கமெண்ட் செய்யுங்கள்!

சமீபத்திய செய்திகள்

news

வந்தாச்சு அறிவிப்பு.. விக்கிரவாண்டியில் அக். 27ல் முதல் மாநில மாநாடு.. புதிய பாதை அமைப்போம்.. விஜய்

news

செப்டம்பர் 20 - இன்றைய நல்ல நேரம், செய்ய வேண்டிய வழிபாடு

news

மீன ராசிக்காரர்களே.. வேகத்தை குறைத்து விவேகமாக செயல்பட வேண்டிய காலம்

news

ஒரே நாடு ஒரே தேர்தல் சாத்தியமற்றது.. கூட்டாட்சி தத்துவத்தை சிதைக்கும்.. முதல்வர் மு.க.ஸ்டாலின்

news

மகாத்மா காந்தி பிறந்த மாதத்தில்.. புதிய மதுபானக் கொள்கையை அறிமுகப்படுத்தும் ஆந்திர அரசு!

news

ஐபிஎல் 2025 வருது வருது.. நவம்பரில் வீரர்கள் ஏலம்.. துபாயா, தோஹாவா இல்லாட்டி அபுதாபியா?

news

பெண் உதவியாளரை நாசப்படுத்தியதாக.. அரபி குத்து, காவாலா பாடல் புகழ் ஜானி மாஸ்டர் கைது!

news

சபாஷ் பாஸ்கர்.. மாற்றுத் திறனாளி பயணியிடம் காட்டிய கனிவு.. வேற லெவல் மாற்றத்தில் சென்னை எம்டிசி!

news

வங்கதேசத்துடன் கிரிக்கெட் போட்டி கூடாது.. சென்னையில் போராட்டத்தில் குதித்த இந்து மக்கள் கட்சி

அதிகம் பார்க்கும் செய்திகள்